Advertisment

பாலமுருகன் பதில்கள் 10.01.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-10012025

இந்த ஜாதகருக்கு வருகின்ற சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கும்? நன்மையா அல்லது தீமையா என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள்? -இராஜசேகர், வேலூர்.

பதில்: அஸ்வினி நட்சத் திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது குரு தசை நடை பெற்றுக் கொண்டிருக்கி றது. 7-ல் உள்ள குரு தசை நடப்பது அனுகூலமான அமைப்பு. வருகின்ற 29-3-2025-ல் ஏற்படக்கூடிய சனிப்பெயர்ச்சிமூலமாக ஏழரைச்சனியில் விரையச் சனி தொடங்குகிறது. அஷ்ட மச்சனியில் பிறந்த ஒருவருக்கு ஏழரைச்சனி தொடங்கு வதால் வீண்செலவுகள், உடல் உபாதைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். ஏழரைச்சனி தொடங்குவது அவ்வளவு சிறப் பல்ல. சனிக்கு வழிபாடாக ஆஞ்சனேயர் மற்றும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

Advertisment

aa

என் தங்கை மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -இராஜசேகர், வேலூர்.

Advertisment

பதில்: மிர

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் தங்கை மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி 6-ல் இருந்தா லும் பாவகரீதியாக 7-ல் இருப்பது நன்மை தான். ஜாதகத்தில் 7-ல் சூரியன்- ராகு இணைந் திருப்பது பூர்வ ஜென்ம தோஷமாகும். ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றிருப்பது அவ்வளவு சிறப்பல்ல. தற்போது குரு தசையில் சந்திர புக்தி 15-2-2025 முடிய நடக்கிறது. தீவிரமாக முயற்சித்தால் 2025 மே மாதத் திற்குபிறகு குறிப்பாக குரு பெயர்ச்சிக்குபிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 7-ல் சூரியன், ராகு இருப்பதால் சொந்தத்தில் வரன் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது. சூரியன்- ராகு 7-ல் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -இராஜசேகர், வேலூர்.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி குரு 10-ல் ஆட்சிபெற்று புதன் சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்றாலும் களத்திரக்காரகன் செவ்வாய் வக்ரகதியில் இருப்பதும் 8-ல் கேது இருந்து கேது தசை 23-10-2026 முடிய நடப்பதும் அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல. 8-ல் கேது அமையப்பெற்று கேது நின்ற வீட்டு அதிபதி சனியும் நீசத்தில் இருந்து கேது சாரம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். கேது தசை காலத்தில் திருமணம் செய்வதைவிட அடுத்து வரக்கூடிய சுக்கிர தசையில் திருமணம் செய்வது நன்மை தரும். சனி, புதன் நீசம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கேது தசையில் திருமணம் நடைபெற்றாலும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய ஜாதகம் ஆகும். 2026 அக்டோபருக்குபிறகு சுக்கிர தசை வருகின்றபொழுது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பழனிக்குமார், இராமநாதபுரம்.

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்துக்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 4-ல் அமையப்பெற்று இருப்பதும், 10-ல் சூரியன் அமையப்பெற்று இருப்பதும் சந்திரன்- சூரியன் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டிருப்பதும், குரு பார்வை 10-ஆம் வீட்டுக்கு இருப்பதும் சாதகமான அமைப்பாகும். மகர ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதால் நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது. 2025 மார்ச்சுக்குபிறகு ஏழரைச்சனி முடிந்தபிறகு ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் சற்று தாமதமாக அரசு சார்ந்த இடங்களில் நல்ல வாய்ப்பு ஏற்படக்கூடிய யோகங்கள் உண்டு. ராகு பாவகரீதியாக 12-ல் இருப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக நல்லது நடக்க வாய்ப்புண்டு. 7-ஆம் அதிபதி செவ்வாய் 12-ல் அமைய பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகி உள்ளது. 10-ல் சுக்கிரன் இருந்து குரு பார்ப்பது நல்ல அமைப்பு என்பதால் திருமண முயற்சிகளை மேற்கொண்டால் 2025 மே மாதத்திற்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமா, வருமானம் அதிகரிக்குமா? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பிரதீப் நாராயணன், பல்லாவரம்.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சூரிய தசையில் சனி புக்தி 30-7-2025 முடிய நடக்கிறது. 8-ல் சூரியன் அமையப்பெற்று தசை நடப்பதால் வேலையில் சற்று எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை இருக்கும். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 29-3-2025-ல் அஷ்டமச்சனி முடிவதால் அதன்பின் வேலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. களத்திரகாரகன் சுக்கிரன் 8-ல் மறைந்து இருப்பதாலும் சுக்கிரனுக்கு மிக அருகாமையில் கேது இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. திருமண விஷயத்தில் சொந்தத்தில் பார்க்காமல் வேற்று ஜாதிப் பெண் பார்ப்பது சற்று சாதகப் பலனை தரும். தற்போது சூரிய தசை நடப்பதால் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

bala100125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe