Advertisment

பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-42

எனது மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? -தணிகாசலம், கள்ளக்குறிச்சி.

Advertisment

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி குரு வக்ரகதியில் கேது நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருப்பதும், பெண்களுக்கு களத்திரக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய்- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று வக்ரகதியில் இருப்பதும், ராசிக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பதும் திருமணம் நடைபெற இடையூறை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் கிரகங்கள் வக்ரம் பெற்றிருந்தால் சரியான வயதில் திருமணம் நடைபெற இடையூறுகள், முறைப்படி திருமணம் நடைபெற தடங்கல் கள் உண்டாகலாம். வேற்று ஜாதி நபர், உறவில்லாமல் அந்நியத்தில் இருக்கக்கூடிய வரன், திருமண வாழ்க்கைரீதியாக ஏதாவது வகையில் பாதிக்கப்பட்ட வரன் போன்றவர்மூலம் அனுகூல பலனை தரலாம். தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடப்பதால் 16-4-2024 பிறகு புதன் புக்தி வருகின்றபொழுது நான் மேற்கூறியவாறு முயற்சித்தால் நல்லது நடக்கலாம். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

Advertisment

எனக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டே உள்ளது. எப்போது திருமணம் நடைபெறும்? -மகேஷ், கள்ளக்குறிச்சி.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் வக்ரகதியில் இருப்பது இடையூறை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். கடக ராசியில் பிறந்த உங்களுக்கு வரும் மே 1-ஆம் தேதிக்குமேல் குரு 11-ல் இருக்கும் தருணத்தில் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதாலும் பாரம்பரியத்தை குறிக்கக்கூடிய கிரகமான குரு- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் 5-ல் கேது இருப்பதாலும் உறவில்லாமல் அந்நியத்தில் ஒரு புது இடத்தில் வரன் பார்ப்பது நற்பலனை தரும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

s

நான் தையல் தொழில் செய்துவருகிறேன். சமீப காலமாக பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். வரும் நாட்களில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா? -அரசப்பன், வடலூர்.

பதில் பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் கேது தசை நடப்பதாலும் பொருளாதாரத் தேக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக ஏழரைச்சனி நடைபெற்றால் பெரிய அனுகூலங்கள் ஏற்பட இடையூறுகள் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றிருப்பது, சனி- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று இருப்பதெல்லாம் சிறப்பான அமைப்பு தான். படிப்படியான வளர்ச்சிகளை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது கேது தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும். ஏழரைச்சனி நடப்பதால் சனிபகவானுக்கு தொடர்ந்து வழிபாடுகள் மேற்கொள்ளவும். படிப்படியான வளர்ச்சிகளை அடையமுடியும்.

எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? 2-ல் கேது இருப்பது, குரு 7-ஆமிடத்தை பார்ப்பது, சுக்கிரன், சனி லக்னத்தை பார்ப்பது பலன்கள் எவ்வாறு இருக்கும்? -ராகேஷ், மதுரை.

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ராசி கட்டத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு 7-ல் சனி இருந்தாலும் பாவக சக்கரத்தில் 3-ல் கேது 8-ல் சனி 9-ல் ராகு உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் சனியுடன் இணைந்து இருப்ப தாலும், பாரம்பரியத்தை குறிக்கக்கூடிய கிரகமும், 7-ஆம் அதிபதியுமான குரு வக்ரகதியில் ராகு சாரம் பெற்றிருப்பதாலும், தந்தைக்காரகன் சூரியன் ராகு நட்சத்திரத்தில் அமைந்திருப்பதாலும் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது சுக்கிர தசையில் குரு புத்தி 18-7-2024 முடிய நடப்பதால் விரைவில் ஒரு நல்லது நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உறவில் வரன் பார்க்காமல் வேற்று ஜாதி பெண்ணை திருமணத்திற்காக பார்த்தால் குறிப்பாக அந்நியத்தில் வரன் பார்த்தால் நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

என் திருமணம் எப்போது நடக்கும்? வருங்கால மனைவி பற்றி சொல்லுங்கள். -கார்த்திக், கோவை.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் வீட்டை சனி பார்ப்பதால் திருமணம் தாமதமாகி கொண்டிருக்கிறது. தற்போது சனி தசையில் சுக்கிர புத்தி 6-1-2026 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு 5, 7-க்கு அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமண விஷயமாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் முத-ல் ஒரு தடை, தடைக்குப் பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது களத்திரகாரகன் சுக்கிர புக்தி நடப்பதால் தீவிரமாக முயற்சிக்கவும்; விரைவில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் 30 வயது கடந்துவிட்டதாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நான் கஷ்டத்தில் உள்ளேன். என் வேலையில் எப்போது முன்னேற்றம் ஏற்படும்? -சரவணன், விருத்தாச்சலம்.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குருவும், லக்னாதிபதி புதனும் பரிவர்த்தனை பெற்றிருக்கும்பொழுது பிறந்துள்ளீர்கள். 10-ஆம் அதிபதி பரிவர்த் தனை பெற்றிருந்தால் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றங்கள் தொழில்ரீதியாகவோ, வசிப்பிடம்ரீதியாகவோ ஒரு மாற்றம் ஏற்பட்டு அதன்பிறகு வளர்ச்சி உண்டு. பிறக்கின்றபோது உங்கள் ஜாதகத்தில் லக்னத் திற்கு 8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, சுக்கிரன் இருந்தாலும் பாவகரீதியாக ராகு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 9-ல் இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கின்றபொழுது 8-ல் இருக்கக்கூடிய ராகு தசை உங்களுக்கு முன்னேற்றத்தை தராது என ஒரு கருத்தை கூறிவிடுவார்கள். பாவகரீதியாக ராகு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள், பிறந்த ஊரைவிட்டு வெளியூர் சென்றால் அதன்மூலம் வளர்ச்சி ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. தற்போது பரிவர்த்தனை பெற்ற புதன் புக்தி குரு தசையில் 25-8-2025 முடிய நடப்பதால் ஒரு வெளியூர் தொடர்புகொண்ட பணியில் முயற்சிக்கவும். வாழ்வில் முன்னேற் றம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, உக்கிர தெய்வங்களை மனசார நினைப் பது, ராகுகால பூஜையில் கலந்து கொள்வது நன்மை தரும்.

bala220324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe