கேள்வி: சொந்ததொழில் இப்போது துவங்கலாமா? லாபகரமாக இருக்குமா? எந்த துறை சார்ந்த தொழில் துவங்குவது, எப்போது துவங்குவது என்று கூறுங்கள்? -ஜுலியட் ஸ்வீட்லின், பெங்களூர்.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் வக்ரகதியில் 6-ல் அமையப்பெற்று இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெற் றிருப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வதுதான் சிறப்பு. வேலைக்கு செல்கின்றபொழுது கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதைக்கு பயன்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. அடுத்து உங்களுக்கு சுக்கிர தசையில் கேது புக்தி 17-9-2024 முடிய நடக்கிறது. 3-ஆவது தசை சுக்கிர தசை நடைபெறுகின்றபொழுது செய்யும் வேலையில் ஒரு நிம்மதி இல்லாத நிலை இருக்கும். உங்களுக்கு அடுத்து சூரிய தசை வருகின்றபொழுது வேலையில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்தத் தொழிலைவிட உங்கள் ஜாதக அமைப்புரீதியாக வேலைக்கு செல்வதுதான் சிறப்பு.
கேள்வி: நான் 3 வருடமாக வயிறு வலியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றேன். என் வலி எப்போது தீரும், உடல் ஆரோக்கியம் எப்போது
கேள்வி: சொந்ததொழில் இப்போது துவங்கலாமா? லாபகரமாக இருக்குமா? எந்த துறை சார்ந்த தொழில் துவங்குவது, எப்போது துவங்குவது என்று கூறுங்கள்? -ஜுலியட் ஸ்வீட்லின், பெங்களூர்.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் வக்ரகதியில் 6-ல் அமையப்பெற்று இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெற் றிருப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வதுதான் சிறப்பு. வேலைக்கு செல்கின்றபொழுது கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதைக்கு பயன்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. அடுத்து உங்களுக்கு சுக்கிர தசையில் கேது புக்தி 17-9-2024 முடிய நடக்கிறது. 3-ஆவது தசை சுக்கிர தசை நடைபெறுகின்றபொழுது செய்யும் வேலையில் ஒரு நிம்மதி இல்லாத நிலை இருக்கும். உங்களுக்கு அடுத்து சூரிய தசை வருகின்றபொழுது வேலையில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்தத் தொழிலைவிட உங்கள் ஜாதக அமைப்புரீதியாக வேலைக்கு செல்வதுதான் சிறப்பு.
கேள்வி: நான் 3 வருடமாக வயிறு வலியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றேன். என் வலி எப்போது தீரும், உடல் ஆரோக்கியம் எப்போது சீராகும் என்று கூறுங்கள்? -சிவராமன், முலனூர்
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ராகு நட்சத்திரத்தில் அமையப் பெற்று தற்சமயம் குரு தசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ராகு நட்சத்திரத்தில் இருந்து தசை நடைபெற்று வருவதால் வயிறு சம்பந் தப்பட்ட பிரச் சினைகள் ஏற்படுகிறது. சரியான ஆகாரத்தை சாப்பிட்டு விட்டு முறையான சிகிச்சைகள் மேற் கொள்ளவும். உங்கள் ராசிக்கு தற்போது கோட்சாரத்தில் 5-ல் ராகு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். 30-10-2023 ராகு- கேது மாற்றத்திற்குப்பிறகு உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும். இயற்கை உணவுகளை உட்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.
கேள்வி: வீடு விற்ற பணமும் கிடைக்கவில்லை, நகைகளையும் மீட்க முடியவில்லை, வேலையும் போய்விட்டது இதை எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள்? -அலமேலு, சென்னை.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் உச்சம்பெற்று சுக்கிரனுடன் 10-ல் அமையப்பெற்று நான்காம் வீட்டை பார்ப்பது சாதகமான அமைப்புதான். தற்சமயம் 12-ல் உள்ள சூரிய தசையில் சூரியனுக்கு 8-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி 15-6-2024 முடிய நடப்பதால் பொருளாதாரரீதியாக பிரச்சினைகள், மன நிம்மதி குறைவு ஏற்படுகிறது. 2024 ஜூனில் ஒருசில நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.
கேள்வி: என் மகனின் உத்தியோகம் மற்றும் திருமணம் பற்றி கூறுங்கள்? -கார்த்திகேசன், சென்னை.
பதில்: பூராட நட்சத் திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி 7-ல் ஆட்சிபெற்று இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். உங்கள் மகனுக்கு தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி 27-1-2024 முடிய நடக்கிறது. 2024 தொடக்கத்தில் குரு புக்தி தொடங்குகின்ற பொழுது ஒரு நல்ல வாழ்க்கை அமையும் யோகம் உண்டு. 10-ஆம் அதிபதி செவ்வாய் 4-ல் அமைந்து 10-ஆம் வீட்டை பார்ப்பதால் விரைவில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும் அதிர்ஷ்டங்கள் உங்கள் மகனுக்கு உண்டு. ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு குறிப்பாக 30-10-2023 பிறகு ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும். முருக வழிபாடு மேற்கொள்ளவும்.
கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்-? திருமண யோகம் இருக்கா, இல்லையா என்று கூறுங்கள்? -திருவாசகம், திருச்சி.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் 7-ல் ராகு அமைந்து 7-ஆம் அதிபதி சனி 9-ல் நீசம்பெற்று இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 7-ஆம் அதிபதி பலவீன மாக இருப்பதா லும், தற்சமயம் 7-ஆம் அதிபதி யான சனியின் தசை நடைபெறுவதாலும் வசதி குறைவான பெண், வேற்று ஜாதிப் பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் ஆகியோரில் ஒருவரை திருமணத்திற்காக முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி வக்ரம் பெற்று, 7-ஆம் அதிபதி நீசம் பெற்றிருப் பது தோஷம் என்ற காரணத்தினால் அமை யும் வாழ்க்கை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. திருமணத்தடை நீங்க குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
கேள்வி: என் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -வெங்கடேஷ், சேலம்.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் லக்ன கேந்திரம் பெற்றிருப்பது இருப்பதும், சுக்கிரன் கேந்திரத்தில் இருப்பதும் திருமண வாழ்க்கை ரீதியாக நல்ல அமைப்பாகும். உங்களுக்கு தற்போது சந்திர தசையில் செவ்வாய் புக்தி நடப்பதால் விரைவில் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. சந்திரன் கேது சாரம் பெற்று இருப்பதால் பெருமாள் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. ராகு- கேது பெயர்ச்சிக்கு (30-10-2023) பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கேள்வி: என் ஜாதகப்படி எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் ஆப்பரேஷன் நடக்கும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா? அப்படியென்றால் என்ன ஆப்ரேஷன் நடக்கும், எப்போது நடக்கும்-? குடும்ப பிரச்சினைகள் எப் போது தீரும் என்று கூறுங்கள்? -மாலா, தஞ்சாவூர்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசையில் செவ்வாய் புக்தி 7-8-2024 முடிய நடக்கிறது, 2023 ஆகஸ்ட் வரை உங்களுக்கு புதன் தசையில் சந்திர புக்தி நடந்த காலத்தில் குடும்பத்தில் தேவையற்ற நிம்மதி குறைவுகள், உடல் உபாதைகள் இருந்திருக்கும், தற்போது செவ்வாய் புக்தி தொடங்கி இருப்பதால் குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும் அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் இருக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும்.