கேள்வி: நான் பலவித ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிபட்டு கொண்டிருக்கின்றேன், என் கடைசி காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -ராஜ், நெல்லை.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் சனி இருப்பது நீண்ட ஆயுளை ஏற்படும் அமைப்பாகும். குரு பார்வை ஜென்ம ராசியில் இருப்பதால் அனு கூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, ராகு அமையப் பெற்று 8-ல் உள்ள ராகு தசையில் 6-ல் உள்ள சூரிய புக்தி 10-12-2023 முடிய நடப்பதால் உடல் உபாதை கள் உண்டாகி றது. ராகு தசை என்ற காரணத்தினால் கண்டு பிடிக்க முடியாத உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். ராகு தசை நடைபெற்றாலே மாற்று மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மையை தரும். சூரிய புக்தி நடப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: வேலை, திருமணம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -கிருஷ்ணா, சிதம்பரம்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கும் 10-க்கு அதிபதியான குரு 9-ல் இருப்பதும், 12-ல் சனி ஆட்சிபெற்று இருப
கேள்வி: நான் பலவித ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிபட்டு கொண்டிருக்கின்றேன், என் கடைசி காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -ராஜ், நெல்லை.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் சனி இருப்பது நீண்ட ஆயுளை ஏற்படும் அமைப்பாகும். குரு பார்வை ஜென்ம ராசியில் இருப்பதால் அனு கூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, ராகு அமையப் பெற்று 8-ல் உள்ள ராகு தசையில் 6-ல் உள்ள சூரிய புக்தி 10-12-2023 முடிய நடப்பதால் உடல் உபாதை கள் உண்டாகி றது. ராகு தசை என்ற காரணத்தினால் கண்டு பிடிக்க முடியாத உடல் உபாதைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். ராகு தசை நடைபெற்றாலே மாற்று மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மையை தரும். சூரிய புக்தி நடப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: வேலை, திருமணம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -கிருஷ்ணா, சிதம்பரம்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கும் 10-க்கு அதிபதியான குரு 9-ல் இருப்பதும், 12-ல் சனி ஆட்சிபெற்று இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வேலை வாய்ப்பு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு தற்போது 8-ல் இருக்கக் கூடிய ராகு தசை நடப்பதால் சொந்தத் தொழில் செய்யாமல் வேலைக்கு செல்வதே சிறப்பு. 30-10-2023-க்கு பிறகு வேலை யில் ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. 7-ஆம் அதிபதி புதன் 11-ல் சுக்கிரன் சேர்க்கைப்பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்பதால் திருமண வாழ்க்கை நன்றாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு 8-ல் ராகு அமையப்பெற்று ராகு தசை நடைபெறுவதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 8-ல் ராகு இருப்பதும், ராசிக்கு 7-ல் ராகு இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நல்ல பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது நல்லது. மனைவிவழி உறவினர் வகையில் ஒற்றுமை இருக்காது. ராகு- கேது மாற்றத்திற்குப் பிறகு அதாவது 2023 அக்டோபர் 30-க்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும்.
கேள்வி: இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்? -கிருஷ்ணமூர்த்தி.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி குரு 6-ல் அமைந்து இருந்தாலும் தனது சுய நட்சத்திரத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். 7-ல் சுக்கிரன் உச்சம்பெற்று இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் மன வாழ்க்கை நன்றாக இருக்கும். தற்போது ராகு தசையில் சூரிய புக்தி 13-12-2023 முடிய நடக்கிறது. 1-5-2024-க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும் யோகம் உண்டு. லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் இருப்ப தால் செவ்வாய் தோஷம் இருக்கிறது. பெண் ஜாதகத் திலும் செவ் வாய் தோஷம் இருந்தால் நல்லது. ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந் தால் பார்க்கக்கூடிய வரனுக்கு லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப்பதுபோல் பார்ப்பது நல்லது. உங்களுக்கு 2-7-2026 வரை ராகு தசை நடப்பதால் ராகு தசை முடியும் வரை மணவாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதன்பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்பு.
கேள்வி: இந்த ஜாதகருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா? எப்போது அமையும் என்று கூறுங்கள்?
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்தில் உச்சம்பெற்று இருப்பதால் சொந்தமாக பூமியுடன் கூடிய வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டு. தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்கும். 2023 அக்டோபர் 30 க்குப்பிறகு நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால் நன்மை அடைய வாய்ப்பு உண்டு.
கேள்வி: என் திருமணம் எப்போது நடைபெறும்? வரன் சொந்தமா அல்லது அசலா? வேலை ஏதாவது கிடைக்குமா என்று கூறுங்கள்? -சுவர்ணலதா, மதுரை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ல் சனி ராகு சேர்க்கைப்பெற்று இருப்பதால் உறவில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. அண்ணியத்தில்தான் வாழ்க்கை அமையும். இரு பாவங்கள் 7-ல் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். 1-5-2024-க்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும். 10-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் அமைந்திருப்ப தால் வேலைக்கு சென்று சம்பாதிக்கக் கூடிய யோகம் உண்டு. ஜென்ம லக்னத்திற்கு சூரியன் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்பை அடையும் யோகம் உண்டு. உங்களுக்கு தற்போது சுக்கிர தசை 9-11-2025 முடிய நடக்கிறது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் அடுத்து வரக்கூடிய சூரிய தசையில் ஒரு கௌரவப் பதவியை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பொதுவாக 3-ஆவது தசை ஒரு தசை நடந்தால் வேலையில் ஒரு திருப்தி இருக்காது.
கேள்வி: என் திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -சிவா, வேலூர்.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 10-ல் இருப்பதும். சுக்கிரன் 12-ல் இருந்தாலும் சனி வீட்டில் இருப்பதும் சாதகமான அமைப்பு. நல்ல வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உண்டு. ராகு- கேது மாற்றத்திற்கு அதாவது 30-10-2023-க் குப்பிறகு நல்ல வாழ்க்கை அமையும். ஜென்ம லக்னத் திற்கு 5-ல் குரு வக்ரகதியில் இருப்பதால் ஒருசில தேவையற்ற தடைகள் ஏற்படுகிறது குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
கேள்வி: நடப்பு செவ்வாய் தசையின் பலன்களை பற்றி கூறுங்கள்? -இராதாகிருஷ்ணன், கடலூர்.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5, 10-க்கு அதிபதி செவ்வாய் 8-ல் இருந்து தசை நடக்கிறது. எட்டில் செவ்வாய் இருந்தாலும் தனது சொந்த நட்சத்திரத்தில் இருப்பதும் குரு பார்வையோடும் இருப்பதும் சாதகமான அமைப்பு. செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை முதலீடு செய்து எதுவும் செய்யாமல் இருப்பது உத்த மம். முருக வழிபாடு மேற்கொள்ளவும்; நன்மை கிடைக்கும்.