கேள்வி: என் சொந்த ஊரில் ஐயப்பனுக்கு கோவில் கட்டி அருள்வாக்கு சொல்ல விரும்பு கின்றேன், வாக்கு பலிதம் உண்டாக என்ன பூஜை செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -பால்சாமி, திருவில்லிபுத்தூர்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சூரியன், சுக்கிரன் வலுவாக இருப்பது சிறப்பான அமைப்பாகும். லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி சந்திரனை குரு பார்ப்பதால் பேச்சுத் திறமை யால் அனுகூலங் களை அடையக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. உங்களுக்கு தற்போது கேது தசையை நடப்பதால் கேது நின்ற வீட்டு அதிபதி சூரியன் உச்சம்பெற்று இருப்பதால் இருக்கும் இடத்தில் செல்வம், செல்வாக்கோடு இருக்கக் கூடிய வாய்ப்புகளும் ஆன்மிகப் பணியில் ஈடுபடக்கூடிய யோகமும் உண்டாகும். கேது தசை நடைபெறுவதால் விநாயகர் வழிபாடு, சித்திரகுப்தர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: என் மகன் தற்போது 12-ஆம் வகுப்பு படிக்கின்றான், மேற்கொண்டு படிக்க விரும்புகின்றான். அவனுடைய எண்ணம் எல்லாம் அரசியல் சம்பந்த மாக உள்ளது. அவனுக்கு குரு தசை எப்படியிருக்கும். அவனுடைய எதிர்காலம் பற்றி குழப்பத்தில் இருக்கிறோம். எங்களுக்கு தெளிவான பதில் கூறவும்? -சக்திவேல், சென்னை.
பதில்: மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சூரி யன், செவ்வாய், குரு, புதன் ஆகிய கிரகங்கள் 10-ஆம் வீட்டில் இணைந்தி ருப்பது அற்புத மான அமைப்பா கும். சூரியன், செவ்வாய், குரு இணைந்திருப்பதால் நன்கு படித்துவிட்டு அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவி யில் வைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் மகனுக்கு தற்போது ராகு தசை நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். ராகு நின்ற வீட்டு அதிபதி சனி வக்ரகதியில் இருப்ப தால் ராகு தசை நற்பலனை தராது. அடுத்து 5-4-2025 முதல் உங்கள் மகனுக்கு குரு தசை தொடங்குகின்ற பொழுது கல்வியில் சாதிக்கக்கூடிய அமைப்பு, ஒரு கௌரவமான நிலையை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங் கள் உண்டு. எதிர்காலத்தில் நல்ல ஒரு நிர்வாக பதவி அடையக்கூடிய அதிர்ஷ்டம் ஏற்படும். தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: நான் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றும் என்னுடைய பணிவாய்ப்பு பறிக்கப்பட் டுள்ளது. அதற்காக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் எனக்கு வெற்றி கிடைக் குமா? எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்? -நிர்மல்குமார், சென்னை.
பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ம் அதிபதி புதன் 9-ல் இருப்பது அனுகூலமான அமைப்புதான். சூரியன் 8-ல் இருக்கும் கார ணத்தால் ஒருசில இடையூறுகள் ஏற்பட்டது. தற்போது உங்களுக்கு புதன் தசையில் ராகு புக்தி 27-3-2026 முடிய நடக்கிறது. அக்டோபர் 30-ல் ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும், முடிந்தால் பாடல்பெற்ற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வரவும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் இறையருளால் நல்லது நடக்கும்.
கேள்வி: புதன் தசை செவ்வாய் புக்தியில் எனக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகள் வருமா? அதற்கு என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -விஸ்வநாதன், உளூந்தூர்பேட்டை.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 6-ஆம் அதிபதி புதன் தசையில் 8-ஆம் அதிபதி செவ்வாய் புக்தி 8-10-2023 முதல் நடைபெற இருக்கிறது. புதன் ஆட்சிபெற்று உள்ளதாலும் செவ்வாய் லக் னாதிபதி என்ற காரணத்தாலும் பெரிய பாதிப்பு கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. குரு பார்வை 8-ஆம் வீட்டுக்கு இருப் பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் புக்தி நடைபெறுவதால் நல்ல ஆரோக்கியத்தை அடைய முருகப் பெருமானை பிரார்த்திக்கவும்.
கேள்வி: எனக்கு தற்போது சனி தசை நடக்கிறது. சனி 11-ல் குருவோடு சேர்ந்து இருந் தாலும் மிகவும் மந்தமாக இருக்கிறது. அடுத்துவரும் காலங்கள் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சுப்பிரமணியன், மதுரை.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதி பதி சனி 11-ல் இருந்து தசை நடப்பது சாதகமான அமைப்புதான். குரு வீட்டில் இருக்கக்கூடிய சனி நல்ல பலனை உங்களுக்கு கண்டிப்பாக தரும். சனி லக்னாதிபதி என்பதனால் தைரியத்துடன் இருக்கவும். அடுத்து வரக் கூடிய காலங்க ளில் ஒரு வள மான பலன்கள் ஏற்படும். சந்தி ரன் ராகு 8-ல் சேர்ந்திருப்ப தால் தேவை யற்ற விஷயத்தை நினைக்காமல் மனோ தைரியத்துடன் செயல்படவும்; நன்மை நடக்கும்.
கேள்வி: என் திருமணம் எப்போது நடை பெறும்? பெண் என்னுடைய சமூகத்தில் அமையுமா அல்லது வேற்று சமூகத்தில் அமையுமா என்று கூறுங்கள்? -சந்தானகிருஷ்ணன், திருச்சி.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் சனி நட்சத்திரத்தில் இருப்பதாலும், களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் தந்தைகாரகன் சூரியன், ராகு நட்சத் திரத்தில் இருப்பதாலும் உங்களுக்கு உங்கள் சமூகத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சூரியன், சுக்கிரன் இரு கிரகமும் ராசி மற்றும் நவாம்ச சக்கரத்தில் ஒரே கட்டத்தில் இருப்பதால் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருக் கிறது. இதன் காரணமாக ஒரு நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது. 7-ஆம் அதிபதி சந்திரன் என்ற காரணத்தால் சம வயது உள்ள பெண், வாழ்வில் ஏதா வது ஒரு இடை யூறுகளை சந்தித்த பெண்ணை திருமணத்திற்கு முயற்சி செய் தால் அனுகூலங் கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேற்று ஜாதி பெண்ணாக இருந்தாலும் நல்லதே. ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு முயற்சி செய்யவும்; நல்லது நடக்கும்.
கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்? -கிருஷ்ணவேனி.
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி புதன் 10-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். புதன் ராகு சேர்க்கைப்பெற்று தற்போது ராகு தசை நடைபெறுவதால் திருமணம் நடைபெற்றா லும் ராகு தசை முடியும்வரை வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி 7-11-2025 முடிய நடை பெறுவதால் திருமணம் முயற்சிகள் நீங்கள் மேற் கொண்டால் 2024 மே மாதத்திற்குப்பிறகு நல்லது நடைபெறக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. செவ்வாய் 8-ல் இருப்பதால் செவ்வாய் தோஷம் ஆகும். வரன் பார்க் கின்ற பொழுது லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகமாக பார்ப்பது மிகவும் சிறப்பு. ராகு தசை நடைபெறுவதால் முன் கோபத்தைக் குறைத்துக்கொள்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. ப்