பாலமுருகன் பதில்கள் 08.11.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-08112024

எனது ஆராய்ச்சி படிப்பு முடித்து பட்டம் எப்போது பெறுவேன்? திருமணம் எப்போது நடக்கும்?

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 5-ல் உள்ள குரு தசையில் கேது புக்தி 14-11-2024 முடிய நடக்கிறது. குரு- சனி பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது நடை பெறக் கூடிய கேது புக்தி முடிந்து அடுத்து சுக்கிர புக்தி வருகின்றபொழுது உங்களுடைய ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் 7-க்கு அதிபதி நீசமாகி பரிவர்த்தனைப் பெற்றிருப்பதாலும் சுக்கிரன் 6-ல் இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. அடுத்த சுக்கிர புக்தி நடைபெற இருப்பதால் 2025-ல் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

நான் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிகின்றேன். எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -ஸ்ரீசூரஜ், சென்னை.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்துக்கு 10-ஆம் அதிபதி சனி ஜென்ம

எனது ஆராய்ச்சி படிப்பு முடித்து பட்டம் எப்போது பெறுவேன்? திருமணம் எப்போது நடக்கும்?

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 5-ல் உள்ள குரு தசையில் கேது புக்தி 14-11-2024 முடிய நடக்கிறது. குரு- சனி பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது நடை பெறக் கூடிய கேது புக்தி முடிந்து அடுத்து சுக்கிர புக்தி வருகின்றபொழுது உங்களுடைய ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் 7-க்கு அதிபதி நீசமாகி பரிவர்த்தனைப் பெற்றிருப்பதாலும் சுக்கிரன் 6-ல் இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. அடுத்த சுக்கிர புக்தி நடைபெற இருப்பதால் 2025-ல் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

நான் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிகின்றேன். எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -ஸ்ரீசூரஜ், சென்னை.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்துக்கு 10-ஆம் அதிபதி சனி ஜென்ம லக்னத்தில் சூரியன், ராகு, புதனுடன் சேர்க்கைப் பெற்றிருக்கிறது. சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சனி, புதன் சேர்க்கைப் பெற்றிருப்பது நல்ல அமைப் பாகும். தற் போது நடை பெறக்கூடிய சுக்கிர தசை முடிந்து 25-3-2025 முதல் சூரிய தசை தொடங்க இருக்கிறது. சூரிய தசை தொடங்கும் காலத்தில் அரசு சார்ந்த இடங்களில் வேலைக்காக முயற்சித்தால் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சனி- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் வெளியூர் மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேலும் அனுகூலம் உண்டாகும். 2025 மே மாதத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ss

இவரின் மனைவி பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள்? -விஸ்வேஸ்வரன், கடலூர்.

பதில்: மிதுன லக்னம், ரேவதி நட்சத் திரம், மீன ராசியில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்திற்கு 7-ல் ராகு அமையப் பெற்று 7-ஆம் அதிபதி குரு- கேது நட்சத்திர மான மகத்தில் இருப்பதும், களத்திரகாரகன் சுக்கிரன் கேது நட்சத்திரமான அஸ்வினில் 2-ல் இருப்பதும் நல்ல அமைப்பில்லை. குறிப்பாக 7-ஆம் அதிபதியும், களத்திரகாரகனும் கேது நட்சத்திரத்தில் இருந்தால் அவர்களுக்கு திருமண வாழ்வில் பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது. இதன் காரணமாககூட முதல் திருமணத்தில் பிரிவினை ஏற்பட்டிருக்கும். சுக்கிரன், குரு- கேது நட்சத்திரத்தில் இருப்பதால் வரக்கூடிய பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் கேது நட்சத்திரத்தில் இருப்பதுபோல் பார்த்தால் சற்று சாதகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது நடைபெறக்கூடிய சூரிய தசையில் சனி புக்தி முடிந்து 2025 ஜூலைக்கு பிறகு லக்னாதிபதி புதன் புக்தி நடக்கும் பொழுது மறுமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைப் பதற்கான வாய்ப்பு உள்ளதா? திருமண முயற்சி களை எப்போது மேற்கொள்ளலாம் என்று கூறுங்கள்? -ஜீவானந்தம், பண்ருட்டி.

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 10-ஆம் அதிபதி குரு லக்னத்திற்கு 3-ஆம் வீட்டில் உள்ளார். ஜீவன காரகன் சனி வக்ரகதியில் லக்னத்தில் உள்ளார். ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலும், ஜீவனகாரகன் சனியுடன் சூரியன் இருந்தாலும் அரசு வேலை எனலாம். உங்கள் மகள் ஜாதகத் தில் 10-ஆம் அதிபதி 3-ல் இருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங் களில் நல்ல வேலைகள் கிடைப்பதற் கான வாய்ப்பு உள்ளது. குரு 10-க்கு அதிபதி என்பதால் வங்கிப் பணி, பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளலாம். உங்கள் மகளுக்கு தற்போது கேது தசை நடக்கிறது. காலபுருஷபடி 7-ஆவது ராசியான துலா ராசியில் அமையப்பெற்ற கேது தசை நடப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 7-லோ, ராசிக்கு 2, 7-லோ கால புருஷபடி 2, 7-ஆம் பாவமான துலாத்திலோ கேது இருந்து தசை நடக்கின்றபொழுது திருமணம் முயற்சிகள் சுணக்கத்தை தரும். 2-12-2026 முதல் சுக்கிர தசை தொடங்க இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து சுக்கிர தசை தொடங்குகின்றபொழுது திருமண முயற்சிகள் மேற்கொண்டால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.

என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? சொந்தத்தில் வரன் அமையுமா? -விஜய ராமு, சென்னை.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- ராகு நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் ராகு சேர்க்கை பெற்றிருக்கிறார். களத்திர காரகன் சுக்கிரன் நீசம் பெற்றிருக்கின்றபொழுது பிறந்துள்ளார். பிறந்தது கேதுவின் நட்சத்திரமாகும். அடுத்து 5-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் உள்ளார். இப்படிப்பட்ட அமைப்பில் சொந்தத்தில் வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் இல்லை. உறவில்லாமல் அந்நியத்தில் தான் வரன்கள் அமையும். தற்போது சந்திர தசை யில் ராகு புக்தி நடக்கிறது. ராகு புக்தி சுனக் கத்தை தந்தா லும் செவ்வாய் நட்சத்திரத்தில் இருப்பதால் வரும் நாட்களில் தீவிர முயற்சிகள் மேற் கொண்டால் 2025 தொடக்கத்தில் சொந்தமில் லாமல் அந்நியத்தில் ஒரு நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. 7-ஆம் அதிபதி ராகு சாரம் பெற்றிருப்ப தாலும், கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர தசை நடப்ப தாலும் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.

bala081124
இதையும் படியுங்கள்
Subscribe