ன் மகள் 10-ஆம் வகுப்பு படிக்கின் றாள். மேற்கொண்டு எந்தத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறுங்கள்? -கவிதா, ஆற்காடு.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் பெண்ணுக்கு குரு, புதன் வலுவாக இருப்பதால் கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் துறையில் சிறப்பாக விளங்கும் அமைப்பு, எதிர்காலத்தில் கல்வித்துறையில் சாதிக்கக்கூடிய அமைப்புகள், நவீன கரமானகல்வி களைப் படிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முயற்சி செய்தால் நல்லது நடக்கும்.

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -லட்சுமி, பாளையங்கோட்டை.

ss

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ல் செவ்வாய் அமையப்பெற்று 10-ஆம் அதிபதி புதன்- ராகு சேர்க்கைப்பெற்று 9-ல் இருக்கும்பொழுது பிறந் துள்ளார். உங்கள் மகன் ஜாதகத்தில் சனி- குரு பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 10-ஆம் அதிபதி 9-ல் ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் வெளியூர் தொடர்புடைய பணிகள், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய வாய்ப்புகள் வலுவாக இருக்கிறது. புதன், சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் தற்போது குரு 5-ல் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சூரியன் 8-ல் மறைந்து சனி சாரம் பெற்றிருப்பதால் அரசு சார்ந்த துறைகளைவிட வெளியூர், வெளிநாடு தொடர்புடைய பணிகள் சாதகமாக இருக்கும்.

உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைக்கவில்லை. எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? அல்லது தற்போது இருக்கும் பணியிலேயே தொடரலாமா என்று கூறுங்கள்? -மாதவி சிந்து, ஈரோடு.

மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத் தில் அமையப் பெற்று 12-ஆம் அதிபதி குரு பார்வை பெறுவ தால் வெளியூர், வெளிநாடு களுக்கு செல் லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 8-ல் இருக்கக்கூடிய சந்திர தசையில் 7-ல் வக்ரம் பெற்ற குரு புக்தி நடப்பதால் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. உங்களுக்கு சந்திர தசையில் புதன் புக்தி வருகின்றபொழுது அடுத்து இரண்டு வருடம் கழித்து வளமான பலன்கள் ஏற்படும். மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்கவும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலை யினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

இந்த ஜாதகருக்கு கல்வி யோகம் எப்படி யிருக்கிறது, எந்தத் துறையில் சாதிப்பார் என்று கூறுங்கள்? -பாரத், இராயபுரம்

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 4-ஆம் அதிபதி சூரியன்- புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று குரு வீடான மீன ராசியில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் அமையும். புதன் நீசம் பெற்று நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்ப தால் கல்வியில் முதலில் சில இடையூறு கள் ஏற்பட்டு அதன்பிறகு அனுகூலங்கள் உண்டாகும். புதன்- சுக்கி ரன் சேர்க்கை பெற்றிருப்பதால் நவீனகரமான கல்விகள், கம்ப்யூட்டர் தொடர்புடைய கல்விகள் படிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.