ஒரு செயலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது எதிரே தென்படும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகளின் சகுனங்களைக்கொண்டு, நாம் செல்லும் காரியத்தின் வெற்றி, தோல்வியை மறைமுகமாக அறியும் ஒரு அடையாளமே சகுனமாகும். இன்றும் பலர் வெளியே செல்லும்முன் யார் வருகிறார்கள், என்ன கொண்டு வருகிறார்கள், என்று பார்த்து, அதற்கேற்றபடி செயல் படும் வழக்கம் இருப்பதை நடை முறையில் பார்க்கிறோம். இது பலரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. உண்மையில் சகுனம் பார்க்கவேண்டுமா? உணர்த்தப் படும் சகுனத்திற்குப் பின்னுள்ள உண்மைகளை இந்தக் கட்டுரை யில் காணலாம்.
நவகிரகங்களுக்கும் சகுனத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அந்த வகையில் நவகிரகங்களுக்கான சுப, அசுப சகுனப் பலன்களைக் காணலாம்.
சூரியன்
நவகிரகங்களின் தலைமை மற்றும் ராஜகிரகம் சூரியன். ஒரு வரின் புகழ், அந்தஸ்து மற்றும் அழியாப் புகழுக்கு சூரியனே காரணம். எனவே சூரியனின் அம்ச மான அரசாள்பவர்கள், கொடி ஏந்தியவர்கள், குடைபிடித்து வருபவர்கள், தீபம் ஏந்தி வருவது நல்ல சகுனமாகும்.
சந்திரன்
சந்திரன் உடல் மற்றும் உடலை வளர்க்கும் உணவிற்கு ஆதாரமானவர். சந்திரனின் அதி தேவதை அம்பிகை. எனவே வெளியே செல்லும்போது தானிய வகைகள், அரிசி, பால், தயிர், சாதம், தேன், தண்ணீர்க் குடம், முத்து, அம்மன் உருவம், நீர் நிலைகள் மற்றும் கடல் படங்கள், கன்றுடன் கூடிய பசுக்கள் போன் றவை தென்பட்டால் சுப சகுனமாகும்.
செவ்வாய்
கிரகங்களில் மிகவும் வெப்ப மான, கடினமான பாறைகளான கிரகம் செவ்வாய். இதன் நிறம் சிவப்பு. இது போர்க்குணம் நிறைந்த கிரகம். மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் செவ்வாயே காரணமாகும். எனவே வெளியே செல்லும்போது கால் இடறுவது, தலையில் அடிபடுவது , ஆயுதம் ஏந்தியவர்கள் வருவது, கல், மண் சுமந்து வருவது, ஆம்புலன்ஸ் ஒலி, சண்டையிடுதல், கூச்சல் கேட்பது, வதம் செய்யும் உருவச் சிலைகள் அல்லது வதம் செய்யும் ஆயுதங்கள் ஏந்திய உருவச் சிலைகள் தென்பட்டால் காரியத்தடையை ஏற்படுத்தும்.
புதன்
இளமைக்கும் நட்பிற்கும் புத்திக்கும் காரககிரகம் புதன். புதனின் நிறம் பச்சை. எனவே வெளியே செல்லும்போது நண்பர்கள், கன்னிப் பெண், காதலர்கள், சுப வார்த்தைகள் தென்பட்டால் காரியசித்தி கிட்டும்.
குரு
தெய்வாம்சம் நிறைந்த மற்றும் மங்கலப் பொருட்கள் அனைத்திற்கும் குருவே அதிபதி. எனவே சுப காரியத்திற்குச் செல்லும்போது அழகிய குழந்தை, யானை, பசு, இரட்டை பிராமணர், சங்கொலி, மணியோசை, நெய், சந்தனம், தாம்பூலம், அட்சதை, பணம், தங்க நகைகள் போன்றவற்றைக் கண்டால் காரிய வெற்றி உண்டு.
சுக்கிரன்
அழகு , ஆடம்பரப் பொருட்கள், கலைப் பொருட்கள், கலைகள், சுவையான உணவுப் பொருட்கள் போன்ற அனைத்திற்கும் சுக் கிரனே அதிபதி. எனவே சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த சுமங்கலிப் பெண்கள், மணக் கோலம், கலைஞர்கள், காளை மாடு, குதிரை, அழகிய வாசனை மிகுந்த பூக்கள், வாசனை திரவியங்கள், சுவையான பழம், உணவு வகைகளைக் கண்டால் சுப சகுனமாகும்.
சனி
மனிதர்களின் கர்மவினையை உணர்த்து பவர் சனி பகவான். சனியின் நிறம் கருப்பு. கரிய நிறம் துக்கம், வருத்தத்தைக் குறிக்கும். சனியின் காரகத்துவம் மிகுந்த எண்ணெய், அழுகைக் குரல், அழுக்கு உடை அணிந் தவர்கள், உடைந்த பொருட்கள் போன்றவற்றைக் காண்பது அசுப சகுனமாகும்.
ராகு
ராகுவின் ஆதிக்கம் மிகுதியான விறகு, நோயாளிகள், மனநலம் குன்றியவர்கள், விதவை மற்றும் வாழாத பெண்கள், விபத்து, பன்றி, பாம்பு, அசைவ உணவு போன்றவற்றைக் கண்டால் காரியத் தடையை ஏற்படுத்தும்.
கேது
மொட்டைத் தலை, தலைவிரி கோலம், ஒற்றை பிராமணர், தடைச் சொற்கள்.
அறிவியல் வளர்ந்த இந்த நவீன யுகத்தில் வாழும் நமக்கு சகுனம் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா என யோசித்தால் பல உண்மைகள் புலப்படும். நடைமுறை வாழ்க்கையில் நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட ஒருசில நம்பிக்கைகளில் உள்ள உண்மையான காரணங்களைப் பற்றியும் காணலாம். ஒரு வேலையாக வெளியே செல்லும் பொழுது கவனக்குறைவால் கை, காலில் அடிபட்டாலோ அல்லது தலையில் இடித்தாலோ மனதில் படபடப்பு, தைரியக் குறைவு ஏற்படும். சென்ற வேலையை சரிவர செய்ய முடியாது. எனவே வீட்டிற்குத் திரும்ப வந்து தண்ணீர் குடிப்பது நமது வழக்கம்.
அதாவது கவனக்குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருப்பதற்காகவும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த தண்ணீரைக் குடிக்கும் போது மனம் ஒருநிலைப்படும். காரிய சித்தி கிட்டும். மனித மனதில் ஏற்படும் சலனத்திற்கு மனோகாரகன் சந்திரனே காரணம். எனவே வெளியே செல்லும்போது தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற பெரிய தந்திரத்தை நமக்கு சகுனத்தின் மூலம் முன்னோர்கள் உணர்த்தி இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் திருமணம் தொடர்பான முயற்சிக்கு வெளியே செல்லும்போது விதவைகள் தென்பட்டால் திருமண முயற்சி தடைப்படும் என்பது நம்பிக்கை. வரப்போகும் வரனால் ஏற்படப்போகும் அசுபப் பலனை சகுனத்தால் உணர்த்திய பெண்ணுக்கு மனதால் நன்றி கூறி, திருமண முயற்சியை வேறு நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பூமியில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் கட்டளைப்படியே நிகழ்கின்றன. நல்ல நேர்மறை சிந்தனை களுடன், எந்தவித தீயநோக் கமும் இல்லாமல் உயர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்தாலேபோதும்; நமக்கும் நடக்கும் செயல்கள் யாவும் இனிதாகவே அமையும்.
பரிகாரம்
வாழ்வின் அன்றாட இயல் பான தினப்படி நிகழ்விற்கு கை, கால் இடித்துக் கொள்ளல், பூனை குறுக்கே செல்லுதல், விதவை, நோயாளி, தலை விரித்து வரும் பெண், தும்மல் போன்றவற்றைக் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
புதிய தொழில் ஒப்பந் தம், நீண்ட தூரப் பயணம் போன்றவற்றிக்குச் செல்லும் போது அசுப சகுனம் தென்பட்டால், திரும்பி வந்து நீர் பருகி ஐந்து நிமிடம் கழித்து விநாயகரை வழிபட்டுப் புறப் படலாம். இரண்டாம் முறையும் சகுனத்ததடை ஏற்பட்டால் பயணத்தைத் தள்ளிப் போடவேண்டும்.
அசுப சகுனம் ஏற்படும் போது, மகாவிஷ்ணுவையும் மனதில் தியானித்துக் கிளம் பலாம்.
செல்: 98652 20406