"வடிவம துடையவளாகும் வந்தடைந்தாரைப் பேணும்

கடியதை விரும்பும் காமக் களத்தினில் கலவு காட்டும்

வடிவுறு புணர்ச்சிக்கெல்லாம் மருலுடை புரிந்த சிந்தை

படிதனில் சொன்னோம் இந்த குனமெலாம் பரணியாலே''.

-ஸ்த்ரி ஜாதகம்

பொருள்: பரணி நட்சத்திரத்தில் பிறந்த வள்லி அழகான வடிவமுடையவள். தன்னை நாடி வந்தவரை காப்பாற்றுவாள். சிற்றின்பத்தில் அதிக ஆர்வமுள்ளவள்.

இலைகள் அசையும் வரை, பூ மரங்கள், சாமரம் (விசிறி) வீசும் வரை, காற்று இருப் பதை நாம் அறியமாட்டோம். அந்த காற்று தான் நம் உயிரின் ஆதாரம் என்பதும் புரியாது. அதேபோல், ஜனன காலத்தில் சந்திரன் அமர்ந்த நட்சத்திரமே நம் மனதை இயக்குகிறது. அதுவே, நம் வாழ்க்கையின் இன்ப- துன்பங்களை நிர்ணயிக்கிறது என்பதை அறிந்தால் அறிஞனாகலாம்.

barani

பரணி

பரணி நட்சத்திரத்தின் வலிமை ப் இளமை வாழ்வில் சுகமான வாழ்விற்கு பஞ்சம் இருக்காது.

* சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தால் அல்லது ஆட்சி உச்சம்பெற்று அமைந்திருந் தால், மேலும் பல நற்பலன்களை அடைய முடியும்.

* இதில் பிறந்தவர்கள் நல்ல உடல் வாகை பெற்றிருப்பார்கள். பார்த்த மாத்திரத் தில் பிறரை கவரும் வீரம், தைரியம் அழகு நிரம்பியவர்கள்.

* அதிகாரமான பதவியில் அமர்வார் கள். ஆளுமைத்திறன் உடையவராக இருப் பார்.

*சமயோசித புத்தியைப் பயன்படுத்து வார்.

*இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

பரணி நட்சத்திரத்தின் பலவீனம்

*பிறர் சொல் கேளாதவர். அதனால், பிறருடன் அடிக்கடி, கருத்து வேற்றுமை உண்டாகும்.

*பிறரை பாதுகாக்க தெரிந்தவரானா லும், தன்னை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாது.

கூட்டு கிரக பலன்

பரணி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனு டன், பிறகிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராய வேண்டியது முதன்மையானது.

*பரணி நட்சத்திரத்தில் சூரியனிருக்க செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டா கும். அதனால் மன அமைதியை இழப்பார்.

*செவ்வாய் அமர்ந்திருக்க தற்பெருமை யுடையவர். பிறரால் அவமதிக்கப்படுவார்.

*புதன் அமர்ந்திருக்க எதிலும் திருப்தி இல்லாதவர்.

*சுக்கிரன் அமர்ந்திருக்க, அதிக காம எண்ணத்தால் தொல்லை உண்டாகும். காதல் மன்னன்.

*சனி அமர்ந்திருக்க அன்பு இல்லாதவர். கல்வியில் தோல்வி உண்டாகும். பிறரால் அவமதிக்கப்படுவார்.

*குரு அமர்ந்திருக்க, கல்வியில் பின் தங்குவார். சுக போகங்களில் அதிக விருப்ப முடையவர்.

*ராகு அமர்ந்திருக்க எப்போ தும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

*கேது அமர்ந்திருக்க எந்த பிரச்சினையையும் சமாளிக்கக் கூடியவர்.

பரணி நட்சத்திர பாத பலன்

*பரணி நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம நவாம்சம். சூரியனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர்கள் பகைவர்களுக்கு அச்சம் தரக் கூடியவர்.

*பரணி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம் கன்னி நவாம்சம். புதனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்த வர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்.

*பரணி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம். சுக்கிரனால் ஆளப் படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் செல்வ செழிப்பு உடையவர்.

*பரணி நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர், முன்கோபம் உடையவர். அதிகாரமான பதவியிலிருப்பார்.

பரணி நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுபகாரியங்கள்

*கதிர் அறுக்க, மாடு- வாங்க, ஆயுதப் பிரயோகம், மூலிகை மருந்துண்ண ஏற்ற நாள்.

பரணி நட்சத்திர நாளில் செய்யக் கூடாதவை

*திருமணம் செய்யக்கூடாது.

*பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது.

*முடி திருத்துதல், எண்ணெய் தேய்த்து குளிப்பது

பரிகாரம்

*திரியம்பக மந்திரம்: "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுவந்தம் புஷ்டி தர்மம், ம்ருத்யோர்முக்ஷியா மாம்ரிதாத்'' எனும், மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத் தால் ஜெபம் செய்தால் வெற்றி கிடைக்கும்.

*நெல்லிமரம் ஸ்தல விருட்சமாக அமைந்த சுவாமிமலைக்கு சென்று, சுவாமிநாதரை வழிபட்டால் செல்வமும், செல்வாக்கும் பெருகும்.

-பரணி நட்சத்திரத்தின் பலன்கள் வரும் இதழிலும் தொடரும்!

செல்: 63819 58636