கேள்வி: என் மகள் இஊ படிக்கிறாள். அவள் படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்து அவள் வாழ்க்கை சிறப்பாக அமையுமா என்று கூறுங்கள்? -அன்பழகன், நாகை.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 10-ஆம் அதிபதி 7-ல் இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைத்து நல்ல நிலை அடையக்கூடிய யோகங்கள் உண்டு. தற்போது சுக்கிர தசை நடப்பதால் படிப்பில் படிப்படியான வளர்ச்சியினை அடையமுடியும். சுக்கிரன் நீசம்பெற்றா லும் சுக்கிரன் நின்ற வீட்டு அதிபதி புதன், சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீச பங்க ராஜயோகம் உண்டு. தற்போது படிப்பில் கவனம் செலுத்த சொல்லுங்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு வேலைவாய்ப்பு அமையும். உங்கள் மகள் ஜாதகத்தில் 2-ல் ராகு 8-ல் செவ்வாய், கேது இருப்பது திருமண வாழ்க்கை ரீதியாக ஒரு நல்ல அமைப்பில்லை. பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்- கேதுவுக்கு மிக அருகில் அமையப்பெற்றால் திருமண வாழ்க்கைரீதியாக சிறுசிறு நிம்மதி குறைவை ஏற்படுத்தும். வேலை விஷயத்திற்கு முக்கியத்துவம் தருவதைவிட தாமதிக்காமல் திருமணம் செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேலைக்காக அதிகம் முயற்சிப்பது நல்லது. மணவாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும். வேலைவாய்ப்பு தானாக வந்துசேரும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்.
கேள்வி: நான் இஊ மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை கிடைக்குமா? அரசு பணியில் உயர் பதவிகள் (ஒடந, ஒஆந) கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று கூறுங்கள்? -சுந்தரேஷ், கோவை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் இணைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும். சூரியன்- குரு இணைந்து 10-ல் இருந்து சூரியன் ஆட்சிபெற்றிருப்பதால் அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை வாய்ப்பு அமையக்கூடிய யோகங்கள் உண்டு. உங்களுக்கு 20-9-2024 முதல் 6-ல் உள்ள ராகு தசை நடக்க இருப்பதால் வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மத்திய அரசு நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளில் நீங்கள் பங்குபெற்றால் ஒரு கௌரவமான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும்.
கேள்வி: என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும், எப்படிபட்ட வரன் அமையும் என்று கூறுங்கள்? -சுப்பிரமணியன், புதுக்கோட்டை.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதும், செவ்வாய் திரிகோண ஸ்தானமான 5-ல் இருப்பதும் நல்ல அமைப்பாகும். செவ்வாய்- கேது சாரம் பெற்று இருப்பதாலும், லக்னத்தில் கேது, ஏழில் ராகு இருப்பதாலும் அதிலும் குறிப்பாக 9-9-2025 முதல் கேது தசை நடக்க இருப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். தற்போது திருமணம் முயற்சிகள் மேற்கொண் டால் நல்லது நடைபெறக் கூடிய வாய்ப்பு கள் இருந்தாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். சொந்தத் தில் வரன் பார்ப்பதைவிட அந்நியத்தில் வரன் பார்ப்பது மிகமிக நல்லது. கேது ஆதிக்கம் அதிகமிருப்பதால் அந்நிய ஜாதி நபராக இருந்தாலும் தவறல்ல. எதிர்காலத்தில் சுக்கிர தசை வரும் பொழுது வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
கேள்வி: எனக்கு வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? பணப் பிரச்சினைகள் தீர என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -பிரதீப் நாராயணன், சென்னை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் மறைந்த தால் திருமண தாமதம் ஏற்பட்டது. தற்போது நடக்கும் சூரிய தசையில் குரு புக்தி 16-12-2023 முதல் நடைபெற இருப்பதால் குரு புக்தி தொடங்கியவுடன் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. டிசம்பருக்குப்பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும். உங்களுக்கு 8-ல் இருக்கக் கூடிய சூரிய தசை நடப்ப தால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சூரிய தசை நடப்பதால் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் உங்கள் பண கஷ்டங்கள் குறையும்.
கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -குமார், பவானி.
பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் 2-ல் கேது நட்சத்திரத்தில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது புதன் நீசம், வக்ரகதியில் அமையப்பெற்று புதன் தசை 10-8-2024 முடிய நடைபெறுவது அவ்வளவு நல்ல அமைப்பு என கூறமுடியாது. அடுத்து உங்க ளுக்கு கேது தசை நடைபெற இருப்பதால் திருமண யோகம் என்பது சற்று குறைவாக இருக்கிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்; நல்லது நடக்கட்டும். ஏழாம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பதால் விவாகரத்து பெற்ற பெண்ணையோ, மணவாழ்வில் பாதிப்பை எதிர்கொண்டு பெண்ணையோ முயற்சிக்கலாம் ஒருசில சாதகங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கேள்வி: என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தற்போது வேலை சரிவர இல்லை. அவருக்கு அங்கேயே வேறு நல்ல வேலை கிடைக்குமா அல்லது இந்தியா வந்து தொழில் செய்யலாமா என்று கூறுங்கள்? -சாய் ஈஸ்வரி.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் கணவருக்கு 10-ஆம் அதிபதி சனி 3-ல் வக்ரகதியில் இருப்பது வேலைக்கு போய் சம்பாதிக்கக்கூடிய ஜாதகம் ஆகும். தற்போது உங்கள் கணவருக்கு 3, 6-க்கு அதிபதியான புதன் 7-ல் ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்று புதன் தசையில் புதன் புக்தி 15-4-2025 முடிய நடக்கிறது. பொதுவாக ஒரு தசை யில் சுய புக்தி நடந்தால் பொருளாதார வருவாய் சற்று குறைவாக இருக்கும். தற்போது சுயபுத்தி நடப்பதால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 3, 6-க்கு அதிபதி தசை என்பதால் வெளியூர்மூலமாக அணுகூலங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு செல்லவும். அப்படி தொழில் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக ஜாதகப் பேரில் செய்வது அவ்வளவு சிறப்பு அல்ல. கூட்டுத் தொழிலாகவோ மனைவி பேரிலோ செய்வதுதான் சற்று சாதகமாக இருக்கும். ஏனென்றால் 10-ஆம் அதிபதி வக்ரகதியில் இருந்து, கூட்டு தொழில் ஸ்தானமான 7-ஆம் அதிபதி சுக்கிரன் திரிகோணம் பெற்று இருப்பதால் பெண்கள் பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ செய்யக்கூடிய தொழில் சற்று சாதகமான பலன்களை தருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சுவாதியில் பிறந்த உங்கள் கணவருக்கு முன்பு நடைபெற்ற சனி தசையைவிட தற்போது வந்திருக்கும் புதன் தசை சுய புக்திக்குப்பிறகு கண்டிப்பாக நல்ல முன்னேற் றத்தை கிடைக்கும்.
கேள்வி: எனக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்? -அந்தோனி, திருநெல்வேலி.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் 6-ல் உச்சம் பெற்றிருப்பதும் ஒரு சிறப்பான அமைப்பு என்றாலும் வக்ரம்பெற்ற புதன் தசையில் வக்ரம்பெற்ற சனி புக்தி 13-12-2024 முடிய நடைபெறுவதும், அடுத்து உங்களுக்கு கேது தசை நடைபெறுவதும் அணுகூலமற்ற அமைப்பாகும். கேது நின்ற வீட்டு அதிபதி சந்திரன் நீசம்பெற்று இருப்பதாலும், கேது தசை மூன்றாவது தசையாக நடப்பதாலும் கேது தசை சற்று சோதனை இருந்ததாக இருக்கும். அமையும் வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தற்போதைக்கு விட்டுக் கொடுத்து சென் றால் எதிர்காலத்தில் வர இருக்கக் கூடிய சுக்கிர தசையில் உங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் உச்சம் பெற்று 6-ல் இருப்பதால் சுக்கிர தசையில் உங்களது வாழ்க்கை நிலை மிகமிக நன்றாக இருக்கும். அடுத்து 9 வருட காலத்திற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு பொறுமையாக இருந்தால்தான் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, எதிலும் பொறுமை யோடு இருப்பது நல்லது.