நலம் தரும் நட்சத்திரம்! 6 ரோகிணி

/idhalgal/balajothidam/auspicious-star-6

"செய்வன திருந்த செய்வான் சேயிழையார்க்கு நல்லான்

மெய்யுற மணியும் பொன்னும் மகிழ்ச்சியை அணிய வல்லான்

நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே உண்பன் கற்றோன்

உய்யவே பகுத்திட்டுண்ணும் ரோகிணி நாளினானே.'

-விரும கண்டிகை

பொருள்: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர், செய்யும் காரியங்களை சிறப்பாக செய்யக்கூடியவர். பெண்களிடம் அதிக நட்பு உடையவர். சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உள்ளவர்.

கை அளவு உள்ளத்தில் கடல்போல் ஆசைகளை வளர்த்துக் கொள்வதே மனித வாழ்க்கையாகிவிட்டது. தன்னிலை உணர்ந்தால், தடைகளை தாண்டலாம். ஒரு ஜாதகரின் விதி, மதி, கதி ஆகிய மூன்றையும் புரிந்துகொண்டால், தோல்வியைத் தவிர்

"செய்வன திருந்த செய்வான் சேயிழையார்க்கு நல்லான்

மெய்யுற மணியும் பொன்னும் மகிழ்ச்சியை அணிய வல்லான்

நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே உண்பன் கற்றோன்

உய்யவே பகுத்திட்டுண்ணும் ரோகிணி நாளினானே.'

-விரும கண்டிகை

பொருள்: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர், செய்யும் காரியங்களை சிறப்பாக செய்யக்கூடியவர். பெண்களிடம் அதிக நட்பு உடையவர். சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உள்ளவர்.

கை அளவு உள்ளத்தில் கடல்போல் ஆசைகளை வளர்த்துக் கொள்வதே மனித வாழ்க்கையாகிவிட்டது. தன்னிலை உணர்ந்தால், தடைகளை தாண்டலாம். ஒரு ஜாதகரின் விதி, மதி, கதி ஆகிய மூன்றையும் புரிந்துகொண்டால், தோல்வியைத் தவிர்க்கலாம். விதியை ஜனனகால லக்னம் காட்டும். மதியை சந்திரன் அமர்ந்த நட்சத்திரம் காட்டும். கதியை சூரியன் அமைந்த ராசியே காட்டும். நட்சத்திரம் ஒருவரின் மனதில் எழும் ஆசையைக் கோடிட்டு காட்டும்.

4. ரோகிணி

குறிப்பு: இந்த நட்சத்திரத்தில் வியாழக் கிழமை சேர்ந்தால், விஷ யோகம். சனிக் கிழமை கூடினால், சித்த யோகம்.

பொதுவான குணம்: சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமானதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இரக்க குணம் அதிகம். மனது நிலையான சிந்தனையிலிருக்காது. மனம்போல் வாழ்க்கையும், இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கை யாகும். சுதந்திரமான சுய தொழிலை விரும்பு வார்கள்.

ரோகிணி நட்சத்திரம் (ஆண்)

* குணம்: அறிவாளிகளாக இருந்தாலும், பிறர் கருத்தை ஏற்க மாட்டார்கள். தான் விரும்பும் மனிதர்களுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.

* குடும்பம்: குடும்ப நன்மைக்காக எதையும் தியாகம் செய்யும் மனமுடையவர். எவ்வளவு துன்பம் வந்தாலும், குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாதவர். தனது தாயுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பார்.

star

* கல்வி: கல்வி அறிவைவிட அனுபவ அறிவையே பெரிதும் போற்றுவார்.

* தொழில்: சுய தொழிலில் விருப்பம் அதிகம். ஆனாலும், 18 வயதிலிருந்து 36 வயதுவரை நிதி நெருக்கடி உண்டாகும். 38 வயதுக்குமேல் சிறப்பான வாழ்க்கை அமையும்.

* திருமணப் பொருத்தம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம். விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் மணப்பெண் அமைந் தால் சிறப்பு.

* திருமண வாழ்க்கை: குடும் பத்தை அதிகம் நேசிப் பதால், எந்த பிரச் சினையையும் சமாளிக் கும் திறமை உண்டா கும்.

* ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனால் சனி தசை குரு புக்தி நடக்கும் காலத்தில் இதயம், சிறுநீரக பிரச்சினை ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரம் (பெண்)

* குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், அறிவைவிட உணர்வுக்கு முதலிடம் தருவார்கள்.

* குடும்பம்: தந்தையால் ஆதாயம் இல்லை. தாயாரால் முன்னேற்றம் உண்டு. மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக சொல்வதால், குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம்.

* திருமணப் பொருத்தம்: திருவாதிரை, ஹஸ்தம், ஸ்வாதி, திருவோணம், சதயம், மகம், பூரம் ஆகிய நட்சத்திரங்களைத் தவிர்த்து, மற்ற நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.

* ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் அடிக்கடி ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.

ss

நட்சத்திர பலன்கள்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள், அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.

வரும் இதழிலும் ரோகிணி

நட்சத்திரம் தொடரும்!

செல்: 63819 58636

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe