Advertisment

பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-48

என் வாழ்க்கை, என் குழந்தைகள் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள். -நந்தினி, வேலூர்.

Advertisment

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு உச்சம்பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் 7-ல் ராகு, 8-ல் சனி இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 7-ல் ராகு இருந்தாலும் பாவகரீதியாக 8-ல் ராகு உள்ளார். சனி, ராகு 8-ல் இருப்பது கணவர்வழி உறவினர்களிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய அமைப்பாகும். பெண்களுக்கு களத்திரகாரகன் எனக்கூறக்கூடிய செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் கேது சேர்க்கைப் பெற்றிருப்பது குடும்ப வாழ்வில் சில பிரச்சினை களை ஏற்படுத் தும் அமைப்பா கும். என்ன ஒரு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் செவ்வாய் பரிவர்த்தனை பெற்று இருப்ப தால் திருமண

என் வாழ்க்கை, என் குழந்தைகள் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள். -நந்தினி, வேலூர்.

Advertisment

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு உச்சம்பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் 7-ல் ராகு, 8-ல் சனி இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 7-ல் ராகு இருந்தாலும் பாவகரீதியாக 8-ல் ராகு உள்ளார். சனி, ராகு 8-ல் இருப்பது கணவர்வழி உறவினர்களிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய அமைப்பாகும். பெண்களுக்கு களத்திரகாரகன் எனக்கூறக்கூடிய செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் கேது சேர்க்கைப் பெற்றிருப்பது குடும்ப வாழ்வில் சில பிரச்சினை களை ஏற்படுத் தும் அமைப்பா கும். என்ன ஒரு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் செவ்வாய் பரிவர்த்தனை பெற்று இருப்ப தால் திருமணம் அமைந்தபிறகு வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றங்கள் ஏற்பட்டு அதன் மூலம் அமைதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும். புத்திர காரகன் குரு உச்சம்பெற்று பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் இருக்கும். தற்போது சுக்கிர திசை 23-4-2037 முடிய நடப்பதால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

aa

நானும் என் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா? நிம்மதியான வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிட்டுமா? அல்லது விவாகரத்து நடக்குமா, நடந்தால் எனக்கு மறுமணம் உண்டா? -சங்கீதா, தஞ்சாவூர்.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி திரிகோண ஸ்தானமான 5-லிருந்து 7-ஆம் வீட்டை பார்ப்பது சாதகமான அமைப்பாகும். செவ்வாய் 6-ல் இருந்தாலும் குருவின் வீட் டில் இருப்பது நற்பலனை தரும் அமைப்புதான். தற்போது உங்கள் ஜாதக ரீதியாக சுக்கிர தசையில் 7-ஆம் அதிபதி சனி புக்தி நடப்பதால் ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தைவிட கணவர் ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமற்று இருந்தால்கூட இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தற்போது சனி புக்தி நடப்பதால் பொறுமைக் காக்கவும். கண்டிப்பாக சில மாற்றங்கள் ஏற்படும். புத்திரகாரகன் குரு வக்ரகதியில் இருப்பது, 5-ல் சனி இருப்பது புத்திரதோஷம் ஆகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கட்டும். செவ்வாய் 6-ல் இருப்பதால் வாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றால் ஒற்றுமையுடன் வாழமுடியும். கால பைரவரை வழிபாடு செய்யவும்; நல்லது நடக்கும்.

நான் பங்குச்சந்தை சுயமாக செய்துவருகிறேன். எனக்கு வேலை எதுவும் அமையவில்லை. அரசு வேலைக்காக பல போட்டித் தேர்வு எழுதினேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம், குழந்தை பாக்கியம் உண்டா? என் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும்? ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்? -கார்த்திக், பொன்னேரி.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு புதன் ஆட்சி பெற்று இருப்பதாலும் புதன் வீட்டில் சனி, குரு இருந்து சனி தசை நடப்பதாலும் பங்குச்சந்தையில் நாட்டம், பங்குச் சந்தை தொடர்பான செயல்கள் செய்து மற்றவர்களுக்கு வழி காட்டக்கூடிய அமைப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி செவ்வாய்- சூரியன், சந்திரன் சேர்க்கைப்பெற்று 11-ஆம் வீட்டில் அமையப்பெற்று அதனை குரு பார்ப்பதன்மூலமாக அரசு, அரசாங்கவழியில் ஒருசில அனு கூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கடந்த காலங்களில் 3-ஆவது தசையான குரு தசை நடந்ததும் நல்லதல்ல. தற்போது 4-ல் இருக் கக்கூடிய சனி தசை நடப்பதால் அதுவும் சுயபுக்தி முடிந்து புதன் புக்தி நடப்பதால் குரு மாற்றத் திற்குப் பிறகு வாழ்வில் பல நல்லது நடக்கும். உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்ப தால் திருமண விஷயத்தில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது திருமண முயற்சிகள் மேற்கொண்டால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத் தில் புத்திரகாரகன் குரு- சனி சேர்க்கை பெற்றிருப்பது புத்திர தோஷமாகும். குலதெய்வத்தை வழிபாடு செய்யவும். அதன் மூலம் ஒருசில நல்லது நடக்கும். தற்போது சனி தசை நடப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்களின் தொடர்பு கள் மூலம் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

bala030524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe