Advertisment

பாலமுருகன் பதில்கள் 27.09.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-27092024

எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? வரன் உறவிலா அல்லது அன்னியத்திலா? என் ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளதா என்று கூறுங்கள்? -பிரகதீஸ்வரன், தஞ்சை.

Advertisment

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் 4-ல் ஆட்சிபெற்று, செவ்வாய் சேர்க்கை பெற்றிருப்பதும், 7-ஆம் அதிபதி சூரியன் திரிகோண ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு சூரிய தசையில் ராகு புக்தி 6-11-2024 முடிய நடக்கிறது. அடுத்து வரக்கூடிய குரு புக்தியில் திருமணம் அமையக்கூடிய யோகம் உண்டு.

Advertisment

உங்கள் ஜாதகத்தில் 7-ல் ராகு இருப்ப தால் உறவில்லாமல் அன்னியத்தில் வரன் பார்ப்பது நல்லது. 7-ல் ராகு இருப் பது ராகு- கேது தோஷம் என்றாலும் உடனடியாக ராகு தசை வராத காரணத் தினால் கெடுதி கிடையாது. 7-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Q&A

நான் இரண்டு முறை குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்று மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவாழ்கிறேன். இனிமேலும் மனைவி, மகளைவிட்டு பிரியாமல் இருக்க என்ன வழி? என் ஜாதகப்படி எந்தத் தொழில் சிறப்பாக இருக்கு மென்று கூறுங்க

எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? வரன் உறவிலா அல்லது அன்னியத்திலா? என் ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளதா என்று கூறுங்கள்? -பிரகதீஸ்வரன், தஞ்சை.

Advertisment

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் 4-ல் ஆட்சிபெற்று, செவ்வாய் சேர்க்கை பெற்றிருப்பதும், 7-ஆம் அதிபதி சூரியன் திரிகோண ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு சூரிய தசையில் ராகு புக்தி 6-11-2024 முடிய நடக்கிறது. அடுத்து வரக்கூடிய குரு புக்தியில் திருமணம் அமையக்கூடிய யோகம் உண்டு.

Advertisment

உங்கள் ஜாதகத்தில் 7-ல் ராகு இருப்ப தால் உறவில்லாமல் அன்னியத்தில் வரன் பார்ப்பது நல்லது. 7-ல் ராகு இருப் பது ராகு- கேது தோஷம் என்றாலும் உடனடியாக ராகு தசை வராத காரணத் தினால் கெடுதி கிடையாது. 7-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Q&A

நான் இரண்டு முறை குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்று மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவாழ்கிறேன். இனிமேலும் மனைவி, மகளைவிட்டு பிரியாமல் இருக்க என்ன வழி? என் ஜாதகப்படி எந்தத் தொழில் சிறப்பாக இருக்கு மென்று கூறுங்கள்? -காமராஜ், சத்திரப்பட்டி.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 7-ஆம் வீட்டிலுள்ள ராகு தசை 10-10-2032 முடிய நடக்கிறது. எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு 2, 7-ல் ராகு போன்ற பாவ கிரகம் இருந்து அதன் தசை நடைபெற்றால் சூழ்நிலை காரணமாக மனைவியைப் பிரிந்து வாழக்கூடிய நிலை ஏற்படும். ராகு தசை நடப்பதால் ஒற்றுமையுடன் இருப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். பாதிப்புகள் குறைய விட்டுக்கொடுத்து செல்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் பாதக ஸ்தானமான 11-ல் இருப்பதால் சொந்தத் தொழில் யோகம் என்பது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என கூறமுடியாது. தற்போது நடைபெறுவது 7-ல் உள்ள ராகு தசை என்பதால் யாருடனா வது கூட்டாக சேர்ந்து செய்யக்கூடிய செயல் கள் ஒருசில நற்பலனை தரலாம். உங்கள் ஜாத கத்தில் குரு வக்ரகதி யில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

நானும் எனது மனைவி யும் 22 வருடங்கள் பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் மறுபடியும் சேர்ந்து வாழ்வோமா? இனிமேல் என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சுப்ரமணியன், ஈரோடு.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத் திற்கு 7-ஆம் வீட்டில் சனி வக்ரகதியில் அமைய பெற்றிருப்பது மண வாழ்வில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். 7-ல் சனி இருந்து தற்போது சனி தசையில் சனி புக்தி 29-3-2025 முடிய நடப்பதால் பாதிப்புகள் சற்று அதிகப்படி யாக இருக்கிறது. சுய புக்திக்குபிறகு விட்டுக் கொடுத்து சென்றால் சற்று சாதகமான பலன் கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத் தில் சுக்கிரன், குரு சேர்க்கை பெற்றிருப் பதும் லக்னத்தில் செவ்வாய் இருப்பதும் அனுகூலமான அமைப்பாகும், அனுசரித்துச் செல்லவும், நல்லது நடக்கட்டும்.

என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -தீபா, நாகர்கோவில்.

பதில்: உத்தி ராட நட்சத் திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திரக்காரருமான செவ்வாய் 8-ல் சந்திரன்- புதன் சேர்க்கை பெற்றுள் ளார். உங்கள் மகளுக்கு தற்போது ராகு தசையில், ராகுவுக்கு 8-ல் இருக்கக்கூடிய சனி புக்தி 10-6-2027 முடிய நடக்கிறது. ராகு தசையில் சனி புக்தி என்பது திருமணம் அமைய இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நேரமாகும். எது எப்படி இருந்தாலும் 13-5-2025 முதல் தனுசு ராசியில் பிறந்த உங்கள் மகளுக்கு ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிக்கும் தருவாயில் திருமணம் கைகூட கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் 8-ல் இருப்ப தால் முருக வழிபாடு மேற்கொள்ள வும்; நற்பலன் கள் ஏற்படும். நடப்பது ராகு தசை என்பதால் உறவில்லாமல் அன்னியத்தில் வரன் பார்ப்பது நல்லது. ராகு தசையில் சனி புக்தி முடிந்தபிறகுதான் வேலை வாய்ப்புரீதியாக அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது ராகு தசையில் சனி புக்தி நடப்பதால் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரிவர பயன்படுத்திக்கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

இவர்கள் இருவர் வாழ்விலும் தினசரி சண்டை பிரச்சினையாக உள்ளது. இவர்கள் சேர்ந்துவாழும் பாக்கியம் உள்ளதா என்று கூறுங்கள்? -ஜோதிலட்சுமி, சென்னை.

பதில்: கணவன்- மனைவி இருவர் ஜாதகம் அனுப்பி உள்ளீர்கள். கணவர் ஜாதகத்தில் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ளார். 7-ல் ராகு இருந்தாலும் 7-ஆம் அதிபதி குரு 3-ல் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பதும் களத்திரகாரகன் சுக்கிரன் லாப ஸ்தானத் தி-ருந்து குரு பார்வை பெறுவதும் கணவர் ஜாதகத்தில் அமைப்புகள் சிறப்பாக இருக்கிறது. கணவர் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தாலும் தற்போது சூரிய தசை நடப்பதால் கெடுதி கிடையாது. மனைவி ஜாதகத்தில் களத்திர காரகன் செவ்வாய் வக்ரகதியில் ராகு சாரம் பெற்று சனி பார்வையோடு இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சனி 10-ல் கேது சாரம் பெற்று இருப்பதும் செவ்வாய் ராகு சாரம் பெற்று வக்ரகதியில் இருப்பதும் தற்போது புதன் தசையில் லக்னத்திற்கு 7-ஆம் அதிபதியான சனி புக்தி 2-5-2026 முடிய நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பாகும். பெண் ஜாதகம் சற்று தோஷமாக இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வக்ரகதியில் அமையப்பெற்று சனி போன்ற கிரகங் கள் பார்வை பெறுவதும், கேது நட்சத் திரத்தில் அமை யப்பெற்ற சனி புக்தி நடப்பதும் அடுத்து இந்த பெண்ணுக்கு 7-ல் இருக்கக் கூடிய கேது தசை நடை பெற இருப்ப தும் நல்ல அமைப்பு என கூறமுடியாது. இதன் காரண மாக மன வாழ்வில் ஒற்றுமை குறைவு, பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம். நிலைமையை புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் நல்லது. அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala270924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe