ப் கேள்வி: இவருக்குத் திருமண பிரார்ப்தம் உண்டா இல்லையா? திருமணம் எந்த தசாபுக்தி யில் நடக்கும் என்று கூறுங்கள்? -அருணாச்சலம், சேலம்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 8-ல் இருக்கக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பது திருமணத் தடையையும் தாமதத்தை யும் ஏற்படுத் தும் அமைப் பாகும். ராகு 8-ல் இருந்தா லும் பாவக ரீதியாக 7-ல் உள்ளார். 7-ஆம் அதிபதி குரு 6-ல் இருந்து ராகு நட்சத்திரத்தில் இருக்கிறார்.
ராகு நட்சத்திரத்தில் பிறந்ததால் சொந்தத்தில் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது. 12-5-2024 முதல் சனி மகா தசையில் சுக்கிர புக்தி நடக்கும் காலத்தில் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
ப் கேள்வி: இவருக்கு அடுத்துவரும் சுக்கிர தசையில் தொழில் சிறப்பாக அமையுமா, கடன் பிரச்சினைகள் விரைவில் தீருமா என்று கூறுங்கள்? -துரைராஜன், திண்டுக்கல்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது நடைபெறும் கேது தசை முடிந்து அடுத்துவரும் சுக்கிர மகா தசையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 10-ஆம் அதிபதி புதன் 4-ல் வக்ரகதியில் நிற்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் சொந்த தொழில் செய்வதைவிட ஏதாவது ஒரு பணியில் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செ
ப் கேள்வி: இவருக்குத் திருமண பிரார்ப்தம் உண்டா இல்லையா? திருமணம் எந்த தசாபுக்தி யில் நடக்கும் என்று கூறுங்கள்? -அருணாச்சலம், சேலம்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 8-ல் இருக்கக்கூடிய களத்திரகாரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பது திருமணத் தடையையும் தாமதத்தை யும் ஏற்படுத் தும் அமைப் பாகும். ராகு 8-ல் இருந்தா லும் பாவக ரீதியாக 7-ல் உள்ளார். 7-ஆம் அதிபதி குரு 6-ல் இருந்து ராகு நட்சத்திரத்தில் இருக்கிறார்.
ராகு நட்சத்திரத்தில் பிறந்ததால் சொந்தத்தில் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது. 12-5-2024 முதல் சனி மகா தசையில் சுக்கிர புக்தி நடக்கும் காலத்தில் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
ப் கேள்வி: இவருக்கு அடுத்துவரும் சுக்கிர தசையில் தொழில் சிறப்பாக அமையுமா, கடன் பிரச்சினைகள் விரைவில் தீருமா என்று கூறுங்கள்? -துரைராஜன், திண்டுக்கல்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது நடைபெறும் கேது தசை முடிந்து அடுத்துவரும் சுக்கிர மகா தசையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 10-ஆம் அதிபதி புதன் 4-ல் வக்ரகதியில் நிற்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் சொந்த தொழில் செய்வதைவிட ஏதாவது ஒரு பணியில் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நற்பலனை தரும். தொழில் தொடர்பான கிரக அமைப்பு சாதகமற்று இருந்தாலும் சுக்கிரன் சிறப்பாக இருந்து அடுத்து தசை நடப்பதால் அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கின்றபோது சனி வக்ரகதியில் இருப்பதால் ஜாதகர் பெயரில் இருக்கக்கூடிய கடன்களை அடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். கேது தசை நடப்பதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் கடன்கள் அதிகப்படியாக இருக்கிறது. அடுத்து வரக்கூடிய சுக்கிர மகா தசையில் படிப்படியாக கடன்கள் குறையும் என்றா லும் ஏழரைச்சனி முடிகின்றபொழுது பெருமளவு கடன்கள் குறையும். இரண்டு கிரகங்கள் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களிலும், தொழில் தொடர்பான விஷயங்களிலும் சற்று பக்குவமாக நடந்துகொள்வது மிகவும் நல்லது. பிறரை நம்பி பணம் கொடுக்கும் விஷயத்தில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.
ப் கேள்வி: என் மகளுக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது. மறுமணம் செய்யலாமா என்று கூறுங்கள்? -பிரபாகர்.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி உச்சம் பெற்று இருக்கிறது சிறப்பு என்றாலும், லக்ன ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருப்ப தும், களத்திரக் காரகன் எனக் கூறக்கூடிய செவ்வாய் வக்ரம் பெற்று இருப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பு இல்லை. ஒருவர் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்து சந்திர தசை நடக்கின்றபொழுது மண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலை, தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் மகள் கேது நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாலும், செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும் வருகின்ற வரனுக்கு கேது ஆதிக்கம் இருக்கின்ற மாதிரி பார்ப்பதோ, ஏழாம் அதிபதி அல்லது ஆண்களுக்கு களத்திரக்காரர்கள் வர்ணிக்க படக் கூடிய சுக்கிரன் வக்ரகதியில் இருக்கின்ற ஜாதகமோ பார்த்தால்தான் இருவருக்கும் ஒற்றுமை நன்றாக இருக்கும். தற்போது சந்திர தசையில் ராகு புக்தி 11-4-2024 முடிய நடக்கிறது. அதன் பின் வரக்கூடிய குரு புக்தி காலத்தில் மறுமணத்துக்கு முயற்சிதால் மேற்கூறிய வாறு இருக்கக்கூடிய கிரக அமைப்பு கொண்ட வரனை பார்த்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ப் கேள்வி: கடந்த 5 வருடங்களாக திருமணத்திற்கான முயற்சிகள் செய்தும் திருமணம் நடைபெறவில்லை. எப்போது திருமணம் நடக்கும். பெண் சொந்தத்தில் அமையுமா என்று கூறுங்கள்? -சரவணன், ராசிபுரம்.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் ஆட்சிபெற்று இருப்பது சிறப் பான அமைப் பாகும். 7-ல் சூரியன் சந்திரன் ஆகிய கிரகங்கள் இருப்பதால் உறவு தூரத்து உறவில் பெண் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் கால புருஷப்படி 2, 7-ஆம் ராசி களான ரிஷபம் துலாத்தில் சனி, ராகு இருப்ப தாலும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய இடை யூறுகள் ஏற்படு கிறது. குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும்.
ப் கேள்வி: தற்போது நடந்துகொண்டி ருக்கும் நடப்பு தசை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? நரேந்திரன், ஈரோடு.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது மீன லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சந்திரன் 9-ல் இருந்து 28-11-2022 முதல் சந்திர மகா தசை நடக்கிறது. சந்திரன் நீச்சம்பெற்றிருப்பது மட்டுமில்லாமல் கால புருஷப்படி எட்டாவது ராசியில் அமையப் பெற்று, பாவக ரீதியாக 8-ஆம் வீட்டில் அமையப் பெற்று சந்தர தசை நடை பெறுவதால் ஜல சம்பந்தப்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக சந்திரன் எட்டாம் வீட்டு தொடர்போடு இருந்து சந்திர தசா நடைபெறுவதால் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடு இருக்கவேண்டும், சந்திரனுக்கு நீசபங்க ராஜயோகம் இருந்தாலும் பலவீனமாக இருக்கக்கூடிய சந்திரன் என்ற காரணத்தினால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சாப்பாட்டில் கட்டுப்பாடோடு இருப்பது, இயற்கை உணவுகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற மனகுழப்பம் ஏற்படலாம். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: எனக்கு தொழிலும் சரியில்லை; வருமானமும் இல்லை. ஆறுமாத காலமாக மூலம் நோயால் அவதிபட்டு கொண்டிருக்கிறேன். எப்போது குணமாகும்? என் நிலைமை எப்போது சரியாகும் என்று கூறுங்கள்? -நடேசன், ராசிபுரம்.
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு தற்போது குருமகா தசையில் சுயபுக்தி முடிந்து சனி புக்தி நடக்கிறது. உச்சம்பெற்ற சனி என்பது நல்லது என்றாலும் ஏழு அதிபதி என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் ஆகும். கடக லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி தசையில் 7-ஆம் அதிபதி புக்தி என்ற காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், முதலீடு செய்து லாபத்தை பார்ப்பது என்பது சற்று கஷ்டம். அக்டோபர் 2023-க்குபிறகு குறிப்பாக ராகு- கேது பெயர்ச்சிப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும்.
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்?
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 5-ஆம் அதிபதி சந்திரன்- ராகு நட்சத்திரத்தில் இருப்பதாலும், புத்திர காரகன் குரு ராகு நட்சத்திரத்தில் இருப்பதாலும் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது சனி மகா தசையில் ராகு புக்தி 6-12-2023 முடிய நடக்கிறது. அடுத்து குரு புக்தி வருகின்ற நேரத்தில் குழந்தை பாக்கியத்திற் காக முயற்சித்தால் இறையருளால் நல்லது நடக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, குல தெய்வத்தை வேண்டிக்கொள்வது நன்மையை தரும்.