Advertisment

பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-2

ப் கேள்வி: எனக்கு மறுமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சிபெற்று, 7-ஆம் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று அமைந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு சுக்கிர தசையில் குரு புக்தி 9-1-2025 முடிய நடக்கிறது. கடந்த காலங்களில் 2-ல் அமையப்பெற்ற ராகு புக்தி நடந்தது ஒருநல்ல அமைப்பு இல்லை. சூரியன்- செவ்வாய் இணைந்து மிக நெருக்கமாக இருப்பதால் மறுமணத்திற்கான வாய்ப்பு உண்டு. தற்போது குரு புக்தி நடப்பதால் விரைவில் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். குலதெய்வ வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

Advertisment

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி புதனும், பெண்களுக்கு களத்திர காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் லாப ஸ்தானத் தில் இருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 4-10-2024 முடிய நடப்பதால் உறவில்லாமல் அந்நியத

ப் கேள்வி: எனக்கு மறுமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன் ஆட்சிபெற்று, 7-ஆம் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று அமைந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்களுக்கு சுக்கிர தசையில் குரு புக்தி 9-1-2025 முடிய நடக்கிறது. கடந்த காலங்களில் 2-ல் அமையப்பெற்ற ராகு புக்தி நடந்தது ஒருநல்ல அமைப்பு இல்லை. சூரியன்- செவ்வாய் இணைந்து மிக நெருக்கமாக இருப்பதால் மறுமணத்திற்கான வாய்ப்பு உண்டு. தற்போது குரு புக்தி நடப்பதால் விரைவில் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். குலதெய்வ வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

Advertisment

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி புதனும், பெண்களுக்கு களத்திர காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் லாப ஸ்தானத் தில் இருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 4-10-2024 முடிய நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் முயற்சித்தால் நல்ல வரன் அமைய கூடிய அதிர்ஷ்ம் உண்டு. சுக்கிரன் கேது நட்சத்திரத்தில் பெற்றிருப்பதால் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. மகளின் ஜாதகத்தில் சூரியன்- குரு இணைந்து 10-ல் இருப்பது சிறப்பான அமைப்பென்பதால் எதிர்கால வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

gg

ப் கேள்வி: நான் கடன் பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறேன், எப்போது தீரும் என்று கூறுங்கள்? -பார்த்திபன், சேலம்

Advertisment

பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 6-ல் இருக்கும் ராகு தசை நடக்கிறது. ஒருவருக்கு 6-ஆம் அதிபதி தசை அல்லது 6-ல் உள்ள கிரகத்தின் தசை நடக்கின்றபொழுது கடன், வம்பு, வழக்குகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. பிறக்கின்ற போதே சனி வக்ரம் பெற்றிருப்பதால் வாங்கிய கடனை அடைப்பதில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். கோட்சாரரீதியாக தற்போது 6-ல் சனி இருப்பதால் வரும் நாட்களில் படிப்படியாக கடன்கள் குறையும். 2024 மே மாதத்திற்குப்பிறகு கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு. அடுத்தடுத்த கடன் வாங்குகின்ற பொழுது உங்கள் பேரில் வாங்காமல் மற்றவர்கள் பேரில் வாங்குவது மிகவும் நல்லது.

ப் கேள்வி: எனக்கு அரசு பணி யோகம் உண்டா, எப்போது கிடைக்கும்?

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் அமைந்து, 9-ஆம் அதிபதி புதன் 10-ல் அமைந்து 9, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். இதன்காரணமாக முதலில் ஒரு துறையில் பணிபுரிந்துவிட்டு பின்பு வேறு ஒரு துறைக்கு செல்லும் அமைப்பு உண்டு. சுக்கிரன், ராகு ராசி கட்டத்தில் 9-ல் இருந்தாலும், பாவகரீதியாக 8-ல் உள்ளனர். இதனால் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனுகூலங் களை அடையக்கூடிய அமைப்பு உண்டு. 10-ல் உள்ள சூரியன் ராகு நட்சத்திரத்தில் இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என கூறமுடியாது. தற்போது நடக்கும் ராகு தசை முடிந்து அடுத்து வரக்கூடிய குருமகா தசையில் (6-3-2027 முதல்) பணப் புழக்கங்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், வங்கிப்பணி போன்றவற்றில் முயற்சித்தால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு தசை தற்போது நடப்பதால் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

ப் கேள்வி: என்னுடைய நண்பர் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு 7-க்கு அதிபதி சனி 9-ல் அமையப்பெற்று 9-ஆம் அதிபதி குரு 7-ல் அமையப்பெற்று இருக்கின்றபொழுது பிறந்திருக்கிறார். 7-ஆம் அதிபதி சனி ராசியிலும் நவாம்சத்திலும் கேது சேர்க்கைப்பெற்று இருப்பது நல்ல அமைப்பு இல்லை. தற்போது ஜாதகருக்கு கேது மகா தசை 9-4-2023 முதல் நடக்கிறது. ஜாதகருக்கு 7-ல் சூரியன், சுக்கிரன், குரு அமையப் பெற்ற பொழுது பிறந் துள்ளார். திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக கையாளவேண்டிய ஜாதகம் ஆகும். மூன்றாவது தசையாக கேது தசை நடைபெறுகின்றபொழுது திருமணம் நடைபெற்றால் அதிலும் குறிப்பாக 7-ஆம் அதிபதி சேர்க்கைப்பெற்ற கேது தசை நடைபெறுகின்றபொழுது திருமண வாழ்க்கை என்பது அவ்வளவு சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கேது தசையில் திருமணம் செய்தால் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ஜாதகத்தில் சனி கேது சேர்க்கை உள்ளதால் கேது தசை முடியும் வரை மணவாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படலாம். சுக்கிர தசை வருகின்றபொழுதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். விநாயகர் வழிபாடு பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

ப் கேள்வி: என்னுடைய கடன் பிரச்சினை எப்போது தீரும் என்று கூறுங்கள்? -ஜோதி, சேலம்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பாக்கியாதிபதி புதன் தசை நடப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஏழரைச்சனியில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பது அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல. பொதுவாக ஏழரைச்சனியில் பிறந்த ஒருவருக்கு ஏழரைச்சனி நடைபெற்றால் கடன் பிரச்சினைகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு நடந்து கொள்வது நல்லது. செலவினங்களை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்பட்டால் 2025 மார்ச்சுக்கு பிறகு ஜென்மச்சனி முடிகின்றபொழுது பெருமளவு கடன்கள் குறையும். ஏழரைச்சனி நடப்பதால் அடுத்தடுத்து கடன்கள் அதிகம் வாங்காமல் இருப்பது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நல்லது.

bala090623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe