Advertisment

பாலமுருகன் பதில்கள் 18.04.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-18042025

எங்கள் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? பரிகாரம் ஏதாவது செய்யவேண்டுமா என்று கூறுங்கள்? -பால்பாண்டி.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் உச்சம்பெற்று இருப்பதும், களத்திரகாரகன் செவ்வாய் உச்சம்பெற்று சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். தற்போது உங்கள் மகளுக்கு ராகு தசையில் புதன் புக்தி நடக்கிறது. 30-7-2025 முதல் கேது புக்தி நடக்க இருக்கிறது. 2026 ஜூலைக்குபிறகு ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் திருமண யோகம் பலமாக இருக்கிறது. தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்பு. 2-ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் வரன் பார்ப்பவர்கள் ராகு- கேது தோஷமென்று கூறுவார்கள். 8-ல் ராகு இருப்பதால் எப்படிப்பட்ட வரன் அமைந்தாலும் திருமணத்திற்குபிறகு கணவர்வழி உறவில் ஒற்றுமை சிறப்பாக இருக்காது. சற்றுவிட்டு கொடுத்து செல்வது நல்லது.

Advertisment

ss

அரசு வேலைக்காக உறவினர்கள்

அரசு வேலைக்காக உறவினர்கள்மூலமாக ரூ. 5 லட்சம் கொடுத்தும் இன்னும் அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. அந்த வேலை கிடைக்குமா? அல்லது கொடுத்த பணம் திரும்பி கிடைக்குமா என்று கூறுங்கள்? -சரவணன், தேனி.

Advertisment

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குருபகவான் வக்ரகதியில் இருக்கின்றபொழுது பிறந்துள்ளீர்கள். பொதுவாக குரு வக்ரகதியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களை நம்பி பணம் கொடுத்தால் அதில் சில ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஜாதகமாகும். ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சந்திரனும், 9-ஆம் அதிபதி புதனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சனி வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் சில தடை அதன்பிறகு ஒரு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சூரியன் 10-ல் இருப்பதால் தீவிரமாக முயற்சி செய்யவும்; சற்று தாமதமாக அரசு வழியில் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணம் கொடுத்த விஷயத் தில் சற்று எச்சரிக்கையாக கையாண்டால்தான் கொடுத்த பணத்தை வாங்க முயற்சிக்க முடியும். ஜனன காலத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் மிகவும் பக்குவமாக கையாள்வது நல்லது.

என் மகன் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்படுகிறது. அவனது தொழிலிலும் பொருளாதாரத்திலும் எப்பொழுது முன்னேற்றம் ஏற்படுமென்று கூறுங்கள்? -லட்சுமி, பாளையங்கோட்டை.

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு கடந்த காலங்களில் பாதக ஸ்தானத்தில் இருந்த ராகு தசை நடைபெற்றது. அடுத்து தற்போது 6-ல் வக்ரகதி யில் இருக்கக்கூடிய குரு தசை நடக்கிறது. அடுத்து 10-ஆம் அதிபதி செவ்வாய், சனி சேர்க்கை பெற்றபொழுது பிறந்துள்ளார். இப்படிப்பட்ட அமைப் பில் எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு வீண் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அமைப்புகொண்ட ஜாதகமாகும். அவரது முன்கோபத்தை சற்று குறைத் தால் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். அதிலும் குறிப்பாக தற்போது 6-ல் இருக்கக்கூடிய குரு தசையில் தனது புக்தி நடக்கிறது. அது சாதகமற்ற அமைப்பாகும். 18-4-2027 முதல் குரு தசை சுய புக்திக்குபிறகு ஒருசில முன்னேற்றங்கள் இருக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருந்தால்தான் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். குறிப்பாக ஜாதகர் எதிலும் தனித்து செயல்படாமல் உறவினர்களை இணைத்துக் கொண்டு எதிலாவது ஈடுபட்டால் அதில் சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? அல்லது தற்போது செய்யும் பணியிலேயே தொடரலாமா? அல்லது தொழில் செய்யலாமா என்று கூறுங்கள்? -லட்சுமி, பாளையங்கோட்டை.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 7-ல் உள்ளார். 10-ஆம் அதிபதி சூரியன் என்ற காரணத்தாலே அரசு வேலை கிடைக்கு மென்று கூறமுடியாது. சூரியன் 10-ல் பலமாக இருந் தால்தான் அரசு வேலை என கூறலாம். ஜாதகருக்கு தற்போது ராகு மகா தசை நடக்கிறது. ராகு தசை நடப்பதால் தற்போது செய்யக்கூடிய வேலையில தொடர்வது மிகவும் சிறப்பு. ராகு தசை நடப்பதால் வெளியூர் தொடர்புடைய வேலைகளில் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சொந்தத் தொழில் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டால் சொந்தத் தொழில் செய்வதை விட வேலைக்கு செல்வதே மிகவும் சிறப் பாகும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

என் தந்தை எந்த தவறும் செய்யாமல் அரசாங்க வேலையை இழந்தார். அவருக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதிய பணம் எப்பொழுது கிடைக்கும் என்று கூறுங்கள்? -சேதுபாண்டியன், சிவகாசி.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத் தில் பிறந்த உங்கள் தந்தைக்கு தற்போது குரு தசையில் செவ்வாய் வீட்டில் உள்ள சனி புக்தி நடப்பது அவ்வளவு சிறப்பல்ல. 19-9-2025-க்கு பிறகு குரு தசை யில் புதன் புக்தி நடக்கும் சமயத்தில் வேலை விஷயமாக இருக்கக்கூடிய பிரச்சினைகளில் சற்று தீர்வு கிடைத்து உங்கள் தந்தைக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதிய பலன் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிலும் முன்கோபடாமல் நிதானத்தோடு செயல்பட்டால் ஆதாயத்தை அடையமுடியும். மேஷ ராசியில் பிறந்திருப்பதால் முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

bala180425
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe