எனக்கு பெண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டா? எப்பொழுது பிறக்கும் என்று கூறுங்கள்? -ஆனந்தகிரி, மயிலாடுதுறை.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி குரு 3-ல் நீசம் பெற்றிருப்பது கடுமையான புத்திர தோஷம் என்றாலும் நவாம்சத்தில் உச்சத்தில் இருப்பது நல்ல அமைப் பாகும். 5-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் ஆகிய பெண் கிரகங்கள் இருப்பதால் உங்கள் ஜாதகரீதியாக பெண் குழந்தை யோகம் இருக்கிறது. தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி 6-8-2025 முடிய நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக் குள் முயற்சித் தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.
திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -சரவணன், விழுப்புரம்.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 2-ல் இருப்பதும், களத்திர காரகன் சுக்கிரன் 12-ல் இருந்தாலும் பூர நட்சத்திரத்தில் இருப்பதும் அனுகூல மான அமைப் பாகு
எனக்கு பெண் குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டா? எப்பொழுது பிறக்கும் என்று கூறுங்கள்? -ஆனந்தகிரி, மயிலாடுதுறை.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத் தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி குரு 3-ல் நீசம் பெற்றிருப்பது கடுமையான புத்திர தோஷம் என்றாலும் நவாம்சத்தில் உச்சத்தில் இருப்பது நல்ல அமைப் பாகும். 5-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் ஆகிய பெண் கிரகங்கள் இருப்பதால் உங்கள் ஜாதகரீதியாக பெண் குழந்தை யோகம் இருக்கிறது. தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி 6-8-2025 முடிய நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக் குள் முயற்சித் தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வும்.
திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -சரவணன், விழுப்புரம்.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 2-ல் இருப்பதும், களத்திர காரகன் சுக்கிரன் 12-ல் இருந்தாலும் பூர நட்சத்திரத்தில் இருப்பதும் அனுகூல மான அமைப் பாகும். உங்க ளுக்கு தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி 13-8-2026 முடிய நடக்கிறது. தற்போது சந்திர புக்தி நடப்ப தால் திருமண முயற்சிகளை மேற்கொண்டால் சம வயதுள்ள பெண்ணை பார்க்கின்றபொழுது நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 2-ல் ராகு 8-ல் கேது இருந்தாலும் பாவகரீதியாக 3-ல் ராகு 9-ல் கேதுவாக இருப்பதால் பெரிய கெடுதிகள் இல்லை.
எனக்கு ஒன்றரை ஆண்டுகள் மேலாக Herpes Zoster வைரஸ் நோயினால் அவதிப் பட்டுவருகின்றேன். இந்த நோய் எப்பொழுது குணமாகும்? குடும்ப ஒற்றுமை எப்பொழுது சீராகும் என்று கூறுங்கள்? -இராஜசேகர், சென்னை.
உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் ராகு புக்தி 30-4-2026 முடிய நடக்கிறது. விருச்சிக லகனத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் ராகு- கேது நட்சத்திரமான மூலத்தில் அமையப் பெற்று குடும்ப ஸ்தானமான 2-ல் இருப்ப தால் கண்டு பிடிக்க முடியாத உடல் உபாதைகள், அலர்ஜி பிரச்சினை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, மன அமைதி இல்லாத நிலை ஏற்படும். ராகு புக்தி நடப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது, இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. 2026 ஏப்ர-ல் ராகு புக்தி முடிந்து குரு புக்தி வருகின்றபொழுது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப ஒற்றுமையும் பலப்படும். தற்போதைக்கு அம்மன் வழிபாடு. துர்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
(பெண்) இந்த ஜாதகருக்கு திருமணத்தில் பிரச்சினை ஏற்படுமா? என்ன படிக்கலாம் என்று கூறுங்கள்? -விஸ்வா, சென்னை.
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 4-ஆம் அதிபதி குரு- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று இருப்பதாலும், புதன் லக்னத்திற்கு 8-ல் இருந்தாலும் சந்திரனுக்கு 4-ல் இருப்பதால் சிறப்பான கல்வி யோகம், கல்வியில் நல்ல முன்னேற்றம், நன்கு படித்து சிறப்பாக விளங்கக்கூடிய அமைப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக குரு- சுக்கிரன் சேர்க்கை பெற்று தற்போது சுக்கிர தசை 7-5-2033 முடிய நடப்பதால் கல்வியில் முன்னேற்றம், ஜாதகி சார்ந்த குடும்பத்தில் பொருளாதார அனுகூலங்கள் இருக்கும். உங்கள் மகளுக்கு தற்போது 12 வயதுதான் ஆகிறது. நீங்கள் திருமணத்தை பற்றி தற்போது கேட்டு உள்ளீர்கள். எந்த ஒரு ஜாதகத்திற்கும் எது சம்பந்தமாக ஜாதகம் பார்க்கிறோமோ அதற்கான காலத்தில் பார்த்தால்தான் சிறப்பு. 12 வயதான பெண்ணுக்கு திருமணத்தைப் பற்றி தற்போது பேசுவது அவ்வளவு சிறப்பு அல்ல. குறிப் பாக ஜோதிடம் பார்க்கின்றபொழுது அடுத்த ஓரிரு வருடத்தில் நடக் கக்கூடிய கேள்விகளுக்கு தான் முக்கியத் துவம் கொடுத்து பார்க்கவேண்டும். தற்போது சுக்கிர தசை நடப்பதால் இந்த பெண் ணுடைய வாழ்க்கை அமைப்பானது வருகின்ற நாட்களில் சிறப்பாக இருக்கும். கவலைப்பட வேண்டாம். திருமணத்தைப் பற்றி பார்ப் பதற்கு குறைந்தது அடுத்து பத்து வருடம் கழித்து கேட்க வேண்டிய கேள்வியை தற்போது நீங்கள் கேட்கிறீர்கள் தயவு செய்து கேள்வி கேட்கக்கூடிய நேயர்கள் அடுத்து ஓரிரு வருடத்தில் நடக்கக்கூடிய விஷயத்தைப் பற்றி கேள்வியாக கேட்கின்றபொழுது பதில் சொல்வதற்கு வசதியாக இருக்கும்.
என் மகன் இஞ்சினியரிங் இறுதி ஆண்டு படிக்கிறார், இவரது மேற்படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள்? -சரஸ்வதி, மதுரை.
ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 4-ஆம் அதிபதி புதன் 3-ல் இருந்தாலும் சந்திரன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். 4-ஆம் வீட்டில் சூரியன்- செவ்வாய் நட்சத்திரத்தில் இருப்பது, உடன் சனி இருப்பதெல்லாம் படிப்பு ரீதியாக சாதிக்கக்கூடிய அமைப்பு தான். புதன்- செவ்வாய் நட்சத்திரத் தில் இருப்பதா லும் 5-ஆம் அதி பதி சந்திரன் உச்சம் பெற்றி ருப்பதாலும் ஜாதகருக்கு மேற்படிப்பு யோகம் உண்டு. ஜாதகருக்கு 2-ல் இருக்கக்கூடிய ராகு தசை தற்போது நடப்பதால் மேற்படிப்புக் காக வெளியிடங் களில் தங்கி படிக்கக்கூடிய அமைப்பும் அல்லது வெளிமாநிலங்கள், வெளி நாடுகள் சென்று படிக்கும் யோகம் உண்டு. தற்போது ராகு தசை நடப்பதால் வெளியிடங்களுக்கு செல்வதுமூலம் கண்டிப்பாக ஒரு வளர்ச்சி கிடைக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்; எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.