Advertisment

பாலமுருகன் பதில்கள் 13.09.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-13092024

எனது கடன் எப்போது தீரும் என்று கூறுங்கள்? -சண்முகசுந்தரம், பன்ருட்டி.

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் கேது புக்தி 14-5-2025 முடிய நடக்கிறது. தற்போது கேது புக்தி நடப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் கடன் பிரச்சினைகள் இருக்கிறது. 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிவதும் அடுத்த சுக்கிர புக்தி வர இருப்பதும் சிறப் பான அமைப்பு என்ப தால் 2025 மே மாதத் திற்கு பிறகு உங்க ளுக்கு உள்ள கடன் கள் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நடப்பது சனி தசை என்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

Advertisment

எனது மகன் வெளிநாட்டி-ருந்து எப்போது திரும்பி வந்து என்னுடன் சேர்ந்து வாழ்வார்? -ரமணி, தொப்பூர்.

Advertisment

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த

எனது கடன் எப்போது தீரும் என்று கூறுங்கள்? -சண்முகசுந்தரம், பன்ருட்டி.

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் கேது புக்தி 14-5-2025 முடிய நடக்கிறது. தற்போது கேது புக்தி நடப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் கடன் பிரச்சினைகள் இருக்கிறது. 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிவதும் அடுத்த சுக்கிர புக்தி வர இருப்பதும் சிறப் பான அமைப்பு என்ப தால் 2025 மே மாதத் திற்கு பிறகு உங்க ளுக்கு உள்ள கடன் கள் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நடப்பது சனி தசை என்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

Advertisment

எனது மகன் வெளிநாட்டி-ருந்து எப்போது திரும்பி வந்து என்னுடன் சேர்ந்து வாழ்வார்? -ரமணி, தொப்பூர்.

Advertisment

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்போது ஜென்ம லக்னத் திற்கு 12-ல் உள்ள குரு- சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் அமையப் பெற்று 1-11-2031 முடிய குரு தசை நடக்கிறது. அடுத்து உங்கள் மகனுக்கு 12-ஆம் அதிபதி யான சனி பாவகரீதியாக 9-ல் அமையப் பெற்று சனி தசை நடைபெற இருக்கிறது. உங்கள் மகன் ஜாதகத்தில் பிறக்கின்றபொழுது 3-ல் ராகு இருந்தாலும் பாவக ரீதியாக 2-ல் ராகு இருக்கிறது. 2-ல் பாவ கிரகம் அமையப் பெற்று 12-ஆம் வீட்டிலுள்ள கிரகத்து டைய தசை நடப்பதாலும் அடுத்து 12-ஆம் அதிபதி தசை நடக்க இருப்பதாலும் பெரும் பாலும் வெளிநாட்டில் இருக்கக்கூடிய யோகம்தான் பலமாக இருக்கிறது. 2, 8-ல் பாவகரீதியாக பாவகிரகம் இருந்தால் அவர்களுக்கு கூட்டுக் குடும்பமாக வாழ்வதோ, பெற்றோரோடு இணைந்து வாழக்கூடிய அமைப்போ சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

aa

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எதிர்காலம் எப்படியிருக்கும்? -சுஜாதா, சென்னை.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் புதன்- சூரியன் சேர்க்கைப் பெற்றிருப்ப தால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக் கும் யோகம் உண்டு. மேஷ ராசியில் பிறந் திருப்பதாலும் சனி, செவ்வாய் சேர்க்கை பெற் றிருப்ப தாலும் பணிக்கு செல் கின்றபொழுது சற்று நிதானமாக செயல்பட்டால் படிப்படியான வளர்ச்சியை அடையமுடியும். தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி 13-1-2025 முடிய நடப்பதால் விரைவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் தசை நடப்பதால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும்.

கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்? திருமணம் எப்போது நடக்கும்? -கார்த்திக், சென்னை.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன்- சூரியன் சேர்க்கை பெற்று புதன், சூரியன் இருவரும் கேது நட்சத்திரத்தில் இருக்கின்றபொழுது பிறந் துள்ளீர்கள். உங்களுக்கு இதுநாள்வரை ராகு தசை நடை பெற்றது. தற்போதுதான் குரு தசையில் சுயபுக்தி 14-4-2024 முதல் நடக்கிறது. குரு தசையில் சுயபுக்தி நடப்பதால் உறவில்லாமல் அன்னியத்தில் திருமணத்திற் காக முயற்சித் தால் இந்த ஆண்டு இறுதிக் குள் நல்லது நடக்க வாய்ப் புண்டு. தற்போது லக்னாதிபதி குரு தசை தொடங்கி யிருப்பதால் வரும் நாட்களில் உங்களின் பொருளாதார நிலை மேம்பட்டு படிப்படியாக கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சனி- கேது சாரம் பெற்று வக்ரகதியில் இருப்பதாலும் சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் கேது சாரம் பெற்றிருப்பதாலும் கடன் வாங்குகின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

குரு தசை எப்படியிருக்கும்? எனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? -அண்ணாதுரை, ஈரோடு.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கின்றபொழுது குரு, சூரியன், புதன், சனி ஆகிய கிரகங்கள் பலம்பெற்றபொழுது பிறந் துள்ளீர்கள். இதுநாள்வரை நடைபெற்ற ராகு தசை முடிந்து தற்போது உங்கள் லக்னத்திற்கு 2, 5-க்கு அதிபதியான உச்சம் பெற்ற குரு தசை நடப்பதால் இனி உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும், வரவேண்டிய பணவரவுகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. உங்களுக்கு குரு தசையில் 9-3-2025 முடிய சுயபுக்தி நடப்பதால் அதற்கு அடுத்து வரக்கூடிய சனி புக்தி முதல் உங்களின் பொருளாதார நிலையானது சற்று சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்ள வும்.

bala130924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe