என் மகன் தற்போது வக்கீலாக உள்ளார். மாஜிஸ்திரேட்டாக வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதி பதி சந்திரன்- சூரியன் வீட்டில் அமையப் பெற்று சூரியன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் அமையப்பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப்பதாலும், சூரியன்- குரு சேர்க்கை இருப்பதாலும் அரசாங்க பதவிக்கு முயற்சித்தால் நல்லது நடக்கும். நீதித்துறைக்கு காரகனான சனி ஆட்சிபெற்று சந்திரனுக்கு 7-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தொடர்ந்து முயற்சித்தால் எதிர்காலத்தில் குரு தசை வருகின்றபொழுது கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். 7-ஆம் அதிபதி செவ்வாய் 2-ல் ஆட்சி பெற்றிருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் லக்னத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் திருமணரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் 2-ல் ராகு அமைந்து 21-5-2033 முடிய ராகு தசை நடப்பதால் திருமண வாழ்க்கைரீதியாக விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இந்த ஜாதகருக்கு மருத்துவ படிப்பு படிக்க முடியுமா என்று கூறுங்கள்?

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகிக்கு கல்விக்கார கன் புதன்- ராகு சேர்க் கைப் பெற்று குரு நட்சத் திரத்தில் உள்ளார். புதன்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்ப தால் நவீனகரமான கல்வி, புதிய தொழில் நுட்பத்துடன் உள்ள கல்வியோகம் பலமாக இருக்கிறது. புதன், ராகு 12-ல் இருந்து தற்போது ராகு தசை நடப்பதால் படிப்புக்காக வெளியூர் சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம். ஒரு ஜாதகத்தில் புதன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், சூரியன்- செவ்வாய் சேர்க்கை 4-ஆம் வீட்டில் இருந்தால் மருத்துவ படிப்புக்கான யோகங்கள் பலமாக இருக்கிறது என கூறலாம். புதனுக்கு அடுத்த கட்டத்தில் சூரியன் இருக்கக்கூடிய நிலையில் முயற்சி செய்யுங்கள்; நல்லது நடக்கட்டும்.

Advertisment

Q&A

எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? தற்போது நடக்கும் தசாபுக்தி பலன்களை பற்றி கூறுங்கள்? -மீராதேவி, தூத்துக்குடி.

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 10-ல் குரு சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப் பாகும். ஜாத கத்தில் செவ்வாய் கடகத்தில் நீசம்பெற்றாலும் செவ்வாய், சந்திரன் பரிவர்த்தனை பெற்றபொழுது பிறந்து உள்ளீர்கள். இதன்காரணமாக திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு சின்ன தடை அதன்பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 2025 மார்ச்சுக்குபிறகு புதன் தசையில் சந்திர புக்தி நடக்கும் நேரத்தில் திருமண யோகம் பலமாக இருக்கிறது. உங்களுக்கு தற்போது 2, 11-க்கு அதிபதியான புதன் தசை நடப்பது நல்ல முன்னேற்றத்தையும் வளமான பலனையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். புதன் 12-ல் இருந்தாலும் பாவகரீதியாக 11-ல் இருப்பதால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

எனது மகள் ஏழைப் பையனை காதல் திருமணம் செய்துகொண்டு கஷ்டபடுகிறாள். அவள் வாழ்க்கை எப்படியிருக்கும்? அவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்கலாமா அல்லது அப்படியே விட்டு விட லாமா என்று கூறுங்கள்? -தாமோதரன்.

Advertisment

பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு லக்னத் திற்கு 5-ஆம் அதிபதியான குரு ஆட்சி பெற்றிருப்பதும், 7-ஆம் அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்ப தும் சிறப் பான அமைப்பாகும். ராசிக்கு 7-ல் சனி அமையப்பெற்று நீசம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். லக்னத்திற்கோ, ராசிகோ 7-ல் சனி பலவீனமாக இருந்தால் வசதி குறைவான இடத்தில்தான் திருமண அமைப்பு ஏற்படும். உங்கள் மகள் ஜாதகத்தில் களத்திர காரகன் செவ்வாய் 8-ல் மறைந்திருந்தாலும் தனது சொந்த நட்சத்திரமான மிருக சீரிடத்தில் இருப்பதால் இனி வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். ஜாதகிக்கு தற்போது புதன் தசையில் புதன் புக்தி 23-9-2024 முடிய நடக்கிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற சனி தசையைவிட வரும் நாட்களில் ஜாதகி யுடைய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். திருமணத்துக்குமுன்பு செய்யவேண்டிய விஷயத்தை தற்போது நீங்கள் நினைக் கிறீர்கள். அமைந்த வாழ்க்கை சிறப்பாக இருக்க குலதெய்வத்தை பிரார்த்திக்கவும்.

எனக்கு ஏற்கெனவே இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துமுடிந்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. கேது புக்தி காலத்தில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடியுமா? எனது ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -ஹேமாமாலினி, சென்னை.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜெனன ஜாதகத்தில் சனி, புதன் வக்ரகதியில் இருக்கின்றபொழுது பிறந்துள்ளீர்கள். சூரியனுக்கு 6-ல் சனி அமையப்பெற்று கேது நட்சத்திரத்தில் இருந்து வக்ரகதியில் இருப்பது உடல் பலவீனத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்கள் ஜாதகத் தில் நட்சத்தி ராதி பதி புதன் வக்ரகதியில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். கடந்த காலங்க ளில் வக்ர சனி புக்திக்கு அடுத்து வக்ர புதன் புக்தி தற்போது நடைபெறுவது நல்ல அமைப்பு இல்லை. 13-10-2024 முடிய புதன் புக்தி நடப்பதும் அடுத்து கேது புக்தி வர இருப்பதும் ஆரோக்கியத் துக்கு அவ்வளவு சிறப்பல்ல. அதிகப் படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். குறிப்பாக ராகு தசையில் கேது புக்தி என்பது மிக முக்கிய நேரமாகும். கேது புக்தியில் உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்களையும் உபாதைகளையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கின்றபொழுது கவனமாக இருப்பதும் நல்லது. ராகு தசையில் சுக்கிர புக்தி வந்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.