பாலமுருகன் பதில்கள் 13.06.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-13062025

என் மனைவி ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறாள். நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா அல்லது நான் மறுமணம் செய்யும் நிலை உண்டா? எப்பொழுது நல்ல நேரம் வருமென்று கூறுங்கள்? -அரிஹரன், அரியலூர்

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் இருப்பதும் 7-ல் சுக்கிரன் இருந்து குரு பார்வை பெறுவதும் நல்ல அமைப்பு என்றாலும் சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சந்திரனுக்கு 2-ல் உள்ள ராகு தசையில் குரு புக்தி 21-4-2026 முடிய நடக்கிறது. லக்ன ராசிக்கு 2-ல் பாவ கிரகம் இருந்து தசை நடந்தால் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தற்போது குருபுக்தி நடப்பதால

என் மனைவி ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறாள். நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா அல்லது நான் மறுமணம் செய்யும் நிலை உண்டா? எப்பொழுது நல்ல நேரம் வருமென்று கூறுங்கள்? -அரிஹரன், அரியலூர்

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் இருப்பதும் 7-ல் சுக்கிரன் இருந்து குரு பார்வை பெறுவதும் நல்ல அமைப்பு என்றாலும் சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சந்திரனுக்கு 2-ல் உள்ள ராகு தசையில் குரு புக்தி 21-4-2026 முடிய நடக்கிறது. லக்ன ராசிக்கு 2-ல் பாவ கிரகம் இருந்து தசை நடந்தால் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தற்போது குருபுக்தி நடப்பதால் பேச்சில் நிதானத்தோடு செயல்பட்டு இருவரும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் உங்கள் ஜாதகரீதியாக அமைப்புகள் நன்றாக இருக்கிறது. மனைவி ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கிறது என பார்த்தால்தான் தெளிவான முடிவினை கூற முடியும்.

ss

எனக்கு சொந்த வீடு பாக்கியம் உண்டா? எப்பொழுது அமையும் என்று கூறுங்கள்? -முத்துக்குமார், அரியலூர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்கனத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் ஆட்சிபெற்று தற்போது சுக்கிர தசையில் சுயபுக்தி 30-9-2025 முடிய நடக்கிறது. சுக்கிரன் வலுவாக இருந்து தசை நடப்பதால் சொந்தவீடு அமைவதற்கான வாய்ப்புகள் பலமாக இருக்கிறது. சொத்து வாங்குகின்றபொழுது தனியாக வாங்காமல் கூட்டாக முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப் புண்டு. தற்போது சுக்கிர தசையில் சுயபுக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ளேயே ஒரு நல்லது நடப்பதற்கான வாய்ப்பு கள் உங்களுக்கு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

எப்பொழுது திருமணம் நடைபெறும்? தற்பொழுது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமா? குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கும்? -எஸ்.ஆர். திருச்சி.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று சுக்கிர தசையில் சூரிய புக்தி 19-4-2026 முடிய நடக்கிறது. களத்திரகாரகன் செவ்வாய் 6-ல் அமையப்பெற்று 6-ஆம் அதிபதி புதன் 8-ல் அமையப்பெற்று 6, 8 பரிவர்த்தனை பெற்றிருக் கிறது. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் திருமண விஷயத்தில் ஒரு சின்ன தடங்கலுக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் ஜாதக ரீதியாக இருக்கிறது. சுக்கிரன் வக்ரகதியில் இருப்ப தால் சொந்தத்தில் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது மிகமிக நல்லது. 2026 ஜூனில் இருந்து 2027 ஜூன் உள்ள காலத்தில் ரேவதி நட்சத்திரம், மீன ராசிக்கு 5-ல் குரு செல்கின்றபொழுது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. சூரியன்- கேது சேர்க்கை பெற்றிருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற் கொள்வது நல்லது.

நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? -எஸ்.ஆர். திருச்சி.

27-5-1984-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியன் 10-ல் சுக்கிரன், ராகுவுடன். மேலும் தனாதிபதியும், விரயாதிபதியும் சேர்ந்திருக்க, அவர்களை சனி, செவ்வாய் பார்ப்பதால்தான் ஒரு நல்ல வேலை கிடைத்து கைகுளிர சம்பளம் வாங்கினோம் என்று அமையாமல் உள்ளது. இதில் நடப்பு விரயாதிபதி சந்திரன் தசை புதன் புக்தி. இதில் வேலையும் பண மும் கிடைத்து, உடனே கை நழுவியும் போய்விடும். உங்களுக்கு சந்திர தசை சுக்கிர புக்தியில் நல்ல நிரந்தர வேலையும், கையில் பணம் நிற்கு மளவுக்கு சம்பளமும் கிடைக்கும். நிரந்தர வேலை கிடைக்க, கேரள மாநிலம், பாலக்காடு அருகில், கல்பாத்தி லட்சுமி நாராயணப் பெருமாளை பிரார்த்தனை செய்யவும். முதல் சம்பளத்தில் பெருமாளுக்கு காணிக்கை செலுத்தவும்.

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe