"கருனையங்கவன் பாலில்லைக் கனவுறு புணர்ச்சிவேண்டும்
குரு கயல் இடைகள் பற்றி முயங்குவார்க் கமுதமாகும்
முருகு சேர் குழலிக் கின்ப மிச்சைக்கோ முரண் வொன்றில்லை
கரிய மாந்தளிர் போல் மேனி கார்த்திகை நாளினாளே.'
-மதன நூல்
பொருள்: கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள்- கருணை குணம் குறைந்தவள். ஆனாலும், தன் கணவனுக்கு இனியவளாக விளங்குவாள்.
காற்று வெவ்வேறு திசைகளிலிருந்து வீசினாலும், கடலில் பயணம் செய்பவர்கள் கலங்குவதில்லை. காற்றடிக் கும் திசையறிந்து கப்பலில் பாய் மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வார்கள். காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறார
"கருனையங்கவன் பாலில்லைக் கனவுறு புணர்ச்சிவேண்டும்
குரு கயல் இடைகள் பற்றி முயங்குவார்க் கமுதமாகும்
முருகு சேர் குழலிக் கின்ப மிச்சைக்கோ முரண் வொன்றில்லை
கரிய மாந்தளிர் போல் மேனி கார்த்திகை நாளினாளே.'
-மதன நூல்
பொருள்: கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள்- கருணை குணம் குறைந்தவள். ஆனாலும், தன் கணவனுக்கு இனியவளாக விளங்குவாள்.
காற்று வெவ்வேறு திசைகளிலிருந்து வீசினாலும், கடலில் பயணம் செய்பவர்கள் கலங்குவதில்லை. காற்றடிக் கும் திசையறிந்து கப்பலில் பாய் மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வார்கள். காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறார்கள். அவரவர் ஜனன காலத்து நட்சத்திரத்தின் தன்மை, திறன், நடப்பு தசாபுக்தி கோட்சார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து செயலாற்றினால் எல்லாரும் வெற்றியடையலாம். தோல்விக்கே, தோல்வி உண்டாகும்.
கார்த்திகை
கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு:
வைகாசி, அமாவாசை, கார்த்திகை நட்சத்திரமும் கூடும்நாளில் பிறந்த வர்கள், சாதனை படைப்பார்கள். புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வார்.
கார்த்திகை நட்சத்திரத்தின் வலிமை ப் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் நீதிமானாக இருப்பார்கள்.
* எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆர்வமுடன் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
* விவாதம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
* அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
* ஆசிரியப் பணி, வழக்கறிஞர் பணி களில் ஈடுபட்டால் வெற்றி பெறுவார்கள்.
* பெரிய பதவியில் இருந்தாலும், அடக்கத்துடன் காணப்படுவார்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தின் பலவீனம்
*தன் பிள்ளைகளிடம் அதிக பாசம் வைத்து, அவர்களால் அவதிப்படுவார்கள்.
* ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, கடன் தொல்லையில் மாட்டிக்கொள்வார்கள்.
கூட்டு கிரகப் பலன்கள்
(கார்த்திகை நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன் பிற கிரகங்கள் இணையும் போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மையானது).
* கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியனிருக்க முன்கோபம் அதிக முடையவர்.
* செவ்வாய் அமர்ந்திருக்க அவசர புத்தி உடையவர்.
* புதன் அமர்ந்திருக்க கற்பனைத் திறன், எழுத்தாற்றல் உடையவர்.
*சுக்கிரன் அமர்ந்திருக்க இரு மனைவிகள் அமையலாம்.இரசாயன தொழிலில் வெற்றியுண்டு.
* சனி அமர்ந்திருக்க அடிக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டு.
* குரு அமர்ந்திருக்க புத்திர பாக்கியத்தில் தடை சொல்லின் செல்வர்.
* ராகு அமர்ந்திருக்க வாகன விபத்தில் சிக்கும் வாய்ப்பு உண்டு.
* கேது அமர்ந்திருக்க எதிலும் பற்றில்லாதவர்.
கார்த்திகை நட்சத்திர பாத பலன்கள்
* கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு நவாம்சம். குருபகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர்கள் செல்வந்தர் ஆனாலும் ஆரோக்கியம் குறைந்தவர்.
* கார்த்திகை நட்சத்திரத்தின் இரண் டாவது பாதம் சனிபகவானால் ஆளப் படுகிறது. புத்திசாலி. ஆனாலும் தீயவர் சேர்க்கையால் தொல்லையுண் டாகும்.
* கார்த்திகை நட்சத்திரத்தின் மூன்றா வது பாதம் கும்ப நவாம்சம். சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் வீரம் உடையவர். ஆனாலும் முரட்டுத்தனத்தால் பகை வளர்ப்பார்.
* கார்த்திகை நட்சத்திரத்தின் நான்காவது பாதம் மீன நவாம்சம். குருபகவானால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் பல கலைகளில் வல்லுனர். ஆனாலும் எப்போதும் வருத்தமுடையவர்.
கார்த்திகை நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்
* மாடு- வாங்க, ஆயுதப் பிரயோகம் செய்ய, கடன் தீர்க்க, ஏற்றநாள்.
கார்த்திகை நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை
* கீழ் நோக்கு நாள்: புதிய தொழில் முயற்சி, நெடுந்தூரப் பயணம் செய்யக் கூடாது.
பரிகாரம்
* திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சஷ்டி திதியில், சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால், வாழ்க்கையில் தடைகளைத் தகர்க்கலாம்.
* துர்க்கா சப்தசதி எனும் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
தொடரும்!
செல்: 63819 58636