எனது வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? -நவீன் சென்னை
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 6-ல் இருந்தாலும் பாவகரீதியாக 5-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது ராகு தசையில் 8-ல் நீசம்பெற்ற சனி புக்தி 18-2-2024 முடிய நடக்கிறது. அதற்கு அடுத்து புதன் புக்தி வரும் தருவாயில் நல்ல வேலைவாய்ப்பு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்ககையைப் பற்றி பார்க்கும்போது 7-ஆம் அதிபதி குரு, கேது சாரம் பெற்று 8-ல் மறைந்திருப்பது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்பதால் அதிலும் குறிப்பாக 3-ஆவது தசையாக ராகு தசை நடப்பதால் திருமணம் நடந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். 2024 மே மாதம்முதல் குரு 9-ல் கோட்சாரரீதியாக சஞ்சாரம் செய்கின்றபொழுது திருமணம் முயற்சி வெற்றி தரும். திருமணம் நடந்தாலும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
திருமணம் எப்போது நடைபெறும், காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் பார்த்து நடைபெறுமா? -ராஜ்குமார்
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 11-ல் இருந்தாலும் பாவக ரீதியாக 12-ல் உள்ளார். உங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கை பெற்று 12-ல் மறைந்துள்ளது. தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி 6-4-2026 முடிய- நடப்பதாலும், குரு வக்ரம் பெற்றிருப்பதாலும் சொந்தமில்லாமல் அந்நியத்தில் பெ
எனது வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? -நவீன் சென்னை
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 6-ல் இருந்தாலும் பாவகரீதியாக 5-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது ராகு தசையில் 8-ல் நீசம்பெற்ற சனி புக்தி 18-2-2024 முடிய நடக்கிறது. அதற்கு அடுத்து புதன் புக்தி வரும் தருவாயில் நல்ல வேலைவாய்ப்பு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்ககையைப் பற்றி பார்க்கும்போது 7-ஆம் அதிபதி குரு, கேது சாரம் பெற்று 8-ல் மறைந்திருப்பது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்பதால் அதிலும் குறிப்பாக 3-ஆவது தசையாக ராகு தசை நடப்பதால் திருமணம் நடந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். 2024 மே மாதம்முதல் குரு 9-ல் கோட்சாரரீதியாக சஞ்சாரம் செய்கின்றபொழுது திருமணம் முயற்சி வெற்றி தரும். திருமணம் நடந்தாலும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
திருமணம் எப்போது நடைபெறும், காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் பார்த்து நடைபெறுமா? -ராஜ்குமார்
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 11-ல் இருந்தாலும் பாவக ரீதியாக 12-ல் உள்ளார். உங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கை பெற்று 12-ல் மறைந்துள்ளது. தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி 6-4-2026 முடிய- நடப்பதாலும், குரு வக்ரம் பெற்றிருப்பதாலும் சொந்தமில்லாமல் அந்நியத்தில் பெண் அமைய வாய்ப்பு உண்டு. 5-ஆம் அதிபதி 11-ல் இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. மே மாதத்திற்கு பிறகு விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு 7-ல் குரு கோட்சாரத்தில் சஞ்சரிக்க போது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளது நல்லது.
என்னுடைய மகனுக்கு நீண்டநாட்களாக வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். திருமண பிராப்தம் உள்ளதா? உண்டு என்றால் எப்பொழுது திருமணம் கூடிவரும்? -பொன்னி ராமநாதன், திருச்சி
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி 5-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்கள் மகனுக்கு 36 வயதானாலும் கடந்த காலங்களில் அதாவது குறிப்பாக 4-10-2021 முடிய சந்திரனுக்கு 7-ல் இருந்த கேது தசை நடைபெற்றது சாதகமற்ற அமைப்பாகும். குறிப்பாக சந்திரனுக்கு 7-ல் கேது அமையப்பெற்று 3-ஆவது தசையாக நடைபெற்றால் திருமணம் கைகூட இடையூறுகள் ஏற்படும். தற்போது கேது தசை முடிந்து சுக்கிர தசையில் சுய புக்தி 2-2-2025 முடிய நடப்பதால் தற்போது திருமண யோகம் உண்டு. வரும் மே மாதத்துக்குள் நல்லது நடக்க வாய்ப்புண்டு. 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத் தாலும், சூரியன், ராகு சாரம் பெற்று, சந்திரன் சனி சாரம் பெற்று, குரு வக்ரகதியில் இருப்பதால் உறவில் பார்க்காமல் அந்நியத் தில் குறிப்பாக அந்நிய ஜாதிப் பெண்ணைப் பார்ப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
நான் மருத்துவத் துறையில் உள்ளேன். திருமணம் சொந்தமா அல்லது அந்நியமா? வரன் எந்த துறையில் அமையும். -கீர்த்தனா
பதில்: அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்கு அதிபதி குரு 6-ல் களத்திரகாரகன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பது திருமணத்தை தாமதப்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும் சிறப்பான வாழ்க்கை அமையும். நீங்கள் இருக்கும் துறையிலோ நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது வக்ர சனி புக்தி நடப்பதால் அடுத்து வரக்கூடிய லக்னாதிபதி புதன் புக்தியில் அதாவது 26-11-2024-க்கு பிறகு ஒரு நல்ல வரன் அமையக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் 5-ல் ராகு, 9-ல் சனி அமையப் பெற்றிருப்பதாலும், சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதாலும் சொந்தத்தில் அமைவதைவிட அந்நியத்தில் வரன் அமைவதற்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது.
திருமணம் தாமதமாகி கொண்டுபோகிறது, எப்போது நல்ல வரன் அமையும்? சொந்தமா- அன்னியமா? -செந்தில்குமார்
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திரக்காரனுமான சுக்கிரன் வக்ரகதியில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும், புத்திரகாரகன் குரு வக்ரம் பெற்றிருப்பதும் திருமண விஷயத்தில் ஒரு நல்லது நடக்க இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். சுக்கிரன் வக்ரம் பெற்றிருப்பதால் பார்க்கக்கூடிய வரனுக்கு 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருக்கக்கூடிய வரனையோ, பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம்பெற்ற ஜாதகத்தையோ பார்த்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது குரு 5-ல் இருப்பதால் திருமண முயற்சி செய்யவும்; நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
நான் ஒரு மருத்துவர். முதுகலையில் அறுவை சிகிச்சையை மட்டுமே படிக்க விரும்புகிறேன். வாய்ப்பு உள்நாட்டில் கிடைக்குமா அல்லது வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டுமா? -சௌமியா மும்பாய்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் அதிபதி சனி குரு பார்வையோடு இருப்பதும், 9-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று பலமாக இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மருத்துவத்துறையில் மேற்படிப்பு படிக்கக்கூடிய முயற்சிகள் கண்டிப்பாக விரைவில் கைகூடி வரும். உங்களுக்கு தற்போது சனி தசையில் சுய புக்தி 26-5-2024 முடிய நடப்பதால் மேற்படிப்புக்கான முயற்சிகள் தடைப்படுகிறது. அடுத்து நடக்க இருக்கக்கூடிய புதன் புக்தி காலத்தில் மேற்படிப்புக் காண முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் கண்டிப்பாக நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி 9-ஆம் அதிபதி சுக்கிரன் சாரம் பெற்று, புதன் ஜல கிரகமான சந்திரன் சாரம் பெற்றிருப்பதால் வெளியூர், வெளிநாடுகளில் மேற்படிப்பு முயற்சிகள் மேற்கொண்டால் கண்டிப்பாக நல்லது நடக்கும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் தேவையற்ற தடைகள் இருக்கலாம் விரைவில் நல்ல மாற்றங்கள் நடக்கும். சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? -வாசகி (பெயர் வேண்டாம்)
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் அமையப்பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். பூராட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த வருடத்தில் ஏழரைச்சனி நடைபெற்றது. குரு வக்ரகதியில் சஞ்சரித்த தெல்லாம் சாதக மற்ற அமைப் பாகும். தற் போது ராகு தசையில் 17-2-2024 முதல் சனி புக்தி நடக்க இருக்கி றது. ராகு தசையில் சனி புக்தி என்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்லது நடக்கும். சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ராகு பாவரீதியாக 4-ல் இருப்பதும், சனி 7-ல் இருந்தாலும் பாவரீதியாக 8-ல் இருப்பதும் சுமாரான அமைப்பாகும். அடுத்து 2, 3 வருடங்களுக்கு பொறுமையைக் கடைப்பிடித்தால் அடுத்து வரக்கூடிய புதன் புக்தியில் இருந்து உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கோட்சார கிரகங்களை அடிப்படையில் 2023 ஒப்பிடுகின்றபொழுது 2024-ல் வேலை வாய்ப்புரீதியாக நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். 2027 தொடக்கத்தில் புதன் புக்தி நடக்கின்ற வருகின்றபொழுது ஒரு நிலையான வேலை வாய்ப்பு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு தசை நடப்பதால் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான முயற்சிகள் மேற்கொண்டாலும் வெளியூர் வேலை வாய்ப்புகளை முயற்சித்தாலும் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற் கொள்ளவும்.