Advertisment

பாலமுருகன் பதில்கள் 06.09.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-06092024

எனக்கு மூன்று பிள்ளைகள். தற்போது எனக்கு ராகு தசை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் என் பிள்ளைகளின் படிப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றை சிறப்பாக செய்துமுடிப்பேனா என்று கூறுங்கள்? -சக்திவேல், சென்னை.

Advertisment

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 2-ல் ராகு சந்திரன் சேர்க்கை பெற்று அமைந்து 20-5-2037 வரை ராகு தசை நடக்கிறது. 2-ல் ராகு இருந்து ராகு தசை நடந்தால் குடும் பத்தில் நிம்மதிக்குறைவு, ஒற்றுமைக் குறைவு உண்டாகும். ராகு- குரு வீட்டில் இருப்பதால் படிப்படியான வளர்ச்சிகளையும் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சூழ்நிலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப் புண்டாகும். பிள்ளைகள் படிப்புக் காகவோ, வேலைக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகலாம். ராகு தசை நடப்பத

எனக்கு மூன்று பிள்ளைகள். தற்போது எனக்கு ராகு தசை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் என் பிள்ளைகளின் படிப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றை சிறப்பாக செய்துமுடிப்பேனா என்று கூறுங்கள்? -சக்திவேல், சென்னை.

Advertisment

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 2-ல் ராகு சந்திரன் சேர்க்கை பெற்று அமைந்து 20-5-2037 வரை ராகு தசை நடக்கிறது. 2-ல் ராகு இருந்து ராகு தசை நடந்தால் குடும் பத்தில் நிம்மதிக்குறைவு, ஒற்றுமைக் குறைவு உண்டாகும். ராகு- குரு வீட்டில் இருப்பதால் படிப்படியான வளர்ச்சிகளையும் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சூழ்நிலை காரணமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப் புண்டாகும். பிள்ளைகள் படிப்புக் காகவோ, வேலைக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகலாம். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற் கொள்வது உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு நிதானதோடு செயல்படுவதன்மூலமாக குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், திருமணம் போன்ற விஷயங்கள் அவர்களுடைய ஜாதகத்தை பொறுத்துதான் பலன் அமையும்.

Advertisment

aa

எனக்கு எப்போது நிரந்திர வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? -விக்னேஷ்வரன், பன்ருட்டி.

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு வக்ரகதியில் அமையப் பெற்றிருப்பதும், ஜீவனக்காரகன் சனி வக்ர கதியில் அமையப்பெற்று சந்திரன் சேர்க்கைப் பெற்றிருப்பதும் அவ்வளவு சிறப்பு என கூற முடியாது. மேலும் உங்களுக்கு மூன்றாவது தசை யாக ராகு தசை தற்போது நடந்து கொண்டிருப் பதால் கிடைக் கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலை யினை அடை யக்கூடிய யோக முண்டு. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் மனைவிமூலமாக நல்ல ஒரு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும் ஜென்ம லக்னத்தில் ராகு, 7-ல் கேது அமையப்பெற்று 7-8-2031 முடிய ராகு தசை நடப்பதால் திருமணம் அமைந்தாலும் விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தற்போது நடக்கக்கூடிய ராகு தசையில் கேது புக்தி முடிந்து, 23-2-2025 முதல் சுக்கிரன் புக்தி ஆரம்பிக்கின்றபொழுது திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு தசை நடப்பதால் மணவாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வாகனம் விற்றது சம்பந்தமாக என்மீது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. வழக்கு வெற்றிபெறுமா என்று கூறுங்கள்? -பாலகிருஷ்ணன், சுரண்டை.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது குரு மகா தசையில் உச்சம் பெற்ற சனி புக்தி நடப்பதால் உங்கள்மீது உள்ள வழக்குகளில் இருந்து விரைவில் விடுபட்டு மன நிம்மதி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் குரு- கேது சேர்க்கை பெற்று, குரு வக்ரகதியில் அமையப் பெற்று, குரு தசை சுயபுக்தி காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகியுள்ளது. தற்போது குரு தசை சுயபுக்தி முடிந்து சனி புக்தி நடப்பதால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழி பாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

எனக்கு அரசு பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்? -சுகன், பன்ருட்டி.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ஆம் வீட்டில் ராகு சேர்க்கைப் பெற்றுள்ளது. 12-ஆம் அதிபதி சந்திரன் 9-ல் குரு, சனி சேர்க்கைப் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நிலைதான் உண்டு. அரசு சம்பந்தப் பட்ட விஷயங் கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என கூறமுடியாது. சிம்ம லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 9-ல் வக்ரகதியில் அமையப்பெற்று உடன் குரு வக்ரகதியில் இருப்பது திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருசில தடைக்குப்பிறகு அனுகூலங்களை ஏற்படுத் தக்கூடிய அமைப்பாகும் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருப்பதாலும் சனி வக்ரகதியில் இருப்பதாலும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உறவில்லாமல் அன்னியத்தில் வரன் பார்க்கின்றபொழுது நல்லது நடக்க வாய்ப்புண்டு. தற்போது உங்களுக்கு சந்திர தசையில் சந்திர புக்தி 28-5-2025 முடிய நடப்பதால் சுயபுக்திக்கு பிறகு வாழ்வில் சில மாற்றங்கள் திருமணம் கைகூடும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனு கூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

bala060924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe