Advertisment

மிரள வைக்கும் மிதுனச் செவ்வாய்! 12 ராசிகளுக்கும் மிதுனச் செவ்வாய் பலன்கள் - ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/awesome-gemini-mars-gemini-mars-benefits-12-zodiac-signs-r-mahalakshmi

ஒவ்வொரு கிரகமும் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். செவ்வாய் ஒவ்வொரு ராசியையும் கடக்க சுமார் ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்வார். தற்போதைய கோட்சாரப்படி செவ்வாய் மிதுனத்தில் உள்ளார்.

Advertisment

(வாக்கியப்படி, ஆக அக்டோபர் 23 வரை;

திருக்கணிதப்படி அக்டோபர் 20 வரை.)

செவ்வாய் அமர்ந்துள்ள மிதுனம்

புதனின் வீடாகும். ஏற்கெனவே செவ்வாய்க்கும் புதனுக்கும் வாய்க்கால் தகராறு மிக உண்டு. இதில் தனது பகை வீட்டில் செவ்வாய் அமர்வது, அவருக்கு மகா எரிச்சலைத் தரும்.

Advertisment

இவர் மிதுனத் திலிருந்து, 4-ஆம் பார்வையாக கேது வைப் பார்க்கிறார். 7-ஆம் பார்வையாக தனுசுவையும், 8-ஆம் பார்வையாக மகரத்தையும் நோக்குகிறார்.

காலபுருஷ தத்துவப்படி, செவ்வாய் 1 மற்றும் 8-ஆம் அதிபதி. இவர் கால புருஷனின் 3-ஆமிடத்தில் அமர்வு.

ass

சாரபலன்

செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 1 வரை மிதுனச் செவ்வாய் திருவாதிரை நடசத்திரம் எடுத்துக்கொள்வார். இது ராகுவின் நட்சத்திரம். இப்போது வரும் செய்திகள் வெளிநாடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக, வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் இடம் பெயர வாய்ப்பு வரும். இங்குள்ளவர்களும், வேறிடம் செல்லும் நிலை ஏற்படும். அது வடக்கு அல்லது தென்மேற்கு திசையாக இருக்கும். காரண, காரியம் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நகர்வுகள் நிச்சயம் நடக்கும். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பர். மேற்சொன்ன திசைகளில் உள்ள நாடுகள். ஊர்களில் தீவிரவாதம் அதிகரிப்பதாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வர்.

செவ்வாய் எனும் பாவர், இன்னொரு மகா பாவ கிரகமான ராகுவின் காலில் செல்லும்போது, சொல்லில் அடங்கா இடையூறுகள் நடக்கும். இயற்கை சீற்றங் களும் உண்டு.

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23 வரை: மிதுனச் செவ்வாய். புனர்பூசம் எனும் குரு காலில் செல்வார். சாரநாதர் குரு என்பதால். கோபக்கார செவ்வாயின் ஆக்ரோஷத்தைக் குறைப்பார். எனவே உலகெங்கிலும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரும். உலகத் தலைவர்கள் தலையிட்டு, தீவிரவாதத்த

ஒவ்வொரு கிரகமும் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். செவ்வாய் ஒவ்வொரு ராசியையும் கடக்க சுமார் ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்வார். தற்போதைய கோட்சாரப்படி செவ்வாய் மிதுனத்தில் உள்ளார்.

Advertisment

(வாக்கியப்படி, ஆக அக்டோபர் 23 வரை;

திருக்கணிதப்படி அக்டோபர் 20 வரை.)

செவ்வாய் அமர்ந்துள்ள மிதுனம்

புதனின் வீடாகும். ஏற்கெனவே செவ்வாய்க்கும் புதனுக்கும் வாய்க்கால் தகராறு மிக உண்டு. இதில் தனது பகை வீட்டில் செவ்வாய் அமர்வது, அவருக்கு மகா எரிச்சலைத் தரும்.

Advertisment

இவர் மிதுனத் திலிருந்து, 4-ஆம் பார்வையாக கேது வைப் பார்க்கிறார். 7-ஆம் பார்வையாக தனுசுவையும், 8-ஆம் பார்வையாக மகரத்தையும் நோக்குகிறார்.

காலபுருஷ தத்துவப்படி, செவ்வாய் 1 மற்றும் 8-ஆம் அதிபதி. இவர் கால புருஷனின் 3-ஆமிடத்தில் அமர்வு.

ass

சாரபலன்

செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 1 வரை மிதுனச் செவ்வாய் திருவாதிரை நடசத்திரம் எடுத்துக்கொள்வார். இது ராகுவின் நட்சத்திரம். இப்போது வரும் செய்திகள் வெளிநாடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக, வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் இடம் பெயர வாய்ப்பு வரும். இங்குள்ளவர்களும், வேறிடம் செல்லும் நிலை ஏற்படும். அது வடக்கு அல்லது தென்மேற்கு திசையாக இருக்கும். காரண, காரியம் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நகர்வுகள் நிச்சயம் நடக்கும். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பர். மேற்சொன்ன திசைகளில் உள்ள நாடுகள். ஊர்களில் தீவிரவாதம் அதிகரிப்பதாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வர்.

செவ்வாய் எனும் பாவர், இன்னொரு மகா பாவ கிரகமான ராகுவின் காலில் செல்லும்போது, சொல்லில் அடங்கா இடையூறுகள் நடக்கும். இயற்கை சீற்றங் களும் உண்டு.

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 23 வரை: மிதுனச் செவ்வாய். புனர்பூசம் எனும் குரு காலில் செல்வார். சாரநாதர் குரு என்பதால். கோபக்கார செவ்வாயின் ஆக்ரோஷத்தைக் குறைப்பார். எனவே உலகெங்கிலும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரும். உலகத் தலைவர்கள் தலையிட்டு, தீவிரவாதத்தை ஒடுக்க முற்படுவர்.

இயற்கை சீற்ற சீரழிவுகளை சீர்செய்ய முற்படுவர்.

எனவே அக்டோபர் 23 வரை. மக்கள் சற்று எச்சரிக்கையாக, கவனமாக இருத்தல் அவசியம்.

அரசியல்

காலபுருச தத்துவப்படி, ஆளும் கட்சியான செவ்வாய், தனது எதிர்கட்சிகளுடன் உறவாடவேண்டிய சூழ்நிலை உண்டு. எதிர்கட்சியான புதனும், ஆளும் கட்சியான செவ்வாயை தனது இருப்பிடத்தில் சந்திக்கும் நிலை ஏற்படும். மிதுனத்தில் செவ்வாய் இருக்கும்வரை. ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கட்டிப்பிடித்து சிரித்து கை குலுக்கி கொள்வர். வெளியில் சிரித்து, உள்ளுக்குள் திட்டிக்கொள்வர். வேறு வழியில்லை.

மேஷம்

இளைய சகோதரனும், காதுவலியும் பெரும் பிரச்சினை தரும். உங்கள் நண்பர்களுக்கு போட்ட ஜாமீன் கையெழுத்து உங்களுக்கு எதிராகத் திரும்பும். வீடு, வாகனம் பழுதுபடுவதால். அவை சார்ந்த மாற்றம் உண்டு. வீட்டை விற்றுக் கடனடைந்து விடுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் பிரச்சினை நீங்கும். தொழில், தந்தை வகையில் கவனம் தேவை. பழனி முருகரை வணங்கவும். செம்புப் பாத்திரம் தானம் நல்லது.

ரிஷபம்

இடமாற்றம் உண்டு. அது வாழ்க்கைத்துணையின் வேலை அல்லது உங்கள் திருமணம், வியாபாரம் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்காது; எரிச்சலாக வரும். இதனால் காசும் அதிகம் செலவழியும். சிலரின் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சீர் குலைவதால் சூழ்நிலை, அலைச்சலும் உண்டு. இந்த பிடிக்காத சூழ்நிலை, வார்த்தைகளில் கோபம் கொடுக்கும். வீட்டில் சண்டை ஏற்படும். திருப்பரங்குன்றம் முருகரை வணங்கி, துவரம் பருப்பு தானம் செய்யவும்.

மிதுனம்

உங்கள் ராசியிலேயே கோபக்கார செவ்வாய் நகர்வு. வேலையில் பதவி உயர்வு சற்று இடர்ப்பாடுடன் கிடைக்கும். உங்கள் தொழில், வெளிநாடு சம்பந்தம் கொள்ளும். உங்கள் தாய் சார்ந்தவகையில், சற்று முன்பகையுள்ள குடும்பத்துடன் திருமணம் நடக்கும். அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகளுடன் இணைந்து போகவேண்டிய சூழல் உருவாகும். வீடு சார்ந்து அல்லது மனையில் வீடுகட்ட கடன் வாங்க நேரிடும். திருத்தணி முருகரை வணங்கவும். கோவிலுக்கு சேவல் வாங்கி காணிக்கை செலுத்தவும்.

கடகம்

உங்கள் வாரிசு வெளிநாடு செல்லும்போது, தரவுகள் விஷயமாக குற்றம் கண்டுபிடிப்பர். சிலர் தொழில் விஷயமாக வெளிநாடு செல்வர். சிலர் தன் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு வெளியூர் செல்வர். சிலர் தன் தாய் விஷயமாக பயணம் மேற்கொள்வர். மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், இடம் மாற நேரிடும். குலதெய்வ வழிபாட்டுப் பயணமுண்டு. சிலர் வேலை கிடைத்து வெளிநாடு செல்வீர்கள். இந்த மிதுனச் செவ்வாய் எப்போதும் அலையச் செய்வார். பயணங்களில் இடையூறுயும் தருவார். எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுவதாக வேண்டிக்கொள்ளவும். திருச்செந்தூர் முருகனை வணங்கவும். மோர்தானம் செய்யவும்.

சிம்மம்

பெற்றோர் பெயரில் இருந்த மனை உங்களுக்குக் கிடைக்கும். கொஞ்சம் போராடி, சமையல் ஒப்பந்தம் பெறுவீர்கள். நீண்ட நாள் வழக்கு முடிந்து, பணம் அல்லது மனை கைக்கு வரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படும். அரசியலிலுள்ள மந்திரி பதவி வகிப்பவர்கள், ஒரு குற்றச்சாட்டுக்கு இலக்காவர். மூத்த சகோதரனின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை கவலை கொள்ளச் செய்யும். சினிமா கலைஞர்கள் பணம் சம்பந்தமாக பிரச்சினையை சந்திப்பர். சுவாமி மலை முருகரை வணங்கவும். உணவு தானம் நன்று.

கன்னி

மிதுனத்தில் செவ்வாய் நகரும் காலத்தில், உங்கள் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும். தொழிலில் எதிர்பாராத விரயம் உண்டு. கணக்குப்பிழை அல்லது அலைபேசியால் நஷ்டம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் வேலைக்கு இடையூறு ஏற்படும். வியாபார பங்குதாரர்களிடம் கவனம் தேவை. உங்கள் தாயாரின் சிறு நோய்க்கும் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மனை சம்பந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இளைய சகோதரனின் வாகனம் நெளியக் கூடும். திருமண விஷயங்களில் சற்று பதறாமல் முடிவு எடுங்கள். புதிய வியாபாரம். புதிய தொழில் தொடங்க சற்று காலம் எடுத்துக் கொள்ளுங்கள். வள்ளியூர் முருகரை வணங்கவும். முருகருக்கு பச்சை சாற்றி வழிபடுங்கள்.

துலாம்

மிதுனத்தில் செவ்வாய் காலடி வைத்தவுடன், துலா ராசியினரின் தந்தை மருத்துவச் செலவுக்கு உள்ளாவார். இதனால் உங்களின் வேலை சார்ந்த வெளியூர் வெளிநாட்டுப் பயணங்கள் தள்ளிப்போடப்படும். சில சுப நிகழ்ச்சிகளையும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுக்க நேரும். சில வெளிநாட்டு வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்வீர்கள். சிலர் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீடு செல்வீர்கள். சிலரின் மனை விற்பனையாகும். சிலரது இளைய சகோதரன், அவர் இஷ்டம்படி போல, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார். உங்கள் வணிக முதலீட்டை சரியான நேரத்தில் செய்ய இயலாமல் போகும். இதற்கு கேட்ட இடத்தில் கடன் தாமதமும் ஒரு காரணமாகும். பழமுதிர்சோலை முருகனை வணங்கவும். சந்தனம், விபூதி காணிக்கை நன்று.

விருச்சிகம்

மிதுனத்தில் செவ்வாய் வந்து அமர்ந்தவுடன், ஏதோவொரு மருந்தினால் உங்கள் நோய சரியாகி விடும். கடன் தொல்லை அடைபடும். எதிரிகள் நகர்ந்து விடுவர். ஒரு அரசியல்வாதியால், துன்பம் அனுபவிப்பவர்கள், அதனின்று விடுபடுவர். வாரிசுகளின் தொழிலில் ஒரு சங்கடம் தோன்றும். உங்கள் மூத்த சகோதரர் அல்லது மருமகன், சற்று உடல்நலக் குறைவை சந்திப்பார். சில அரசியல்வாதிகள். எதிர்பாராத செய்தி கிடைக்கப்பெறுவர். இளைய சகோதரன் எங்காவது அடிப்பட்டுக் கொள்ளக்கூடும். சிக்கல் சிங்கார வேலலை வணங்கவும். பன்னீர் புஷ்ப காணிக்கை நல்லது.

தனுசு

தனுசு ராசிக்கு மிதுனத்தில் செவ்வாய் வந்து நின்றவுடன், காதல் உடைந்து விடும். சில காதல் கௌரவ பிரச்சினையாகி, அடி தாங்காமல் ஓட வேண்டியிருக்கும். கல்யாணம் நடந்தால், விருந்து உபசரிப்பு சரியில்லை என களேபரம் நடக்கும். வாழ்க்கைத்துணையின் வெளிநாட்டு வேலை இன்னல் தரும். உங்கள் மாமியாரால் தொந்தரவு ஏற்படும். சமாளிக்கத் திணறிவிடுவீர்கள். உங்கள் தாயாரும் ஒரு பக்கம் பாடாய்ப்படுத்துவார். ஆக, நீங்கள் மாமியாருக்கும் அம்மாவுக்கும் இடையில் தவியாய்த் தவித்து விடுவீர்கள். வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு நன்று. முல்லை மலர்ச்சரம் காணிக்கை மற்றும் பன்னீர் வாங்கிக் கொடுத்து வணங்கவும்.

மகரம்

உங்கள் வாழ்க்கைத் துணையின் வேலை, மேலதிகாரிகளால் சற்று இன்னலுக்கு ஆளாகும். தாயார் வாடகை வீடு மாற்றுவார். உங்கள் வேலையில் பதவி உயர்வும், பகைமையும் சேர்ந்தே வரும். மூத்த சகோதரர் சற்று உடல்நலம் பாதிக்கப்படுவார். வேற்றினப் பணியாளரால் இம்சைப்படுவீர்கள். சில வேலை ஒப்பந்தம், உங்களை வேதனைப்படுத்தும். உங்களில் சிலர். கடன் டாக்குமென்டில் கையெழுத்துப் போடுவீர்கள். சில வீண் அலைச்சலும், விரயமும் ஏதோவொரு காரணத்தால் தவிர்க்கப்படும். வேலை செய்யுமிடத்தில், பணிவாக நடந்துகொள்ளுங்கள். வயலூர் முருகனை வணங்கவும். செந்நிறப் பொருட்கள் தானம் நன்று.

கும்பம்

உங்கள் தொழிலில், பணிபுரியும் தொழிலாளர்கள் உங்களிடம் சண்டையிடுவர். இதனால் கோபம் தலைக்கேறி பிரஷர் அளவு அதிகரிக்கும். சில தொழில் சார்ந்த குத்தகை ஏத்தாவதால், வெகு படபடப்புக்கு ஆளாவீர்கள். வாரிசுகளின் இணக்கம் இராது. கலைஞர்கள் வெகு அவமானம் பெறுவர். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தாமதமாகும். சிலரின் சொற்கள் தடுமாறும் நிலையுண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருமகன், பண விஷயமாக சண்டையிடுவார். பூர்வீக மனை தொல்லை தரும். இந்த மிதுனச் செவ்வாய், எதைச் செய்தால், நீங்கள் டென்ஷனாகி, உடல் நலம் குறையுமோ, அதனைச் செய்வார். மருதமலை முருகனை வணங்கவும். தாம்பூலத்துடன் கந்தனை வணங்க நலம்.

மீனம்

உங்கள் மனையிலிருந்து வரவேண்டிய வரவுகளை நிறுத்தி விடுவார். சற்று தடைகளையும், கோபத்தையும் சந்திப்பர். வாழ்க்கைத்துணையுடன் சண்டை வரும். உங்கள் தொழில் சார்ந்து, உங்கள தந்தையின் மனையை கௌரவம் பார்த்து தவறான முடிவெடுத்து விடுவீர்கள். இதனால் உங்கள் மரியாதை தாழ்ந்துவிடும். உங்களை சந்திக்கும் நபர்கள், ஒருவித எதிர்த்தன்மையுடன் நடந்து கொள்வர். கழுகு மலை முருகரை வணங்கவும். அன்னதானம் செய்யவும். பொதுவாக செவ்வாய், புதன் சம்பந்தம் ஏற்படும் போது, நரசிம்மரை வணங்கவேண்டும். நரசிம்மா சந்நிதியில் துளசி மாலை, சந்தணம், பானகம் கொண்டு வணங்கவும். நரசிம்மர் ஸ்துதி பாராயணம் நல்லது. கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

செல்: 94449 61845

bala130924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe