முதலாளியாக்கும் சதுஷ்பாதம்! ஜோதிட கலையரசி M.தனம்

/idhalgal/balajothidam/auspicious-fortune-will-make-you-boss-astrologer-m-thanam

சதுஷ்பாதம்

இக்கரணத்தில் பிறந்தவர்கள் சுதந்திர தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுக்கு பணிந்து வேலை செய்யாமல் தானே முதலாளியாக இருக்கக்கூடிய வியாபாரத் தொழிலையே இவர்கள் செய்வார்கள்.

ss

அதி தேவதை- குபேரன்

சேனாதிபதி ருத்திரன்

மிருகம்- நாய்

கிரகம்- செவ்வாய்

மலர்- கொன்றைமலர்

ஆகாரம்- தேன்

பூசுவது- விபூதி

ஆபரணம்- படிகமணி

தூபம்- சந்தனப் பொடி

வஸ்திரம்- பருத்திதுணி

பாத்திரம்- மரப் பாத்திரம்

கிழமை- வியாழன்

தேவதை- மணிபத்திரன்.

இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் சிம்ம லக்னம் அ

சதுஷ்பாதம்

இக்கரணத்தில் பிறந்தவர்கள் சுதந்திர தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுக்கு பணிந்து வேலை செய்யாமல் தானே முதலாளியாக இருக்கக்கூடிய வியாபாரத் தொழிலையே இவர்கள் செய்வார்கள்.

ss

அதி தேவதை- குபேரன்

சேனாதிபதி ருத்திரன்

மிருகம்- நாய்

கிரகம்- செவ்வாய்

மலர்- கொன்றைமலர்

ஆகாரம்- தேன்

பூசுவது- விபூதி

ஆபரணம்- படிகமணி

தூபம்- சந்தனப் பொடி

வஸ்திரம்- பருத்திதுணி

பாத்திரம்- மரப் பாத்திரம்

கிழமை- வியாழன்

தேவதை- மணிபத்திரன்.

இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி, ரிஷப லக்னம் அல்லது ரிஷப ராசியில் பிறந்தவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது. இளம்வயதில் சம்பாதிக்கிறார்கள். எவ்வளவு சிறிய வேலைக்காரர்களாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் தானே முதலாளியாக நடந்து கொள்வார் கள். இதனால் பலருக்கும் சம்பளம்கூட கிடைப்பதில்லை. அந்தஸ்து, புகழ் கிடைக்கிறது. இக்கரணத் தில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் திதி சூன்யத்தில் குரு இருந்தால் குரு நல்ல நிலையில் இருந்தாலும்கூட பெரும் பலனை தருவதில்லை. மேற்பார்வையிடும் தளபதி வேலையை சிறப்பாக செய்வார்கள். இவர்களுக்கு மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமை அதிகமுள்ளது. சம்பந்தமே இல்லாமல் பலர் இவர்கள்மீது எரிச்சலாக இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் பலருக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. இவர்களுக்கு நன்றி உணர்வு அதிகமிருக்கும். எதையும் தேடி ஆராய்ந்து பார்ப்பது இவர் களுக்கு பிடிக்கும். இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் பிறரிடம் அனைத்தி லும் உண்மையாக நடந்து கொள்வார்கள். மிகவும் கடுமையாக உழைக்கக்கூடிய தன்மை கொண்ட வர்களாக இருப்பார்கள். வேலை செய்வதிலும் பேசுவதிலும் எல்லா விஷயங்கüலும் இவர்கள் மிகவும் வேகமாக இருப்பார்கள். இவர்களுடைய சுறுசுறுப்பு எல்லாரிடமும் ஒரு நல்ல பெயரைப் பெற்றுதரும்.

இவர்கள் எதிர் பா-னத்தினரிடம் அதிகம் பிரியம் கொண்டவர்கள். இக்கரணத்தில் பிறந்தவர்கள் சிலர் வறுமையில் வாடுவார்கள். இவர்களிடம் அதிக முன்கோபம் இருக்கும். இவர்கள் எளிதில் தீய பழக்க வழக்கத்தை பழகிவிடுவார்கள். இவர்கள் நாய்களுக்கு உணவு கொடுப்பது நல்லது. அவற்றை துன்புறுத்தக் கூடாது.

இக்கரணத்தில் பிறந்த வர்கள் வழிபடும் தெய்வத்திற்கு விபூதி பூசி, கொற்கை மலர்களால் அலங்கரித்து, படிக மணி ஆபரணம் அணிவித்து, தேன் வைத்து, தேன் கலந்த உணவை படைத்தும், சந்தனப் பொடி தூபம் காட்டி, தலையில் வஸ்திரம் அணிவித்து. மரப் பாத்திரக் குடுவையில் நீர் தெளித்து வழிபட்டுவர கரண தெய்வம் மனம் குளிர்ந்து கரணநாதன் பூரண பலம் அடைகின்றார். ஜாதகருக்கு தடைபட்டுக்கொண்டிருந்த பலவிதமான காரியங்கள் எல்லாம் கைகூடும். இவர்கள் வழிபடவேண்டிய தெய்வம் மயிலாடுதுறை குத்தாலம் சேந்திரா பாலபுரம் ஊரில் இருக்கிறது. 64 வகை பைரவரின் பூரண வடிவமும் திருமணஞ்சேரி அருகே இருக்கிறது. இந்தக் கரணத்தில் பிறந்த அனைவரும் பைரவரை வழிபாடு செய்து அவரின் அருளாசியை பெறுங்கள்.

கட்டுரை மற்றும் ஜோதிடம் தொடர்பாக பேச: 90802 73877

bala060625
இதையும் படியுங்கள்
Subscribe