Advertisment

பாலமுருகன் பதில்கள் 12.07.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-12072024

Balamurugan Answers 12.07.2024

Advertisment

(ஆண்) அரசு துறையில் வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -யுவராஜ், காஞ்சிபுரம்.

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்ன ராசிக்கு 10-ஆம் அதிபதியான சூரியன்- குரு வீடான தனுசு ராசியில் செவ்வாய், குரு, புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். சூரியன்- குரு சேர்க்கைப் பெற்றிருப்பதால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் ஒருநல்ல பணியில் உட்காரக்கூடிய யோகம் உண்டு. போட்டி தேர்வுகளில் தொடர்ந்து முயற்சி செய்வது நற்பலனைத் தரும். தற்போது புதன் தசை நடப்பதாலும் புதன்- குரு சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் கல்வித்துறை, பணப்புழக்கங்கள் தொடர்புடைய துறை, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறைகளில் தொடர் முயற்சியில் ஈடுபடுவது நற்பலனைத் தரும்.

என

எனது மகளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது மகளுக்கும் அவளுடைய கணவருக்கும் அவருடைய வீட்டாருக்கும் உறவு சரியாக இல்லை. இருவரும் சேர்ந்துவாழும் பாக்கியம் உள்ளதா என்று கூறுங்கள்? -சீனு வேங்கடகிருஷ்ணன்.

Advertisment

பதில்: உங்கள் மகள் சித்திரை நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார்கள். லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 10-ல் அமையப்பெற்று, களத்திரகாரகன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சிபெற்றிருப்பது சிறப்பான அமைப்புதான். லக்னத்திற்கு 7-ஆம் வீட்டில் கேது இருப்பதால் ஒரு சில நேரங்களில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. 2025 ஜனவரிக்கு பிறகு நல்லமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாப்பிள்ளை ஜாதகரீதியாக மக நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது சந்திரன்- கேது சாரம் பெற்று சந்திர தசை 11-8-2024 முடிய நடக்கிறது. உங்கள் மாப் பிள்ளை ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றிருப்பதாலும், 7-ஆம் அதிபதி 6-ல் மறைந்திருப்பதாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தற்போது நடக்கக்கூடிய சந்திர தசையைவிட அடுத்து வரவுள்ள செவ்வாய் தசையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு.

எனக்கு சொந்தமாகவுள்ள மனை மற்றும் குடோனை சரிசெய்து புதிய வீடு கட்ட ஆரம்பிக்கும்போது பலவித தடைகள் வந்து கட்டவிடாமல் தடுக்கிறது. எனக்கு எப்போது சொந்து வீடு கட்டும் யோகமுண்டு என்று கூறுங்கள்? -உமாமகேஸ்வரி, உளுந்தூர்பேட்டை.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சனி 3-ல் ஆட்சி பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தால் பழைய கட்டடத்தை புதுப்பித்து வாழக்கூடிய அமைப்புதான் ஏற்படும். உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. சனி தசை 16-5-2025 முடிய நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்று செவ்வாய், புதன் சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். 2025 மே மாதத்திற்குபிறகு சனி தசை முடிந்து புதன் தசை வருகின்றபொழுது வீடு கட்ட முயற்சிப்பது நன்மை தரும். நீங்கள் தனித்து முயற்சி செய்யாமல் குடும்ப உறுப்பினர் களுடன் இணைந்து செய்கின்றபொழுது நற்பலன் அடைய வாய்ப்பு உண்டு. தற்போது மன குழப்பங்கள் விலக ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பது நன்மை தரும்.

எனது மகனுக்கு 39 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -கண்ணன், சென்னை.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் கேது, 2-ல் சனி, 7-ல் ராகு இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. தற்போது கேது சாரம் பெற்ற சந்திர தசையில் சனி புக்தி 4-8-2024 முடிய நடக்கிறது. அடுத்து புதன் புக்தி வருகின்றபொழுது உறவில்லாமல் அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாலும், 7-ல் ராகு இருப்பதாலும் களத்திரகாரகன் சுக்கிரன் சனி சாரம் பெற்றிருப்பதாலும் வேற்று ஜாதிப்பெண், வேற்று மதத்து பெண்ணாக இருந்தாலும் தவறில்லை; உங்களுக்கு ஒரு நல்லது நடக்கவேண்டும். அது போல உங்களுக்கு 7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றபோது பிறந்திருப்பதால் திருமண முயற்சியில் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டு இருக்கும். தடங்கலுக்கு பிறகு மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நன்மை அளிக்கும். அடுத்து புதன் புக்தி வர இருப்பதால் 2024 ஆகஸ்டுக்கு பிறகு தீவிரமாக முயற்சி செய்யவும்; நல்லது நடக்கும்.

bala jothidam 12-07-2024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe