எனது மகனின் திருமணம் எப்போது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -ஸ்ரீதரன், கோவை.
கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- சுக்கிரன், குரு சேர்க்கை பெற்று 2-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது உங்கள் மகனுக்கு ராகு தசையில் சனி புக்தி 10-6-2025 முடிய நடக்கிறது. அடுத்து புதன் புக்தி தொடங்கும் சமயத்தில் நல்ல வரன் அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சனி புக்தி எப்படியிருக்கும்? -பார்த்தி, இராயபுரம்.
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் மறைந்து வக்ரகதியில் இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. களத்திர காரகன் சுக்கிரன் 10-ல் சூரிய
எனது மகனின் திருமணம் எப்போது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -ஸ்ரீதரன், கோவை.
கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- சுக்கிரன், குரு சேர்க்கை பெற்று 2-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது உங்கள் மகனுக்கு ராகு தசையில் சனி புக்தி 10-6-2025 முடிய நடக்கிறது. அடுத்து புதன் புக்தி தொடங்கும் சமயத்தில் நல்ல வரன் அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? சனி புக்தி எப்படியிருக்கும்? -பார்த்தி, இராயபுரம்.
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் மறைந்து வக்ரகதியில் இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. களத்திர காரகன் சுக்கிரன் 10-ல் சூரியன்- சந்திரன் சேர்க்கைப் பெற்றிருப்பது சாதகமான அமைப்புதான். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடப்பதால் சனி 7-ஆம் அதிபதி என்ற காரணத்தினால் உறவு இல்லாமல் அன்னியத்தில் வரன் தேட முயற்சித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரகதியில் இருப்பதாலும் சந்திர தசையில் சனி புக்தி என்பதாலும் தேவையற்ற தாமதங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது? -சுப்ரமணியன், தஞ்சாவூர்.
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் கேந்திரம் பெற்றிருப்பதும், சுக்கிரன் 9-ல் நீசம்பெற்றாலும் சுக்கிரன்- புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் திருமண விஷயத்தில் ஒரு தடைக்குப்பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சந்திர தசையில் குரு புக்தி 27-7-2025 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சுக்கிரன் நீச பரிவர்த்தனை பெற்றிருப்பதால் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒருசில தடைக்குப் பிறகு நல்லது நடக்கும். முத-ல் சிறிது காலம் தற்கா-க பணியில் இருந்துவிட்டு அதன்பிறகு ஒரு நல்ல பணியில் உட்காரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சூரியன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் அரசு சார்ந்த துறைகளில் முத-ல் தற்கா-க பணிபெற்று அதன்பிறகு ஒருசில அனுகூலங்கள் அடைய வாய்ப்பு உண்டு. சூரியன்- ராகு சாரம் பெற்று நீசம் பெற்றிருப்பதால் தடைக்குப்பிறகுதான் நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சொந்த வீடு எப்பொழுது அமையும்? -விஸ்வா, உளுந்தூர்பேட்டை.
மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். உங்கள் ஜாதகத்தில் 4-ல் குரு உச்சம் பெற்று இருப்பதாலும் சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதாலும் சொந்த வீடு யோகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது உங்கள் ஜாதகத்தில் புதன் தசையில் குரு வீட்டில் இருக்கக்கூடிய ராகு புக்தி நடப்பதால் மனைவி, பிள்ளைகளை இணைத்துக்கொண்டு சொத்து வாங்க முயற்சித்தால் வருகின்ற மே மாதத்துக்குபிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
வரும் காலத்தில் தொழில் எப்படியிருக்கும்? வீட்டையும், மருந்து கடையையும் விற்கலாமா? -நாகராஜன், சென்னை.
மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 5-ல் சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பதால் உங்கள் ஜாதகரீதியாக தொழில் அமைப்பு சற்று சாதகமாகதான் இருக்கும். உங்களுக்கு 2028 வரை ராகு தசை முடியும்வரை தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அடுத்த குரு தசை வருகின்றபொழுது உங்களது தொழில் முறையை சற்று மாற்றிக் கொள்ளலாம். அடுத்த மூன்று ஆண்டு கழித்து நீங்கள் வைத்துள்ள மருந்து கடையை மாற்றுவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளலாம். தற்போதைக்கு செய்யக்கூடிய தொழிலை செய்து வந்தால் நல்லபடியான பலன்களை அடையமுடியும். 2028 ஏப்ரலுக்கு பிறகு உங்களுக்கு 7-ல் இருக்கக்கூடிய குரு தசை வருகின்ற பொழுது உங்கள் வாழ்வில் சில மாற்றங் கள் ஏற்படும். அந்த நேரத்தில் தொழில் நிறுவனத்தை விற்றுவிட்டு வேற ஏதாவது செய்வதை பற்றி யோசிக்கலாம். தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது, செய்யக் கூடிய செயல்களை தொடர்ந்து செய்வது நன்மை தரும்.