என் பெயரிலுள்ள காலி மனை எப்பொழுது விற்கும்? சொந்த வீடு அமையுமா? -மாதவிசிந்து, ஈரோடு.
மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் சுக்கிரன் வீட்டில் இருப்பதால் உங்கள் பெயரில் இருக்கக்கூடிய பூமி, மனை மூலமாக அனுகூலங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் மே மாதத்திற்கு பிறகு அதற்கான முயற்சி களை மேற்கொண்டால் நல்லது நடக்கும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதால் சொந்த வீடு யோகமுண்டு. தற்போது உங்களுக்கு சந்திர தசையில் குரு புக்தி 15-8-2025 முடிய நடக்கிறது. 2027 தொடக் கத்தில் உங்களுக்கு சந்திர தசையில் புதன் புக்தி நடக்கும் சமயத்தில் சொந்த வீடு அமையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. சந்திரன் 8-ல் இருந்து சந்திர தசை நடப்ப தால் தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படலாம். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
எனக்கு திருமணம் எப்போது? திருமண வாழ

எனக்கு திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? வேலையில் முன்னேற் றங்கள் ஏற்படுமா? -வைத்தீஸ்வரி, சென்னை.
சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 5-ல் இருப்பதும் சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைபெற்று 8-ல் இருந்தாலும் நட்பு வீட்டில் இருப்பதால் உங்களது திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு தற்போது குரு தசையில் புதன் புக்தி நடப்பதால் தீவிரமாக முயற்சி செய்தால் இந்த ஆண்டு இறுதிக் குள் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 5-ல் இருந்து தசை நடப்ப தால் வேலையில் படிப்படியான முன் னேற்றங்களை அடை யக்கூடிய அதிர்ஷ்டங் கள் உங்களுக்கு உண்டு. 2026 இறுதியில் சுக்கிர புக்தி தொடங்குகின்றபொழுது மேலும் வளமான பலன் களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்க ளுக்கு உண்டு.
(ஆண்) இவருக்கு திருமண தோஷம் உள்ளதா? இரு தாரமுள்ள ஜாதகமா? பரிகாரம் கூறவும்? -அர்ச்சனா, ஆரணி.
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ல் ராகு இருப்பதால் ராகு- கேது தோஷம் என்று கூறுவார் கள். 7-ல் ராகு இருந்தாலும் ராகு தசை நடந்தால்தான் தோஷமே தவிர இருந்தாலே கெடுதி கிடையாது. ஒரு ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி பலவீனமாக இருந்தாலும் சுக்கிரன் கெட்டுப் போயிருந்தால்தான் அமையும் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டு மறுமண அமைப்பு என கூறலாம். ஜாதகத்தில் சுக்கிரனை குரு பார்க்கின்றபொழுது பிறந்திருப்ப தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒருசில இடங்களில் முதலில் அமைந்த மனைவி ஜாதகத்தில் கிரக அமைப்பு சரியில்லாமல் இருந்து மனைவி ஜாதக ரீதியாக பிரிவினை ஏற்பட்டால் மேல் உள்ள ஜாதகருக்கு மறுமண வாழ்க்கை யோகம் சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தாலே இருதார அமைப்பு என கூற முடியாது.
இவர் ஐந்து மாதமாக கணவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறார். இருவரும் சேர்ந்து வாழும் நிலை எப்பொழுது? அல்லது இப்பெண்ணிற்கு இரு திருமண அமைப்பா? -இந்திராணி, விழுப்புரம்.
அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி சனி நீசம்பெற்று சுக்கிரன் சேர்க்கை பெற்றிருக் கிறது. 7-ஆம் அதிபதி நீசம்பெற்றால் மணவாழ்வில் ஒரு சில இடர் பாடுகளை சந்திக்க நேரி டும். ஜாதகிக்கு தற்போது சனி- கேது சாரம் பெற்ற சனி புக்தி நடப்பதால் கணவரிடம் ஒற்றுமை குறைவு ஏற்பட்டு இருக்கிறது. ஜாதகிக்கு தற்போது கேது சாரம் பெற்ற சனி புக்தி நடப்பதாலும் அடுத்து இந்தப் பெண்ணுக்கு 7-ல் இருக்கக்கூடிய கேது தசை நடக்க இருப்பதாலும் தற்போது அமைந்த வாழ்க்கை மட்டுமின்றி ஜாதகிக்கு யார் அமைந்தாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகமாகும். ஜாதகிக்கு செவ்வாய் வக்ரம் பெற்றிருப்பதாலும் 7-ல் கேது இருப்பதாலும் மணவாழ்வில் அனுசரித்துச் செல்வது, அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது மிகமிக நல்லது.
எனக்கு 19 வருடங்களாக நிலையான வருமானம் இல்லை. புதன் தசையிலும் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை எப்பொழுது மாறும் என்று கூறுங்கள்? -ஆர். ரவிச்சந்திரன், சிவகங்கை.
சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு இதற்கு முன்பு சனி வக்ரகதியில் அமையப் பெற்று 3-ஆவது தசையாக சனி தசை நடைபெற்றது அவ்வளவு விசேஷம் எனக் கூறமுடியாது. உங்கள் ஜாதகத் தில் மூன்று கிரகங்கள் வக்ரம் பெற்றி ருப்பதால் ஜாதகரீதியாக எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப் பாகும். உங்களுக்கு தற்போது 4-ஆவது தசை யாக புதன் தசை நடப்பது சற்று நல்ல அமைப்பாகும். குறிப்பாக தற்போது புதன் தசையில் கேது புக்தி 27-6-2025 முடிய நடக்கிறது. புதனுக்கு 8-ல் அமையப் பெற்ற கேது புக்தி என்பதால் தற்போது சற்று நெருக்கடிகள் இருக்கிறது. அடுத்து வரக் கூடிய சுக்கிர புக்திமுதல் வாழ்வில் படிப்படி யான முன்னேற்றங்கள் அடையக்கூடிய யோகமானது உண்டாகும். தற்போது புதன் தசை நடப்பதால் லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.