Advertisment

நலம் தரும் நட்சத்திரம்! 3 பரணி

/idhalgal/balajothidam/auspicious-star-3-bharani

"தானங்கள் விரும்பி செய்யுந் தந்தை தாய் மிகவும் பேணும்

மானமது ஞானமும் விரும்பி கற்கு நற்றமிழ் விரும்பிக் கேட்கு

மானமதுடையோனாகும் வருனிதி பொருந்தி வாழும்

போசனச் செல்வமுண்டாம் புகழ் பெரு பரணியானே.'

-விரும கண்டிகை

பொருள்: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர், செல்வ செழிப்புடன் வித்தையில் சிறந்து விளங்குவார். பெற்றோரை பேணி பாதுகாப்பார்.

மண் குதிரை ஓடாது. மன குதிரை நிற்காது. ஓயாமல் ஓடும், மனமெனும் குதிரையின் குணம் அறிந்து, அதை கட்டுப் படுத்துவதே, அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஜனன ஜாதகத்தில், மனோ காரகனாகிய சந்திரன் அமரும் நட்சத்திரத்தின் தன்மையறிந்து, செய

"தானங்கள் விரும்பி செய்யுந் தந்தை தாய் மிகவும் பேணும்

மானமது ஞானமும் விரும்பி கற்கு நற்றமிழ் விரும்பிக் கேட்கு

மானமதுடையோனாகும் வருனிதி பொருந்தி வாழும்

போசனச் செல்வமுண்டாம் புகழ் பெரு பரணியானே.'

-விரும கண்டிகை

பொருள்: பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர், செல்வ செழிப்புடன் வித்தையில் சிறந்து விளங்குவார். பெற்றோரை பேணி பாதுகாப்பார்.

மண் குதிரை ஓடாது. மன குதிரை நிற்காது. ஓயாமல் ஓடும், மனமெனும் குதிரையின் குணம் அறிந்து, அதை கட்டுப் படுத்துவதே, அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஜனன ஜாதகத்தில், மனோ காரகனாகிய சந்திரன் அமரும் நட்சத்திரத்தின் தன்மையறிந்து, செயலாற்றும்போது, வாழ்க்கைப் பயணம் இனிமையானதாகும்.

Advertisment

barani

பரணி

பொதுவான குணம்: பரணி என்றால் "தாங்கிப்பிடிப்பது' என்று பொருள். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ராசி அதிபதி செவ்வாய். இது உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது. பரணி நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப, நல்ல வசதியான சுகமான வாழ்க்கை அமையும். பிறரை கவர்ந்திழுக்கும் அழகும், வீரமும் உடையவர்கள். தொழிலில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்.

பரணி நட்சத்திரம் (ஆண்)

ப் குணம்: பரணி நட்சத்திரத்தில் பிறந்த வர், அனைவரின் நலனிலும் அக்கறை கொள்பவராக இருப்பார்.

Advertisment

ப் குடும்பம்: குடும்பத்தை மிகவும் நேசிப்பவராக இருப்பார். பிடிவாதக்காரராக இருப்பதால், குடும்பத்தில் அமைதி குறையும்.

ப் கல்வி: அழகிற்கு முக்கியத்துவம் தருவார். கல்வியில் ஆர்வம் குறையும்.

ப் தொழில்: நன்மையும்- தீமையும் மாறி மாறி வரும். 33 வயதிற்கு பிறகுதான், வாழ்க்கை யில் பல சாதகமான மாற்றங்களை அடைவார். வியாபாரம், விளையாட்டு, இசை, கலை, விளம்பரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்கள் வெற்றி தரும்..

ப் திருமண பொருத்தம்: அஸ்வினி, மகம், மூலம், கார்த்திகை, உத்திராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், சதயம், ஸ்வாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்து கொள்ள லாம்.

ப் திருமண வாழ்க்கை: சுக்கிரன் சாதக மாக இருந்தால் 26 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வார்.

ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலை யிலிருக்கும். ஆனால் குரு தசை நடக்கும் காலத்தில், நீரிழிவு நோய், மலேரியா போன்ற நோய்களை எதிர் கொள்வார்கள்.

பரணி நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், யாராவது தவறு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் உடனே அவர்களை மன்னித்துவிடும் இரக் க குணமுடையவர்.

ப் குடும்பம்: செவ் வாய் சாதகமாக இருந் தால், 23 வயதிற்கு பிறகு திருமணம் செய்துகொள்வார். சுக்கிரன், செவ்வாய் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். தன் கணவரின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக இருப் பார்.

ப் திருமணப் பொருத்தம்: பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, திருவாதிரை, நீங்கலாக மற்ற நட்சத்திரக் காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் குரு தசையில் மாதவிடாய் பிரச்சினை கள் மற்றும் கருப்பப்பை கோளாறுகளால் பாதிக்கப்படுவார்.

நட்சத்திர பலன்கள்

பரணி நட்சத்திரக்காரர்கள் அன்றைய தினத்தின் நட்சத்திரத்தைக் கொண்டு தின பலனறியும் குறிப்பு.

barani

bala160525
இதையும் படியுங்கள்
Subscribe