Advertisment

குழந்தையில்லா குறை தீர்க்கும் குமர குரு பரிகாரம்!

/idhalgal/balajothidam/baby-kumaraguru-parigaram

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மகப்பேறை திருச்செந்தூர் முருகன் அருளால் இருந்த இடத்திலேயே பெறலாம். இதற்காக அதிக செலவு ஏற்படாது. 54 கொண்டைக்கடலை போதும். (வெள்ளைக் கொண்டைக்கடலை அல்ல).

Advertisment

திருமணப் பொருத்தம் பார்க்கும்பொழுதே இந்த தேதியிலிலிருந்து இந்த தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்று ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிலிவிடலாம். ஜாதகம் என்பது ஒருவருக்கு சாதகமாகச் சொல்வ தல்ல. ஜாதகத்தின் எல்லா தன்மைகளையும் அறிந்து கொள்ளும் அளவுக்கு எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் அருளால் அகத்திய முனிவர் எழுதியுள்ளார்.

parigaram

இன்றைய நாட்களில் ஒரு குழந்தைகூட பிறக்காதா என்று ஏங்கித் தவிப்போர் அதிகம் உண்டு. இப்படிப்பட்டவர்களில் செல்வம் மிகுதியா

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மகப்பேறை திருச்செந்தூர் முருகன் அருளால் இருந்த இடத்திலேயே பெறலாம். இதற்காக அதிக செலவு ஏற்படாது. 54 கொண்டைக்கடலை போதும். (வெள்ளைக் கொண்டைக்கடலை அல்ல).

Advertisment

திருமணப் பொருத்தம் பார்க்கும்பொழுதே இந்த தேதியிலிலிருந்து இந்த தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்று ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிலிவிடலாம். ஜாதகம் என்பது ஒருவருக்கு சாதகமாகச் சொல்வ தல்ல. ஜாதகத்தின் எல்லா தன்மைகளையும் அறிந்து கொள்ளும் அளவுக்கு எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் அருளால் அகத்திய முனிவர் எழுதியுள்ளார்.

parigaram

இன்றைய நாட்களில் ஒரு குழந்தைகூட பிறக்காதா என்று ஏங்கித் தவிப்போர் அதிகம் உண்டு. இப்படிப்பட்டவர்களில் செல்வம் மிகுதியாக உள்ள வர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று செலவுசெய்து தாய்மை அடைகிறார்கள். பொருள் இருப்பவர்கள் குறைவு. பணம் இல்லாதவர்கள்தான் நம் நாட்டில் அதிகம். இவர்கள் செலவு செய்து மகப்பேறு பெற இயலாத வர்கள். எந்த கோவிலுக்குச் சென்றால் தமது ஏக்கம் தீருமென்ற நிலையறி யாது, ஏனோதானோவென்று ஒருசில கோவில்களுக்கு மட்டும் சென்றுவிட்டு, குழந்தை இல்லையே என்று ஏங்குகிறார்கள். பட்டா மாற்ற வேண்டுமென்றால் தாசில்தாரிடம் மனு கொடுத்தால்தான் மாறும். வேறு அலுவலகத்தில் கொடுத்தால் மாறாது. அதுபோல குழந்தைவரம் வேண்டுவோர் திருச்செந்தூர் முருகனையே வணங்கவேண்டும். மற்ற ஆலயங்களுக்கு வேறுவிதமான பரிகாரங்களுக்குச் செல்ல வேண்டும்.

பரிகாரம்-1

27 கருப்புக் கொண்டைக்கடலை எடுத்துக்கொள்ளவேண்டும்.

Advertisment

அதனைப் பெரிய மஞ்சள் துணியில் (ஒரு மீட்டர்) வைத்து தொட்டில் போல் கட்டவேண்டும். உங்கள் ஊர் அருகில் குழந்தைவரம் தரும் அம்மன் தெய்வங்கள் இருக்கும்.

அங்கு அதை எடுத்துச்சென்று மரத்தில் கட்டி வரவேண்டும்.

பரிகாரம்-2

கணவன்- மனைவி இருவரும் சேர்ந்திருக்கும் நிலையுள்ளபோது மட்டும் (அதாவது பெண் மாத விடாய் ஆகி ஐந்து நாட்கள் கழித்து 15 நாட்களுக்குள்) கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ள வேண்டும். 27 கருப்புக் கொண் டைக்கடலை எடுத்து, ஒரு துணிக்கு மூன்றுவீதம் ஒன்பது மஞ்சள் துணிகளில் தனித்தனியாக முடிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒன்பது முடிச்சுகளையும் சாமி அறையில் அல்லது சாமி படத்திற்குக்கீழ் வைக்கவேண்டும். பின்பு முதல் இரவில் ஒரு முடிச்சைமட்டும் எடுத்து இருவர் தலை யணைக்குக் கீழும் வைத்துக்கொள்ள வேண்டும். விரதம், சுத்தம் எதுவும் வேண்டிய தில்லை. வழக்கமாகவே அன்றைய இரவு கழியலாம். விடிந்தபின்பு பெண் மட்டும் முடிச்சை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, "எங்களுக்கு குழந்தைவரம் வேண்டும்' என்று 18 முறை திருச்செந்தூர் முருகனிடம் மௌனமாக வேண்டிக்கொள்ளவேண்டும். குளிக்கும் முன்னர் இதைச் செய்துமுடிக்க வேண்டும்.

அதன்பின்பு முடிச்சை அவிழ்த்துப் பார்க்காமல் வேறு டப்பாவில் யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளவேண்டும். பூஜையறையில் வைக்கக்கூடாது. இதேபோல தொடர்ந்து வரும் இரவுகளில் சாமி அறை யிலுள்ள மீதமுள்ள முடிச்சுகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பத்தாவது நாள் காலையில் டப்பாவில் ஒன்பது முடிச் சுகளும் வந்துவிடும். அதனை அவிழ்த்துப் பார்க்கக்கூடாது. கணவர் அவற்றை எடுத்துச் சென்று (யாருக்கும் தெரியாமல்) ஓடும் தண்ணீரில் அல்லது நீர்நிலைகளில் போட வேண்டும். (கிணறு, கடல் ஆகிய இடங்களில் முடிச்சைப் போடக்கூடாது). இந்தப் பரிகா ரத்தை தொடர்ந்து கண்ணியத்தோடு மூன்று முறை செய்துவர மகப்பேறு பலன் கிட்டும். சிலருக்கு முதல்முறையிலேயே மகப்பேறு கிடைத்துவிடும். இன்னும் சிலருக்கு இரண்டாவது முறையில் கிடைத்துவிடும். மற்றவர்களுக்கும் மூன்றாவதுமுறையில் கண்டிப்பாக மகப்பேறு கிடைத்துவிடும்.

இதுவொரு உண்மைப் பரிகாரம். நம்பிக்கை அவசியம்.

வெளிநாட்டில் உள்ளோர் அங்கேயே திருச்செந்தூர் முருகனை நினைத்து இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம்.

செல்: 94871 68174

bala141218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe