Advertisment

பாலமுருகன் பதில்கள் 20.12.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-20122024

எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சுரேஷ், சுரண்டை.

பதில் மகர லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன்- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று 8-ல் மறைந்து இருப்பதாலும், களத்திரகாரகன் சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடக்கிறது. சனி லக்னாதிபதி என்ற காரணத்தினால் 14-5-2025-க்குபிறகு குரு லாப ஸ்தானத் தில் சஞ்சரிக்கும்பொழுது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் கேது இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது.

Advertisment

ss

எனக்கு வேலை எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்?

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு

எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சுரேஷ், சுரண்டை.

பதில் மகர லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன்- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று 8-ல் மறைந்து இருப்பதாலும், களத்திரகாரகன் சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடக்கிறது. சனி லக்னாதிபதி என்ற காரணத்தினால் 14-5-2025-க்குபிறகு குரு லாப ஸ்தானத் தில் சஞ்சரிக்கும்பொழுது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் கேது இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது.

Advertisment

ss

எனக்கு வேலை எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்?

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8, 10-க்கு அதிபதியான செவ்வாய்- சனி பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. தற்போது சுக்கிர தசையில் 14-7-2027 முடிய சுக்கிரனுக்கு 8-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி நடக்கிறது. ராகு நின்ற வீட்டதிபதி சந்திரன் நீசமாக இருப்பதால் ராகு புக்தி காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போதைக்கு பயன்படுத்திகொள்வது நல்லது. 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முதலில் ஒரு பணியில் இருந்துவிட்டு அதன்பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டு வளர்ச்சி உண்டாகும். 2027-ல் குரு புக்தி வரும் சமயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது மனகுழப்பம், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு நிரந்திரமான உத்தியோகம் எப்போது கிடைக்கும்? எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -கோவிந்தராஜன், பண்ருட்டி.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்கு 7-ஆம் அதிபதி குரு 5-ல் நீசம் பெற்று, களத்திரகாரகன் சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதும் திருமண விஷயத்தில் சில தடைக்குபிறகு நல்லது நடக்கும். 10-ஆம் அதிபதி புதன் 12-ல் மறைந்து வக்ரகதியில் இருக்கிறார். 12-ல் உள்ள ராகு தசையில் தனது புக்தி 19-4-2026 முடிய நடக்கிறது. ராகு தசையில் சுயபுக்தி நடப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படுகிறது. அடுத்து குரு புக்தி வருகின்றபொழுது திருமணம் கைகூடக்கூடிய அமைப்பு, நல்ல வேலை கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. ராகு தசை சுயபுக்தி நடப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொள்வது, உணர்ச்சிவசப்படாமல் இருப்பது, அம்மன் வழிபாடு துர்க்கை வழிபாடு, மேற்கொள்வது நல்லது.

எனது எதிர்காலம் எப்பயிருக்கும்? அரசாங்க வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -சந்திரன், திண்டுக்கல்.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 9, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருக்கு ம்பொழுது பிறந்துள்ளீர்கள். குறிப்பாக 10-ல் சூரியன் இருந்தாலோ, 10-ஆம் அதிபதி சூரியனாக இருந்தாலோ, 10-ஆம் அதிபதிக்கு சூரியன் தொடர்பு இருந்தாலோ அரசு, அரசு சார்ந்த இடங்களில் வேலை கிடைக்கும். உங்களுக்கு 9, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், பன்னாட்டு நிறுவனங் களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். 10-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்பதாலும் அடுத்து பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் ஆரம்பத்தில் சில தடை, 30 வயதுக்குபிறகு வாழ்வில் நல்லவளர்ச்சிகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனது கடன் பிரச்சினை எப்போது தீரும்? தக்க பரிகாரம் கூறவும்? -தாமரைகண்ணன், அருப்புக்கோட்டை.

பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் உள்ள புதன் தசையில் சுயபுக்தி 20-2-2026 முடிய நடக்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருந்தால் அதன் தசை புக்தி காலத்தில் பொருளாதார நெருக்கடி கள், உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள், தேவையற்ற வம்பு, பிரச்சினைகள் ஏற்படும். 2027 பிப்ரவரி வாக்கில் புதன் தசையில் சுக்கிர புக்தி வருகின்றபொழுது வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக வளமான பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Advertisment
bala201224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe