"யோகம் எனில் ஜோதிடமுறையில் "கிரகச் சேர்க்கை' எனப்பொருள். ஒரு கிரகம் மட்டும் ராசிகளில் தனித்திருந்தால், அந்த கிரகத்தால் எந்த நற்பலனும் ஜாதகருக்கு அமையாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்திலுள்ள ராசிகளில் இணைந் திருந்தாலோ, முன்பின் ராசிகளிலிலிருந்தாலோ, அதனைக்கொண்டு நன்மை- தீமை எனப் பலவிதமான யோகங்களைக் கூறுவார்கள். அவற்றுள் மிகமுக்கியமான ஒன்று "கர்த்தரி யோகம்' ஆகும்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், ஒரு ராசியிலுள்ள கிரகத்துக்கு 2, 12 என இருபுறமும் உள்ள ராசிகளில் இரண்டு கிரகங்கள் இருக்கும் நிலையே கர்த்தரி யோகமாகும். இந்த கர்த்தரி யோகம் சுபகர்த்தரி யோகம், பாவகர்த்தரி யோகம் என இரண்டாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.
பிறப்பு ஜாதகத்தில், ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு 2, 12-ஆவது ராசிகளில் சுபகிரகங்கள் இருந்தால் அதனை சுபகர்த்தரி யோகம் எனவும்;
பாவகிரகம் இருந்தால் அதனை பாவகர்த்தரி யோகம் எனவும் பாரம்பரிய மாற்றுமுறை ஜோதிடம் கூறுகிறது.
சித்தர்கள் கூறியுள்ள, தமிழ் மக்கள் முற்காலத்தில் பயன்படுத்திய தமிழ்முறை ஜோதிடத்தில், ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு 2, 12-ஆ
"யோகம் எனில் ஜோதிடமுறையில் "கிரகச் சேர்க்கை' எனப்பொருள். ஒரு கிரகம் மட்டும் ராசிகளில் தனித்திருந்தால், அந்த கிரகத்தால் எந்த நற்பலனும் ஜாதகருக்கு அமையாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதகத்திலுள்ள ராசிகளில் இணைந் திருந்தாலோ, முன்பின் ராசிகளிலிலிருந்தாலோ, அதனைக்கொண்டு நன்மை- தீமை எனப் பலவிதமான யோகங்களைக் கூறுவார்கள். அவற்றுள் மிகமுக்கியமான ஒன்று "கர்த்தரி யோகம்' ஆகும்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், ஒரு ராசியிலுள்ள கிரகத்துக்கு 2, 12 என இருபுறமும் உள்ள ராசிகளில் இரண்டு கிரகங்கள் இருக்கும் நிலையே கர்த்தரி யோகமாகும். இந்த கர்த்தரி யோகம் சுபகர்த்தரி யோகம், பாவகர்த்தரி யோகம் என இரண்டாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது.
பிறப்பு ஜாதகத்தில், ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு 2, 12-ஆவது ராசிகளில் சுபகிரகங்கள் இருந்தால் அதனை சுபகர்த்தரி யோகம் எனவும்;
பாவகிரகம் இருந்தால் அதனை பாவகர்த்தரி யோகம் எனவும் பாரம்பரிய மாற்றுமுறை ஜோதிடம் கூறுகிறது.
சித்தர்கள் கூறியுள்ள, தமிழ் மக்கள் முற்காலத்தில் பயன்படுத்திய தமிழ்முறை ஜோதிடத்தில், ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு 2, 12-ஆவது ராசிகளில், அந்த கிரகத்துக்கு நட்பு கிரகங் கள் இருந்தால் நல்ல பலன்களைத் தரும் சுபகர்த்தரி யோகம் என்றும், பகை கிரகங்கள் இருந்தால் சிரமம், தடைகளைத் தரும் பாவ கர்த்தரி யோகநிலை என்றும் கூறப் பட்டுள்ளது.
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சுபகர்த்தரி யோக அமைப்பானது, அவர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனை, இப்பிறவியில் அவர் அனுபவிக்கப்போகும் நன்மைகளையும் பலனடையும் காலங்களையும் அறியச் செய்கிறது.
ஒரு உதாரண ஜாதகம்மூலம் இதன் விளக்கத்தைக் காண்போம்.
இந்தப் பிறப்பு ஜாதகத்தில், குரு என்ற உதாரண கிரகம் அந்த ஜாதகரையே குறிக்கிறது.
சுக்கிரன் அவரது மனைவியைக் குறிப்பிடு கிறது. சனி அவரின் இப்பிறவித் தொழில், ஜீவனம், பொருள் சம்பாத்திய நிலை, பொருளாதார உயர்வு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
இந்த ஜாதகத்தில், மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரனுக்கு 12-ஆவது ராசியில் ஜாதகரைக் குறிப்பிடும் குருவும், 2-ஆவது ராசியில் அவரின் தொழில், வருமானத்தைக் குறிப்பிடும் சனியும் உள்ளன.
சுக்கிரனுக்கு 2, 12-ஆவது ராசிகளில் அதன் நட்பு கிரகங்களான குருவும் சனியும் இருப்ப தால், சுக்கிரன் சுபகர்த்தரி யோக அமைப்பி லுள்ளது. இந்த யோக பலத்தால், இவர் இப் பிறவி வாழ்வில் அடையும் நன்மைகளை அறிவோம்.
இந்த ஜாதகர் நல்ல வசதியான குடும்பத் தில் பிறந்தவர். பிறந்ததுமுதல் இவர் பெரிய கஷ்டமின்றி வாழ்ந்திருப்பார். இவருக்குத் திருமணமாகும்வரை சரியான தொழில், உத்தியோகம் அமையாது. சுய சம்பாத்தியம் பெரிதாக இல்லாமலிருக்கலாம்.
ஜாதகர் (குரு) இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் மனைவி கிரகம் சுக்கிரன் இருப்பதால், சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார். சுவையான உணவு வகைகளை விரும்பி உண்பார். எப்போதும் மனைவியுடனேயே இருக்க விரும்புவார். மனைவிமீது அதிக பாசமும், பிரியமும் கொண்டிருப்பார். "பெண்டாட்டி தாசன்' எனக் கூறலாம். அழகான ஆடைகள் அணிவதிலும், அலங் காரம் செய்துகொள்வதிலும் விருப்பமுடையவர்.
இவருக்கு உறவுப் பெண் ணுடன் திருமணம் நடைபெறலாம். மனைவி உரத்த குரலில் பேசுவாள். கொஞ்சம் முன்கோப குணமுள்ளவள். குடும்பத்தின்மீது பாசமுள்ளவள். அவள் பிறந்த ஊர் வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு திசையில் சுமார் 25 மைல் தொலைவுக்குள் இருக்கும். அவள் பிறந்த வீடு தெற்கு- வடக்கு வீதியில் கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடு.
ஜாதகரைக் குறிக்கும் குரு நகர்வு நிலையில், 2-ஆவது ராசியிலுள்ள மனைவி கிரகமான சுக்கிரனை முதலில் சேர்கிறது. அதனால் அவருக்கு முதலில் திருமணம் நடந்து ஒரு மனைவியை அடைவார். இவருக்கென தனிக்குடும்பம் அமைந்தபின்புதான், இப்பிறவி வாழ்வில் ஜீவனத்துக்கென்று விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான தொழில் அமைந்து, சுயமாக சம்பாதித்து வாழ்வார்.
மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கு 2-ஆவது ராசியில் தொழில், ஜீவனத் தைக் குறிக்கும் சனி உள்ளது. இவரின் திருமணத்துக்குப்பின் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து தொழில்செய்து அல்லது உத்தியோகம் பார்த்து, பணம் சம்பாதித்து வாழ்வார்கள். மனைவிமூலம் சொத்தோ பணமோ கிடைக்கும். அல்லது மனைவி உத்தியோகம் பார்த்து, தொழில்செய்து சம்பாதிப்பாள். குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவாள். திருமணத்துக்குப் பிறகு சொந்தமாக வீடு, வாகனம், நகைகள் என எல்லாம் அமையும். பணப்புழக்கத்தில் என்றும் குறைவிருக்காது. மனைவி யோகத்தால் மன்னன்போல் வாழ்வார்.
சுக்கிரனுக்கு 2-ஆவது ராசியில் சனி இருப்ப தால், திருமணத்துக்குப்பின், மனைவியை அடைந்தபின்பே சுபகர்த்தரி யோகப் பலன் கிடைக்கும். இவர் முதலிலில் ஒரு தொழிலைச் செய்து சம்பாதித்து, அதன்பின்னர் திருமணம் செய்துகொள்ளலாமென செயல்பட்டு வாழ்ந்தால், இவர் நினைப்பது போல் தொழிலும் அமையாது; திருமணமும் தடையாகி நடக் காமலே இருக்கும். இதைப் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
சுபகர்த்தரி யோக நிலையில் இதுபோன்று கிரகங்கள் அமைந் திருந்தாலும், குரு, சுக்கிரன், சனிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில், ஒரே நட்சத்திர மண்டலத்தில் முற்பிறவி சாப தோஷங்களைக் குறிப்பிடும் கேது இருந்தாலும் யோகப்பலனில் மாற்றமுண்டாகும்.
குருவுக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால், ஜாதகர் வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமில்லாமல், விரக்தியுடன், சந்நியாசி போல் பொறுப்பற்றவராக இருப்பார். கடவுள் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையுடன், கஷ்டத்துடனேயே வாழ்வார்.
சுக்கிரனுக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் கேது இருந்தால், கணவன்- மனைவிடையே கருத்து வேறுபாடு, பணம், பொருள் சம்பந்த மாக சண்டை, சச்சரவுகள் உண்டாகும். திருமணத்துக்குப் பிந்தைய குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இராது. மனைவிக்கு வயிறு, கர்ப்பப்பை சம்பந்தமான நோயுண்டாகும். முற்பிறவியில் மனைவிக்குச் செய்த துரோகத் தினால் உண்டான சாபம் செயல்பட்டு சிரமங் களைத் தரும்.
பாவகர்த்தரி யோகம் பற்றி அடுத்த இதழில் காணலாம்.
செல்: 99441 13267