பாப தோஷ சாம்யம் என்பதற்கு சமதோஷம் என்று ஒருவகையில் பொருள் கூறலாம். ஆண்- பெண் இருவரின் ஜாதகத்திலும் சம அளவில் தோஷங்கள் இருந்தால்தான் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமையும். ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் அதிகமாக இருந்து மற்றொருவரின் ஜாதகத்தில் தோஷமே இல்லாமலிருந்தால் அது தோஷ சாம்யம் உள்ள ஜாதகமாகக் கருத முடியாது. ஒன்றில் குறைபாடு இருந்து, குறைபாடில்லாத ஜாதகத்துடன் இணைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமென்பது தவறான கருத்தாகும். பொருத்தத்திற்கான ஜாதகங்களை ஆராயும்போது தோஷ சாம்யம் எனும் சமதோஷ அமைப்பு உள்ளதா என கவனிக்க வேண்டும். ஒன்றில் மட்டும் தோஷம் இருந்தால் பரிகாரம்மூலம் குறைக்க முடியுமென்ற நிலை இல்லாவிட்டால் தவிர்ப்பதே நல்லது. தோஷ சாம்யம் சரியாக அமையவில்லை என்றால் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படவே செய்யும். தோஷங்கள் ஈடுகொடுத்து சமமாக இருந்தால் திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்கும். (பாப தோஷ சாம்யம் என்ற முறை கேரள மாநிலத்தில் அதிக அளவில் பழக்கத்தில் உள்ளது).
நவகிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரும் பாவிகளாவர். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், 2, 4, 7, 8, 12-ஆமிடங்களில் மேற்கூறிய பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் மற்றவரின் ஜாதகத்திலும் இதனை சமன்படுத்தும் அளவிற்கு தோஷம் இருக்கவேண்டும்.
இதனைக் கண்டுபிடிக்கும் முறை பின்வருமாறு:
கிரகங்கள் தோஷ மதிப்பீடு
1. ராகு 1- அலகு
2. சூரியன் 2- அலகு
3. சனி 3- அலகு
4. செவ்வாய் 4- அலகு
பாவங்களுக்கும் மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
பாவங்கள் தோஷ மதிப்பீடு
லக்னம், 2, 4-ஆமிடம் 3-அலகு
7-ஆமிடம் 5- அலகு
8-ஆமிடம் 6- அலகு
12-ஆமிடம் 1-அலகு
பாவத்தின் மதிப்பீட்டை கிரகத்தின் மதிப்பீட்டால் பெருக்க வேண்டும்.
ஆண்- பெண் ஆகிய இருவரின் ஜாதகத்திலுள்ள தோஷங்களைக் கணக்கிடும்போது பெண்ணின் ஜாதகத்திலுள்ள தோஷம் குறைவாகவே இருக்க வேண்டும்.
ஆணின் ஜாதகத்திலுள்ள தோஷம் பெண்ணின் ஜாதகத்திலுள்ள தோஷத்தைப்போல இரண்டு மடங்கு இருக்கலாம்.
அதற்குமேல் இருக்கக் கூடாது.
லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12; ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12; சுக்கிரனுக்கு 1, 2, 4, 7, 8, 12-ஆமிடங்களைக் கொண்டு தோஷம் கணக்கிடப்பட வேண்டும்.
லக்னப்படி தோஷம் முழுமையானதாகவும்; ராசிப்படி தோஷம் பாதியாகவும்; சுக்கிரனின்படி தோஷம் கால்பங்காகவும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிரகங்களின் தன்மைக்கேற்ப அவற்றின் மதிப்பீடும் மாறும்.
உச்சமானால் தோஷமில்லை.
மூலத்திரி கோணமானால் கால் பாகம்.
ஆட்சியானால் அரை பாகம்.
நட்பானால் முக்கால் பாகம்.
நீசமானால் ஒன்றே கால் பாகம்.
எக்காரணத்தைக் கொண்டும் பெண்ணின் ஜாதகத்திலுள்ள தோஷம், ஆணின் ஜாதகத்திலுள்ள தோஷத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
செல்: 72001 63001