எனது மகன், திருமணம் எப்போது நடக்கும்? மணப்பெண் பற்றி விவரம் கூறுங்கள். -முத்துலட்சுமி முருகேசன், திருப்புவனம் புதூர்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம்பெற்று 12-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்றிருப்பதால் நல்ல படித்த பெண், அழகான பெண் மனைவியாக வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சனிபார்வை ஏழாம் பாவத்திற்கும், சுக்கிரனுக்கும் இருந்ததால் திருமண தாமதம் ஏற்பட்டதுவருகிறது.
தற்போது குரு தசையில் புதன் புக்தி 18-10-2025 முடிய நடைபெறுவதாலும், மே மாதம்முதல் குரு 5-ல் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நல்லது நடக்கும்.
எனக்கு ஆயுள், ஆரோக்கியம் வரும் நாட்களில் எப்படியிருக்கும்? -கீதா, மும்பை.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஆயுள்காரகன் சனி உச்சம் பெற்றிருப்பதாலும், குரு பார்வை 8-ஆம் வீட்டுக்கு இருப்பதாலும் நீண்ட ஆயுள் உண்டு. தற்போது சூரிய தசை 6-5-2024 முடிய நடக்கிறது. அதன்பின் சந்திர தசை தொடங்கும். குரு- சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அடுத்த சந்திர தசை தொடங்க இருப்பதாலும், உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் நல்ல ஆரோக்கி
எனது மகன், திருமணம் எப்போது நடக்கும்? மணப்பெண் பற்றி விவரம் கூறுங்கள். -முத்துலட்சுமி முருகேசன், திருப்புவனம் புதூர்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம்பெற்று 12-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்றிருப்பதால் நல்ல படித்த பெண், அழகான பெண் மனைவியாக வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சனிபார்வை ஏழாம் பாவத்திற்கும், சுக்கிரனுக்கும் இருந்ததால் திருமண தாமதம் ஏற்பட்டதுவருகிறது.
தற்போது குரு தசையில் புதன் புக்தி 18-10-2025 முடிய நடைபெறுவதாலும், மே மாதம்முதல் குரு 5-ல் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நல்லது நடக்கும்.
எனக்கு ஆயுள், ஆரோக்கியம் வரும் நாட்களில் எப்படியிருக்கும்? -கீதா, மும்பை.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஆயுள்காரகன் சனி உச்சம் பெற்றிருப்பதாலும், குரு பார்வை 8-ஆம் வீட்டுக்கு இருப்பதாலும் நீண்ட ஆயுள் உண்டு. தற்போது சூரிய தசை 6-5-2024 முடிய நடக்கிறது. அதன்பின் சந்திர தசை தொடங்கும். குரு- சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அடுத்த சந்திர தசை தொடங்க இருப்பதாலும், உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் நல்ல ஆரோக்கியத்திற்கு ஆஞ்சனேயர் வழிபாடு, பெருமாள் தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
நான் தனியார் துறையில் பணிபுரிகிறேன். தொடர்ந்து வேலைக்கு செல்லலாமா, சொந்தத் தொழில் செய்யலாம், தொழில் செய்யலாம் என்றால் யாருடன் சேர்ந்து செய்யலாம்? விளக்கமாக கூறவும். -யுவராணி சென்னை.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கும் பத்துக்கும் அதிபதியான புதன் 10-ல் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். செய்யும் பணியில் படிப்படியான வளர்ச்சிகளை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி புதன் என்ற காரணத்தால் நீங்கள் உங்களது கல்வி சார்ந்த தகுதியை உயர்த்தி கொண்டால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 10-ஆம் அதிபதி பலமாக இருப்பது மட்டுமில்லாமல் நல்ல தசா புக்தி நடந்தால்தான் சொந்தத் தொழில் செய்யவேண்டும். உங்களுக்கு தற்போது 11-4-2025 முடிய 9-ல் உள்ள சூரிய தசையும் அடுத்து 3-ல் நீசம்பெற்ற சந்திர தசையும், அடுத்து 12-ல் இருக்கக்கூடிய செவ்வாய் தசையும் நடப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட பணியிலிருப்பது, வாய்ப்பு கிடைத்தால் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்வது, பன்னாட்டு நிறுவனத் தில் பணிபுரிவதற்காக முயற்சிசெய்வது நற்பலனைத் தரும்.
எனக்கு பணிக்கான வருமானம் குறைந்துக்கொண்டு வருகிறது. அதை உயர்த்த நான் என்ன செய்யவேண்டும். -சரவணன், சேலம்.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனி 3-ல் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பதால் படிப்படியான வளர்ச்சிகளையும், நல்ல முன்னேற்றத் தையும் அடையமுடியும். குருபார்வை 10-ஆம் வீட்டுக்கு இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மீன ராசியில் பிறந்த உங்களுக்குத் தற்போது ஏழரைச்சனி நடப்பதால் பணியில் சில நெருக்கடிகள் இருக்கும். உங்கள் பணியில் நேர்மையுடன் செயல் படுங்கள்; கண்டிப்பாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக தற்போது 2-ல் குரு சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்குத் தற்போது சந்திர தசை நடப்பதால் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் வளர்ச்சியும் உண்டாகும். ஏழரைச்சனி நடப்பதால் அகலக்கால் வைக்காமல் ஆஞ்சனேயர் வழிபாடு, பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? -கிருபா, பாண்ட்ர கோட்டை.
பதில்: கடக லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசியில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 8-ல் ஆட்சி பெற்றிருப்பதும், திரிகோண ஸ்தானமான 5-ல் சுக்கிரன் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். 11-4-2024 முடிய ராகு தசை நடப்பதால் திருமணத்தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. 7-ஆம் அதிபதி சனி- ராகு சாரம் பெற்றிருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கவும்; சிறப்பான வாழ்க்கை அமையும். அடுத்த குரு தசை தொடங்கும் தருவாயில், 1-5-2024 முதல் கோட்சாரத்தில் குரு 5-ல் இருக்கக்கூடிய நேரத்தில் நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. காலபைரவரை வழிபாடு செய்யவும்; நல்லது நடக்கும்.
நீசபங்க ராஜயோகம், விபரீத ராஜயோகம் பத்தில் சூரியன், பண வருவாய் சிறப்பாக இல்லை. எப்பொழுது நல்லது நடக்கும்? பரிகாரம் கூறவும். -ராஜன், புளியம்பட்டி.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குரு, சனி வக்ரகதியில் இருந்ததால் நல்லது நடக்க இடையூறுகள் ஏற்பட்டது. கடந்த காலங்களில் கேது தசை நடைபெற்றதும், அதன்முன்பு நடைபெற்ற புதன் தசையில் ராகு புக்தி, குரு புக்தி, சனி புக்தி ஆகிய காலங்கள் சாதகமற்று இருந்ததாலும் கடந்த பத்தாண்டு காலத்தில் நல்லது நடைபெறவில்லை. குறிப்பாக புதன் தசையில் பகை வீட்டில் அமையப்பெற்ற ராகு புக்தியும், புதனுக்கு 8-ல் அமையப்பெற்ற குரு, சனி புக்தியும் உங்களுக்கு பெரிய அளவில் சாதகப் பலனை தந்து இருக்காது. அடுத்து கேது தசை நடக்கின்றபொழுது கேது நின்றுவிட்டு அதிபதி சனி வக்ரம் பெற்றிருந்த காரணத்தால் கேது தசையும் பெரிய அளவில் அணுகூலத்தை தரவில்லை. தற்போது உங்களுக்கு சுக்கிர தசை தொடங்கியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடுகின்றபொழுது வரும் நாட்கள் ஆதாயம் தரக்கூடிய நாட்களாக இருக்கும்; குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
எனது இளைய மகள் ரத்னா, அவளது பட்ட படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆண் நண்பருடன் சுற்றிவருகிறாள். என்னால் முடிந்த அளவு அவளை மாற்ற முயற்சி செய்கிறேன். அவளது படிப்பு தொடருமா? வேறு எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் அவள் படிப்பினை தொடருவாள்? -தணிகாசலம், வேலூர்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு தற்போது சனி தசையில் குரு புக்தி 1-7-2024 முடிய நடக்கிறது. உங்கள் மகளுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும், சனி பாவரீதியாக 12-ல் இருப்பதாலும் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது. உங்கள் மகள் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம்பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு புதன் தசை தொடங்குகின்றபொழுது தற்போது இருக்கக்கூடிய தேவையற்ற நட்புகள் குறைந்து படிப்பில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆறுதலாக சில வார்த்தைகளை பேசி ஆறுமாத காலத்தை கடக்கவும். அதன்பின் நல்ல மாற்றங்கள் உண்டாகும். ஜாதகத்தில் சூரியன், புதன் குரு சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்பதால் அடுத்த புதன் தசை தொடங்குகின்றபொழுது நல்ல வாய்ப்புகளும் படிப்பில் அனுகூலங்களும் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.