பாலமுருகன் பதில்கள் 06.06.2025

/idhalgal/balajothidam/balamurugan-answers-06062025

எனக்கு தொடர்ந்து உடல் எடை குறைந்து கொண்டே வருகின்றது, மருத்துவர்களாலும் என்ன நோய் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இது எப்பொழுது சரியாகும். வரும் நாட்களில் ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

மேஷ லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசியில் பிறந்த உங்களுக்கு சந்திரன் 4-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் தேய்பிறை யில் பிறந்து சந்திரன் 6-ஆம் அதிபதி நட்சத்திரத்தில் அமையப் பெற்று தசை நடைபெறுவதால் உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. சந்திரனுக்கு அருகில் ராகு இருப்பதும் அவ்வளவு சிறப்பு எனக் கூறமுடியாது. தேவையற்ற குழப்பம், உடலில் நீர

எனக்கு தொடர்ந்து உடல் எடை குறைந்து கொண்டே வருகின்றது, மருத்துவர்களாலும் என்ன நோய் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இது எப்பொழுது சரியாகும். வரும் நாட்களில் ஆரோக்கியம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பெயர் வெளியிட விரும்பாத வாசகர், சென்னை.

மேஷ லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசியில் பிறந்த உங்களுக்கு சந்திரன் 4-ல் ஆட்சி பெற்றிருந்தாலும் தேய்பிறை யில் பிறந்து சந்திரன் 6-ஆம் அதிபதி நட்சத்திரத்தில் அமையப் பெற்று தசை நடைபெறுவதால் உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. சந்திரனுக்கு அருகில் ராகு இருப்பதும் அவ்வளவு சிறப்பு எனக் கூறமுடியாது. தேவையற்ற குழப்பம், உடலில் நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். இதன் காரணமாக உடல் எடை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதன்மூலமாகவும் தொடர்ந்து பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாகவும் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும்.

aa

கடந்த காலங்களில் சந்திர தசையில் ராகு புக்தி நடந்தபொழுது அதிக பாதிப்பு இருந்திருக்கும். தற்போது குரு புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை. எதிலும் நிதானமாக செயல்படவும்; நல்லது நடக்கும். என் திருமணம் எப்பொழுது நடைபெறும்? கலப்பு திருமணமா என்று கூறுங்கள்? -பிரியா, காரைக்கால்.

பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு அதிபதியான செவ்வாய் 9-ல் அமையப் பெற்று குரு பார்வையுடன் இருப்பது சிறப் பான அமைப் பாகும். செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாரகன் என்பதாலும் குரு பார்வையுடன் இருப்ப தாலும் சிறப்பான வாழ்க்கை அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ல் நீசம் பெற்றிருப்பதால் திருமண விஷயத்தில் ஒருசில தடை, அதன்பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் 6-ல் நீசம்பெற்றாலும் உடன் புதன் அமையப்பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப்பதால் தடங்கலுக்குபிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது 11-ல் குரு சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குருபார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் பெரியோர் சம்மதத்துடன் உறவு அல்லது தூரத்து உறவில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. கலப்பு திருமணத்திற்கான வாய்ப்புகள் குறைவுதான். வரும் 23-7-2025 முதல் ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு அரசு வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கூறுங்கள்? எஸ்.ரமணி, திருச்சி.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் துக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் ராசி சக்கரத்தில் 9-ல் இருந்தாலும் பாவகத்தில் 8-ல் உள்ளார். சூரியன் 11-ல் இருந்தாலும் பாவகரீதியாக 10-ல் இருப்பது ஒருசில அனுகூல பலன்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். சனி தசையில் சனி புக்தி 16-10-2027 முடிய நடப்ப தால் சுய புக்திக்கு பிறகு வேலை வாய்ப்பு ரீதியாக நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. சனியும் உங்கள் ஜாதகத் தில் 7-ல் இருந்தாலும் பாவகரீதியாக 6-ல் இருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர் மூலமாக ஒருசில அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு துறை மட்டுமில்லாமல் பன்னாட்டு துறைகளிலும் வேலைக்கான முயற்சிகளை மேற்கொள்வது நன்மை தரும். சனி தசை நடப்பதால் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, உடல் மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

bala060625
இதையும் படியுங்கள்
Subscribe