பாலமுருகன் பதில்கள் 07.03.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-07032025

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும் என்று கூறுங்கள்? -கவிதா, ஆற்காடு.

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 5-ல் அமையப்பெற்று 10-ல் குரு இருக்கின்றபொழுது பிறந்துள்ளீர்கள். இதன்காரணமாக கல்வித்துறை, வங்கிப்பணி, பணப்புழக்கங்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், கம்ப்யூட்டர் தொடர்புடைய பணிகளுக்கான வாய்ப்புகள் உண்டு. 10-ல் சூரியன் இருந்தாலோ 10-ஆம் அதிபதி சூரியன் சேர்க்கை பெற்றாலோ தான் அரசு பணி என கூறலாம். உங்களுக்கு அப்படிப்பட்ட அமைப்பில்லை. தனியார் துறைகளில் முயற்சிசெய்வது- குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் முயற்சிசெய்வது நன்மை தரும்.

7-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்ப தாலும், ராகு தசை நடப்பதாலும் சொந்த மில்லாமல் அன்னியத்தில் வரன் பார்ப்பது, ராகு தசையில் கேது புக்தி 1-9-2025 முடிய நடக்கிறது. அடுத்த சுக்கிர புக்தி நடக்க இருப்பதால் சுக

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும் என்று கூறுங்கள்? -கவிதா, ஆற்காடு.

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 5-ல் அமையப்பெற்று 10-ல் குரு இருக்கின்றபொழுது பிறந்துள்ளீர்கள். இதன்காரணமாக கல்வித்துறை, வங்கிப்பணி, பணப்புழக்கங்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், கம்ப்யூட்டர் தொடர்புடைய பணிகளுக்கான வாய்ப்புகள் உண்டு. 10-ல் சூரியன் இருந்தாலோ 10-ஆம் அதிபதி சூரியன் சேர்க்கை பெற்றாலோ தான் அரசு பணி என கூறலாம். உங்களுக்கு அப்படிப்பட்ட அமைப்பில்லை. தனியார் துறைகளில் முயற்சிசெய்வது- குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் முயற்சிசெய்வது நன்மை தரும்.

7-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்ப தாலும், ராகு தசை நடப்பதாலும் சொந்த மில்லாமல் அன்னியத்தில் வரன் பார்ப்பது, ராகு தசையில் கேது புக்தி 1-9-2025 முடிய நடக்கிறது. அடுத்த சுக்கிர புக்தி நடக்க இருப்பதால் சுக்கிர புக்தி காலத்தில் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

@

மேற்படிப்பு எந்தத் துறையில் படிக்கலாம்? அரசு உத்தியோகமா? தனியார் துறையா? வெளிநாட்டு சம்பாத்தியமா என கூறுங்கள்! -திவாகர், மேலூர்.

ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 4, 5-க்கு அதிபதியான சுக்கிரன், புதன் இணைந்து 9-ல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பதால் கம்ப்யூட்டர், மருந்து, கெமிக்கல் தொடர்பு டைய துறைகளில் உயர் கல்விக்கான முயற்சி கள் மேற்கொள்ளலாம். குறிப்பாக வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு களும் ஜாதகரீதியாக உண்டு.

10-ஆம் அதிபதி 6-ல் நீசம்பெற்று சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் ஜாதகருக்கு பிறந்த ஊரைவிட வெளிமாநிலங்கள், வெளி நாடு தொடர்புடைய பணிகளுக்கான வாய்ப்புகள் உண்டு. தனியார்துறைமூலமாக அனுகூலங்கள் உண்டாகும். தற்போது கேது தசை நடப்பதால் தேவையற்ற இடையூறுகளை சந்திக்க நேரிடும். 13-1-2031 முதல் சுக்கிர தசை நடக்க இருப்பதால் சுக்கிர தசை தொடங்குகின்றபோது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

நான் கஒஈ ஏஜென்ட். இதுவரை நிரந்திர வேலையும் இல்லை. நிரந்திர வருமானமும் இல்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சுக்கிர தசையில் குரு புக்தி எப்படியிருக்கும்? -ஆறுமுகம், மந்தைவெளி.

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி, புதன் வக்ரகதியில் இருக்கும் போது பிறந்து உள்ளீர்கள். கிரகங்கள் வக்ரம் பெற்றால் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை இருக்கும். உங்களுக்கு தற்போது 5-ல் இருக்கக்கூடிய சுக்கிர தசையில் குரு புக்தி 27-9-2025 முடிய நடக் கிறது. மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 3, 8-க்கு அதிபதி யான சுக்கிர தசை என்பதால் பெரிய அளவில் அனுகூலங் கள் ஏற்பட இடையூறுகள் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்பு களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தற்போது சுக்கிர தசையில் சுக்கிரனுக்கு பகை கிரகமான குருபுக்தி நடப்பதால் எதிலும் நிதான மாக செயல்படுவது நல்லது.

அடுத்து உங்களுக்கு சுக்கிர னுக்கு 8-ல் இருக்கக்கூடிய சனி புக்தி நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. குரு கோட்சாரம் சனிக் கோட்சாரம் சாதக மற்று இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது, மகாலட்சுமி வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

எனக்கு நன்றாகப் படிப்பு வருமா? என்னால் என் தகப்பனுக்கு யோகம் உண்டா என்று கூறுங்கள்? -ஜெயஸ்ரீ, ஆடுதுறை.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு புதன் ஆட்சி, உச்ச வீடான கன்னியில் இருப்ப தால் படிப்பு சிறப்பாக வரக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. புதன் வக்ர கதியில் இருப் பதால் ஒருசில தடைக்குப் பிறகு படிப் பில் அனு கூலங்கள் இருக்கும். பிறக்கின்றபொழுது சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பது தந்தைக்கு அவ்வளவு சிறப்பு என கூறமுடியாது. தந்தைவழி உறவினர்வகையில் ஒற்றுமை குறைவு, தந்தைக்கு உடல்ரீதியாக பாதிப்பு களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குல தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது. தற்போது சந்திர தசையில் கேது புக்தி 21-7-2025 முடிய நடப்பதால் தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். பெருமாள் வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

என் மகளுக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? -பாலகிருஷ்ணன், கோவை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு. தற்போது செவ்வாய் தசையில் கேது நட்சத்திரத்திலுள்ள சனி புக்தி வரும் 23-10-2025 முடிய நடப்பது சாதக மற்ற அமைப்பாகும். அடுத்து புதன் புக்தி தொடங்குகின்றபொழுது சிறப் பான மண வாழ்க்கை அமையும் யோகமுண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala070325
இதையும் படியுங்கள்
Subscribe