பாலமுருகன் பதில்கள் 23.05.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-23052025

என் கணவர் அடிக்கடி சிறு சிறு உடல் உபாதை களால் அவதிப் படுகிறார். அவரு டைய ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பழனிசாமி, குறிஞ்சிப்பாடி

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு மீன லக்னத்திற்கு 9-ல் வக்ரகதியிலுள்ள சனி தசையில் 10-ல் உள்ள சந்திர புக்தி நடக்கிறது. சனி வக்ரகதியிலிருந்து தசை நடைபெறுவ தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப் பது, கால் மற்றும் பாத சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் நிதானத் தோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். தற்போது சந்திர புக்தி 18-2-2026 முடிய நடப்பதால் தேவையற்ற செலவுகள்,

என் கணவர் அடிக்கடி சிறு சிறு உடல் உபாதை களால் அவதிப் படுகிறார். அவரு டைய ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பழனிசாமி, குறிஞ்சிப்பாடி

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு மீன லக்னத்திற்கு 9-ல் வக்ரகதியிலுள்ள சனி தசையில் 10-ல் உள்ள சந்திர புக்தி நடக்கிறது. சனி வக்ரகதியிலிருந்து தசை நடைபெறுவ தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப் பது, கால் மற்றும் பாத சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் நிதானத் தோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். தற்போது சந்திர புக்தி 18-2-2026 முடிய நடப்பதால் தேவையற்ற செலவுகள், மன குழப்பங்கள் இருக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது. தனுசு ராசியில் பிறந்த ஜாதகருக்கு தற்போது 7-ல் குரு வந்திருப்பதால் உடல் ஆரோக்கியரீதியாக ஒருசில முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Q&A

அரசு பணி கிடைக்குமா? என்ன சுயதொழில் செய்வது? திருமணம் எப்பொழுது நடைபெறும் என்று கூறுங்கள்? -லோகேஷ், பண்ருட்டி.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 12-ஆம் வீட்டில் ராகு சேர்க்கை பெற்று இருக்கிறார். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 12-ல் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங் களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள், பிறந்த ஊரைவிட வெளியூர்மூலமாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய யோகங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக 12-ல் உள்ள ராகு தசை நடப்பதால் வெளியூர், வெளிமாநிலங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்மூலம்தான் அனுகூலமான பலன்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்ர கதியில் இருப்பதாலும், 12-ல் இருக்கக்கூடிய ராகு தசை நடப்பதாலும் சுயதொழில் செய்யாமல் வேலைக்கு செல்வது நல்லது. 19-12-2025 முதல் ராகு தசையில் 7-ஆம் அதிபதி குரு புக்தி நடக்கும் தருவாயில் திருமண யோகம் சிறப்பாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி குரு 5-ல் நீசம்பெற்று வக்ரகதியில் இருப்பதாலும், சுக்கிரன் ஜென்ம லக்னத் தில் நீசம்பெற்றிருப்பதாலும் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருசில தடைக்குப் பிறகுதான் நல்லது நடக்கும். சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நற்பலனை தரும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நான் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கீழமை நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியுள்ளேன். வேலை கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -சந்தியா, அருப்புக்கோட்டை.

சித்திரை நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், செவ்வாய் வீடான 4-ஆம் வீட்டில் இருப்பதால் நிர்வாக பதவிகள், நல்ல வேலைவாய்ப்பு அமையக்கூடிய யோகங்கள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு, புதன் ராசி நவாம்சத்தில் இணைந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். இதன்காரணமாக மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பணிகள், கல்வித் துறையில் பணி, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறைகளில் பணி, வெளியூர் தொடர்புடைய பணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீதித்துறையில் பணிக்காக முயற்சி செய்வதாக கேள்வி கேட்டுள்ளீர்கள். தற்போது குரு தசை நடப்பதால் தொடர்ந்து முயற்சி செய்யவும்; நல்லது நடக்கட்டும். உங்கள் ஜாதகரீதியாக 3-ஆம் வீட்டில் இருக் கக்கூடிய குரு தசை என்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜாதகத்தில் சூரியன்- கேது இணைந்திருப் பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்
Subscribe