Advertisment

பாலமுருகன் பதில்கள் 02.08.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-02082024

நான் மிகவும் ஏழை. எனக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -சிவகுரு, கடலூர்.

Advertisment

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சனி 2-ல் வக்ரகதியில் இருப்பது எதிர்நீச்சல் போட வேண்டிய அமைப்பாகும். 10-ஆம் அதிபதியும், ஜீவன காரகனுமான சனி வக்ரகதியில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டால் படிப்படி யான வளர்ச்சிகளை அடைய முடியும். உங்களுக்கு 12-ல் அமையப் பெற்ற ராகு தசையில் ராகு புக்தி 28-7-2024 முடிய நடக்கிறது. சுயபுக்திக்குபிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும் யோகம் உண்டு.

நான் மிகவும் ஏழை. எனக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -சிவகுரு, கடலூர்.

Advertisment

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சனி 2-ல் வக்ரகதியில் இருப்பது எதிர்நீச்சல் போட வேண்டிய அமைப்பாகும். 10-ஆம் அதிபதியும், ஜீவன காரகனுமான சனி வக்ரகதியில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டால் படிப்படி யான வளர்ச்சிகளை அடைய முடியும். உங்களுக்கு 12-ல் அமையப் பெற்ற ராகு தசையில் ராகு புக்தி 28-7-2024 முடிய நடக்கிறது. சுயபுக்திக்குபிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும் யோகம் உண்டு. குறிப்பாக 12-ல் உள்ள ராகு என்ற காரணத்தால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிநாடுகளில்கூட நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. மகர ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடக்கிறது. திருக்கணிதப்படி 29-3-2025 ஏழரைச்சனி முடிகிறது. அதன்பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையக்கூடிய யோகம் உண்டு. நடப்பது ராகு தசை என்ற காரணத் தால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமை யோடு இருப்பது, அடிக்கடி அம்மன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

Advertisment

ss

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -பாலசுப்ரமணியம், கோவை.

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் புதன் சேர்க்கை பெற்றுள்ளது. களத்திர காரகன் சுக்கிரன் 7-ல் அமையப்பெற்றி ருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்களுக்கு ராகு தசையில் புதன் புக்தி 30-9-2025 முடிய நடக்கிறது. நடப்பது ராகு தசை என்ற கார ணத்தால் உறவில்லாமல் அந்நியத் தில் அல்லது விரும்பிய நபரை திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு கள் சற்று பலமாக இருக்கிறது. தற்போது புதன் ஆட்சி உச்சம் பெற்று புதன் புக்தி நடப்பதால் திருமண முயற்சிகளை மேற் கொண்டால் இந்த ஆண்டு இறு திக்குள் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. 9-ல் ராகு இருப்பதால் குலதெய்வ வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நான் LIC-யில் பணியாற்றி ஓய்வு காலத்திற்கு முன்பாகவே வேலையிலிருந்து விலகிவிட்டேன். என் ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கூறுங்கள்? -முருகன், ஈரோடு.

பதில்: கன்னி லக்னம், ரேவதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 6-ல் அமையப்பெற்று 6-ஆம் அதிபதி சனி 10-ல் அமையப்பெற்று 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்ற காரணத்தால் வேலையில் இருந்து விலகி விட்டீர்கள். உங்கள் ஜாதகத் தில் சூரியன்- ராகு நட்சத்திர மான சதயத்தில் இருக்கும் பொழுது பிறந் திருக்கிறீர்கள். இது வேலை செய்யும் இடத் தில் ஒரு பெரிய அனுகூலங்கள் அடைய இடையூறையும், தேவையற்ற மனஸ்தாபத்தையும் ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் குரு- சூரியன் சேர்க்கைப் பெற்றி ருப்பதால் உங்களுடைய கோரிக்கையை பலமாக வைப்பதன்மூலமாக அது மட்டும் இல்லாமல் உறுதியோடு கேட்பதன்மூலமாக நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது சந்திர தசையில் கேது புக்தி 3-11-2024 முடிய நடக்கிறது. அடுத்து வரக்கூடிய சுக்கிர புக்தி காலத்தில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. முயற்சி செய்யவும். சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, திருப்பதி சென்று வருவது நற்பலனைத் தரும்.

bala020824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe