Advertisment

நலம் தரும் நட்சத்திரம்! 1 அஸ்வினி

/idhalgal/balajothidam/auspicious-star-1-ashwini

1 அஸ்வினி

"அவரவர் தமக்கு உள்ள ஆயுதம் தொழிலும் பொன்னும் இவர்களின் வித்தை செல்வம் எழில் மரணங்கள் ஏழும் தமுடைப் பிரம தேவன் தனது கைத் தொடங்கு முன்னஞ் சிவனுடைய அருளினாலே கர்பத்தில் நிச்சயிப்பான்.'' -விரும கண்டிகை

Advertisment

பொருள்: மனிதர்களைப் படைக்கும் பிரம்ம தேவன், சிவ பெருமானின் அருள்பெற்று, ஆயுள், தொழில், புகழ், வித்தை, எழில், செல்வம், மரணம் ஆகிய ஏழும், அவரவர் வாழ்க்கையில் எவ்வாறு அமையவேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்.

Advertisment

ss

(நட்சத்திர மாலை, நட்சத்திர சூடாமணி, நட்சத்திர நிகண்டு, ஜோதிட ரத்ன மாலா, ஜோதிட சித்தாந்த சாரம், மரண கண்டிகை, விரும கண்டிகை போன்ற மூல நூல்களின் கருத்துக்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது)

ப் பண்டைய காலத்தில், கடலோடிகளுக்கு, நட்சத்திரங்களே, திசை காட்டும் கருவியாக இருந்தன. கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும், மனித

1 அஸ்வினி

"அவரவர் தமக்கு உள்ள ஆயுதம் தொழிலும் பொன்னும் இவர்களின் வித்தை செல்வம் எழில் மரணங்கள் ஏழும் தமுடைப் பிரம தேவன் தனது கைத் தொடங்கு முன்னஞ் சிவனுடைய அருளினாலே கர்பத்தில் நிச்சயிப்பான்.'' -விரும கண்டிகை

Advertisment

பொருள்: மனிதர்களைப் படைக்கும் பிரம்ம தேவன், சிவ பெருமானின் அருள்பெற்று, ஆயுள், தொழில், புகழ், வித்தை, எழில், செல்வம், மரணம் ஆகிய ஏழும், அவரவர் வாழ்க்கையில் எவ்வாறு அமையவேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்.

Advertisment

ss

(நட்சத்திர மாலை, நட்சத்திர சூடாமணி, நட்சத்திர நிகண்டு, ஜோதிட ரத்ன மாலா, ஜோதிட சித்தாந்த சாரம், மரண கண்டிகை, விரும கண்டிகை போன்ற மூல நூல்களின் கருத்துக்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது)

ப் பண்டைய காலத்தில், கடலோடிகளுக்கு, நட்சத்திரங்களே, திசை காட்டும் கருவியாக இருந்தன. கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும், மனித வாழ்க்கை எனும் கடலில், திக்கு, திசைக்காட்டி, வெற்றியின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் நட்சத்திரங்கள் தான்.

ப் மனிதரின் மனம்தான், வெற்றி- தோல்வி, இன்ப- துன்பங்களுக்கு காரணமும், காரியமும் ஆகிறது. அந்த மனதிற்கு அடிப்படையாக அமைவது பிறவி குணம். அந்த குணத்திற்கு காரணமாக அமைவது, ஜனன காலத்தில் மனோகார கனாகிய சந்திரன் அமரும் நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தின், நான்கு பாதங்களில் ஒவ்வொரு பாதமும் வேறுபட்ட வித்தியாச குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது தன் குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்துக்கொண்டு பலன்களை வெளிப்படுத்துகின்றன. பன்னிரண்டு ராசிகளில் அமையும் இருபத்தியேழு நட்சத்திரங்களும், நான்கு பாதங்களைக்கொண்டு இயங்கி, நூற்றியெட்டு குணாதிசயங்களை உருவாக்கின்றன.

"மருத்துவர் கையை பிடிப்பார், ஜோதிடர் காலைப் பிடிப்பார்'' என்பது பழமொழி. நோயினால் ஏற்பட்ட நாடி பேதம் அறிவதற்காக மணிக்கட்டிற்கு ஒரு அங்குலந்தள்ளி கையை பிடித்துப் பார்ப்பார் மருத்துவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரக் காலை கண்டுபிடித்து பலன் சொல்வார் ஜோதிடர். ஒருவரின் மனம்போல் வாழ்க்கை அமைவதால், ஜனன காலத்து நட்சத்திர பாதமே அவர் வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் தன்மையறிந்து அதற்கேற்றார்போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பயனடைய வேண்டுமென்பதே இந்த தொகுப்பின் நோக்கம்.

பொதுவான குணம்

இது கேதுவின் ஆதிக்கத் திற்குரிய நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனஉறுதி அதிகம். அச்சம் இல்லாதவர், முயற்சிகளில் அதிதீவிரம். பிறர்மீது அதிகாரம் செலுத்துவது, பிறருடன் எச்சரிக்கை உணர்வுடன் பழகுதல். சகோதர ஒற்றுமை குறைவாக இருக்கும். உணவுப் பிரியர்கள். உடையில் அதிக திருப்தி இருக்காது. கோபம் பதட்டம் அதிகம்.

as

அஸ்வினி நட்சத்திரம் (ஆண்)

ப் குணம்: தன்னை நம்பியவர்களைக் காப்பாற்ற எதையும் தியாகம் செய்வார்.

ப் குடும்பம்: தாய்வழி சொந்தங்களால் உதவி கிடைக்கும்.

ப் தொழில்: சொந்தத் தொழிலில் ஆர்வம் அதிகம். கட்டுமான பொருட்கள் விற்பனை, உணவகம், மருத்துவம், கால்நடை வளர்ப்பு, அரசுப்பணி. 30 வயதிற்குள் நிலையான வாழ்க்கை அமையும்.

ப் திருமணப் பொருத்தம்: பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், புனர் பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம்.

ப் திருமண வாழ்க்கை: வாழ்க்கைத் துணையாக வருபவர் அதிக பாசம், பற்று உடையவராக இருப்பார்.

ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக் கியம் நல்லநிலை யிலிருக்கும். 13, 19, 27, 45-ஆவது வயதில் அதிக எச்சரிக்கைத் தேவை.செவ்வாய் தசையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறு வரலாம்.

எல்லா வருடமும், சித்திரை மாதம் பௌர்ணமிக்கு பின் வரும் பதிமூன்றாம் நாள், அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ass

அஸ்வினி நட்சத்திரம் (பெண்)

ப் குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், காந்தருவ தத்துவத்தை சேர்ந்தவர் கள். அச்சமில்லாதவர்கள். பிறர் மனதை எளிதில் அறிந்துக்கொள்வார். பேச்சில் வல்லவர்.

ப் குடும்பம்: தன் குடும்பத்திற்காக கடுமையாக உழைப்பவர்..

ப் தொழில்: 50 வயதில், பணியிலிருந்து ஓய்வுபெற விரும்புவார்.

ப் திருமணப் பொருத்தம்: ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி, திருவாதிரை, மிருகசிரீடம்: 3, 4 பாதங்கள், சித்திரை 1, 2 பாதங்கள் நீங்கலாக, மற்ற நட்சத்திரக் காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

ப் திருமண வாழ்க்கை: 25 வயதிற்குள் திருமணம் நடந்தால், கணவன்- மனைவிக்குள் பிரிவு உண்டாகலாம்.

ப் ஆரோக்கியம்: 40 வயதிற்குமேல், மனநலம் பாதிக்கப்படலாம்.

செல்: 63819 58636

bala020525
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe