Advertisment

சந்திரன் தரும் சுப அசுபங்கள்! -பண்டிட் எம்.ஜி.பி.

/idhalgal/balajothidam/auspicious-and-inauspicious-effects-moon-pandit-mgp

ந்திரன் வளர்பிறையில் ஒளிபொருந்திய சந்திரனாக, ராகு- கேது தொடர்பு பெறாத நிலையில் நற்பலன்களை வழங்குகிறார்.

Advertisment

அமாவாசை முடிந்த மூன்றாம் நாளிலிருந்து பௌர்ணமி வரையில் வளர்பிறைச் சந்திரனாக, நாளுக்கு நாள் ஒவ்வொரு திதியிலும் ஒளித்தன்மை அதிகரித்துக்கொண்டே வரும்பொழுது, முழுமையான ஒளிபொருந்திய சந்திரனாக (180 பாகை) பௌர்ணமியன்று குருவுக்கு நிகராக சுபத் தன்மை யுடன் செயல்படுவார்.

பௌர்ணமி முடிந்த பஞ்சமி திதிவரை, சுபத் தன்மையுடனும், பஞ்சமி திதியிலிருந்து அமாவாசை நெருங்கும்வரை தேய்பிறைச் சந்தி

ந்திரன் வளர்பிறையில் ஒளிபொருந்திய சந்திரனாக, ராகு- கேது தொடர்பு பெறாத நிலையில் நற்பலன்களை வழங்குகிறார்.

Advertisment

அமாவாசை முடிந்த மூன்றாம் நாளிலிருந்து பௌர்ணமி வரையில் வளர்பிறைச் சந்திரனாக, நாளுக்கு நாள் ஒவ்வொரு திதியிலும் ஒளித்தன்மை அதிகரித்துக்கொண்டே வரும்பொழுது, முழுமையான ஒளிபொருந்திய சந்திரனாக (180 பாகை) பௌர்ணமியன்று குருவுக்கு நிகராக சுபத் தன்மை யுடன் செயல்படுவார்.

பௌர்ணமி முடிந்த பஞ்சமி திதிவரை, சுபத் தன்மையுடனும், பஞ்சமி திதியிலிருந்து அமாவாசை நெருங்கும்வரை தேய்பிறைச் சந்திரனாக, அமாவாசை அன்று முழுமையாக பூஜ்ஜியம் டிகிரியில் சனிக்கு நிகரான பாவியாக செயல்படுவார்.

எந்த லக்னமாக இருந்தாலும், எந்த ராசியாக இருந்தாலும், எந்த தசை நடந்தாலும் மனதை ஆள்பவன் சந்திரன் என்பதால், அங்கே மறைமுகமாக மனதை ஆட்கொள்பவராக, சந்திரனே செயல்படுகிறார்.

Advertisment

cc

ஒரு தசையில் மனம்கெட்டு, கெட்ட செயல்கள் அல்லது சமுதாயத்திற்கு ஒத்துவராத செயல்களைச் செய்யவைப்பவரும் சந்திரனே.. (குறிப்பாக ஒருவர் வரம்பு மீறிய உறவுகளில் ஈடுபடுவதற்கும் மனம் கெட்டுப் போதலே காரணம். அங்கே என்னதான் சுக்கிர தசையோ ராகு தசையோ நடந்தாலும்கூட மறைமுகமாக மனதைக் கெடுப்பவர் சந்திரன்).

பௌர்ணமிச் சந்திரன் அல்லது பௌர்ணமி நெருங்கிக் கொண்டிருக்கும் ஒளிபொருந்திய சந்திரனுக்குக் கேந்திரங் களில் நிற்கும் கிரகங்களும் சுபத்தன்மை பெறும். அதாவது சந்திரனின் ஒளிச் சிதறல்கள்மூலம் சுபத்தன்மை பெறும். (ஜோதிடமே ஒளி தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டது).

சந்திரன் நீர்நிலைகளுக்குக் காரணம் வகிப்பவர். மனதை ஆள்பவர் சந்திரன் என்பதால் மனிதனின் எண்ண ஓட்டங்களுக்கும் சந்திரனே காரணம் வகிக்கிறார். அதனால் தான் சாதுக்கள், ரிஷிகள் முதலானவர் நீர்நிலைகளில் தங்களுடைய ஆத்மபலத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மனிதனின் ஞாபக சக்தி, மன அழுத்தம் (க்ங்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய்), அதிகபட்ச விரக்தி, தேவையற்ற பயம், ஆழ்மனதில் பதிந்துபோன சகிக்கமுடியாத சில விஷயங்கள் முதலானவற்றிற்க்கு சந்திரனே காரணம் வகிக்கிறார்.

நீருடன் இணைந்த குருதியே மனித உடலில் ஆற்றலாகப் பாய்கிறது; செவ்வாய்+ சந்திரன் சேர்க்கையைக் குறிக்கிறது. செவ்வாயுடன் இணைந்த ஒளிபொருந்திய சந்திரன் நற்பலன்களை வழங்குகிறார். ராகு- கேதுவுடன் இணைந்த சந்திரன் ஒளிபொருந்திய நிலையில் இருந்தாலும் ராகு- கேதுவால் கிரகணப் படுத்தப்பட்ட சந்திரன். தன்னுடைய தசையில் ஜாதகருக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கிறார். மேலும் எந்த ஆதிபத்தியத்தை சந்திரன் பெற்றிருக் கிறாரோ அது சார்ந்த விஷயங்களில் மன அழுத்தங்கள் உருவாகிறது. இந்த இணைவை குரு பார்க்கும்பொழுது தசை முடிவில் பிரச்சினைகளிலிருந்து ஜாதகர் வெளிவருவார்.

சந்திரனை பலப்படுத்த பால், தயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாகத் தருதல், விலங்குகளுக்கு தயிர் அன்னம் தருதல், பௌர்ணமியில் சந்திரன் வழிபாடு, சிவ வழிபாடு போன்றவை நற்பலன்களைக் கொடுக்கும்.

செல்: 8903551587

bala041024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe