பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-4

ப் கேள்வி: என் தந்தை யின் பென்ஷன் பணம் எனக்கு கிடைக்குமா? எப்போது கிடைக்கும், பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கூறுங்கள்? -சுபாஷினி, திருச்சி

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் கேது புக்தி 19-5-2024 வரை நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உச்சம்பெற்று இருப்பது சிறப்பு என்பதால் தந்தை தொடர்பாக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனி கடந்த 17-1-2023-ல் முடிந்திருப்ப தும், 5-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்புதான். இருந்தாலும் தற்போது கேது புக்தி நடப்பதால் 2024 மே மாதத்திற்குப்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

ப் கேள்வி: என் கணவருக்கு நிரந்திர வேலையோ, வருமானமோ இதுவரை அமையவில்லை. தற்போது நடக்கும் குரு தசை, அடுத்துவரும் சனி தசையில் யோக பலன்களுக்கு வாய்ப்பிருக்கிறதா, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா, என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -மல்லிகா அன்பழகன்.

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு 10-ஆம் அதிபதி வக்ரம்பெற்ற காரணத்தால் ஒரு நிலையான வேலை வருமானம் ஏற்பட இடையூறுகள் ஏற்பட்டது. கணவரின் ஜாதகத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து லாப ஸ்தானத் தில் இருப்பது நல

ப் கேள்வி: என் தந்தை யின் பென்ஷன் பணம் எனக்கு கிடைக்குமா? எப்போது கிடைக்கும், பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கூறுங்கள்? -சுபாஷினி, திருச்சி

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் கேது புக்தி 19-5-2024 வரை நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உச்சம்பெற்று இருப்பது சிறப்பு என்பதால் தந்தை தொடர்பாக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனி கடந்த 17-1-2023-ல் முடிந்திருப்ப தும், 5-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்புதான். இருந்தாலும் தற்போது கேது புக்தி நடப்பதால் 2024 மே மாதத்திற்குப்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

ப் கேள்வி: என் கணவருக்கு நிரந்திர வேலையோ, வருமானமோ இதுவரை அமையவில்லை. தற்போது நடக்கும் குரு தசை, அடுத்துவரும் சனி தசையில் யோக பலன்களுக்கு வாய்ப்பிருக்கிறதா, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உண்டா, என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -மல்லிகா அன்பழகன்.

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு 10-ஆம் அதிபதி வக்ரம்பெற்ற காரணத்தால் ஒரு நிலையான வேலை வருமானம் ஏற்பட இடையூறுகள் ஏற்பட்டது. கணவரின் ஜாதகத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து லாப ஸ்தானத் தில் இருப்பது நல்ல அமைப்புதான். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதில் வல்லவ ராக இருப்பார். தற்போது குரு தசை நடப்பதால் பொதுநலப் பணி களில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. சூரியன் வீட்டில் ராகு இருப்பது பிதுர்வழியில் தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். வாழ்வில் வளமான பலன்களைபெற குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

aa

ப் கேள்வி: எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த கஷ்டம் எப்போது தீரும் என்று கூறுங்கள்? -அனந்தகிரி, மயிலாடுதுறை.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 5-ல் உள்ள சுக்கிர தசையில் குரு புக்தி 6-8-2025 வரை நடக்கிறது. இதற்குமுன்பு 6-ல் அமையப்பெற்ற ராகு புக்தி நடந்த காலத்தில் கடன்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போது குரு புக்தி நடப்பதாலும் கோட்சாரத்தில் குரு 2-ல் இருப்பதாலும் படிப்படியாக கடன்கள் குறையும். உங்கள் ஜாதகத்தில் ஜெனன காலத்தில் சனி வக்ரகதி இருப்பதால் அடுத்தடுத்து கடன்கள் வாங்கின்றபொழுது உங்கள் பேரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பேரில் வாங்குவது, கடன் வாங்கும் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி வக்ரகதியில் இருந்தாலும் சனி பல இழந்து இருந்தாலும் வாங்கிய கடனை அடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சனிபகவானுக்கு பரிகாரங்கள் மேற்கொள்வதன்மூலமாக கடன்கள் சற்று குறையும்.

ப் கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும், அரசாங்க வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -பிரியா, மேட்டூர்

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் லக்ன கேந்திரம் பெற்றது 6, 8 ஆகிய வீடுகளை குரு பார்ப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு குரு தசையில் கேது புக்தி 24-9-2023 வரை நடக்கிறது. அடுத்து வரக்கூடிய சுக்கிர புக்தியில் அதாவது செப்டம்பர் 2023-க்குப்பிறகு சிறப்பான மணவாழ்க்கை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 9-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக நல்ல வேலை கிடைக் கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதன் ஆட்சி உச்சம் பெற்று இருப் பதாலும், சூரியன் ஆட்சி பெற்று இருப்ப தாலும், தற்போது குரு தசை நடப்பதாலும் கல்வித்துறை, வங்கித்துறையில் வேலைக்காக முயற்சி செய்யவும், நல்லவாய்ப்புகள் பிறந்த ஊரைவிட வெளியூரில் கிடைக்கும்.

ப் கேள்வி: நான் சிறுநீரக பிரச்சினைக்காக தற்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றேன். என் ஜாதகத்தை பார்த்தபொழுது எனக்கு ஆயுள் குறைவு என்று சொல்கிறார்கள். இது உண்மையா? என் நோய் தீருமா என்று கூறுங்கள்? -சுப்பிரமணியன், திண்டுகல்

பதில்: விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் குரு சனி வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். பொதுவாக கிரகங்கள வக்ரநிலையில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும், ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. தற்போது நடக்கக்கூடிய சுக்கிர தசையில் கடந்த காலங்களில் குரு புக்தி, சனி புக்தி நடந்த காலங்கள் மிகவும் இக்கட்டான காலமாக இருந்திருக்கும். தற்போது புதன் புக்தி 20-4-2024 வரை நடப்பது சற்று சாதகமான அமைப்பு ஆகும். அடுத்து கேது புக்தி வருகின்றபொழுது ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இறை வழிபாடுகள் மேற்கொள்ள வும். ஆரோக்கி யம் முன்னேற் றம் ஏற்பட்டு நல்லது நடக்கட் டும்.

கேள்வி: என் கணவர் தற்போது ஆரோக்கிய பிரச்சினைகளில் உள்ளார். அவருடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்?

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி 1-1-2024 முடிய நடக்கிறது. சனி- ராகு சேர்க்கைப்பெற்று சனி பகை வீடான சூரியன் வீட்டிலிருந்து சனி புக்தி நடப்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது. சனி ராகு சிம்மத்தில் இருப்பது பிதுர் வழியில் தோஷம் ஆகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும் தற்போது இருக்கக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் 1-1-2024 ஜனவரிக்குப்பிறகு குறைந்து ஆரோக்கியத் தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -சந்தான கிருஷ்ணன், திருச்சி.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 3-ல் இருப்பதும், சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதும் நல்ல அமைப்பு என்றாலும் உங்கள் ஜாதகத்தில் ராசி சக்கரத்திலும் சூரியன்- சுக்கிரன் சேர்க்கை பெற்று நவாம்சத்திலும் சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று உள்ளது. சுக்கிரன் அஸ்தங் கம் பெற்றிருப்பதால் மணவாழ்க்கை அமைய தடைகள் உண்டாக்கி யுள்ளது. சூரியனும் ராகு சாரம் பெற்று சுக்கிரனும் ராகு சாரம் பெற்றது அவ்வளவு சாதகமான அமைப்பு என கூறமுடியாது. ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பலகீனமாக இருந்து சந்திரன் பலமாக இருந்தால் அதிலும் சந்திரன் ஏழாம் அதிபதியாக இருந்தால் சம வயது உள்ள பெண், உங்களை விட ஓரிரு மாதங் கள் மூத்த பெண்ணை திருமணம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காரணத் தால் இப்படி ஒரு பலனை உங்களுக்கு சொல்கிறேன். உங்களைவிட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் வேற்று ஜாதி, வேற்று பிரிவு உள்ள பெண்ணை வரனை தேடினால் சாதகப் பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரியன்- ராகு சாரம் பெற்று இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும், நல்லது நடக்கட்டும்.

bala230623
இதையும் படியுங்கள்
Subscribe