மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி
மனிதகுல வளர்ச்சியின் ஆதாரத்திற்கு பெரும் பங்காற்றும் கலைகளில் ஜோதிடக் கலை முதன்மை பெறுகின்றது.
இதில் இடம்பெற்றுள்ள கணிதங்களும், வகைகளும், முறைகளும் பல நுணுக்கமான செயல்பாடுகளுடன் தொடர்புடையது.
அதில் பஞ்சாங்கம் என்னும் பஞ்ச அங்கங்களுடன் தொடர்புடைய வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பகுப்புக்களுடனேயே பஞ்சாங்க கணிதம் மிளிர்கின்றது.
இந்த அண்ட சராசரமும், அதில் அடங்கியுள்ள அனைத்து ஜீவராசிகளும், பஞ்சபூதத்தின் தொகுப்பு என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி
வாரத்தை நெருப்பு தத்துவமாகவும்,
நட்சத்திரத்தை நீர் தத்துவமாகவும்
திதியை நில தத்துவமாகவும்
யோகத்தை ஆகாய தத்துவமாகவும்
கரணத்தை காற்று தத்துவமாகவும் ஜோதிடத்தில் பிரித்து கையாளப்படுகின்றது.
கரணத்திற்கு காற்றுடன் சம்பந்தப்படுவதனால் வாசனை என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மிளிரவுகளில் இறுதி நிலைப்பாடான கரணம் ஒரு ஜாதகத்தில் பெரும் பங்காற்றுகின்றது.
கரணம் என்பது ஒரு முழு திதியில் பாதி பகுப்பாகும்.
சூரியனுடன் ஒப்பிடும்பொழுது சந்திரன் 6 டிகிரி நகரும்பொழுது கரணங்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் திதி 12 டிகிரி இயக்கத்தை குறிக்கின்றது.
ஒரு திதி இரண்டு கரணங்களைக் கொண்டது.
இந்த கணக்கின்படி 60 கரணங்கள் இருந்தாக வேண்டும். எனினும் 11 கரணங்கள்தான் ஜோதிடவியலின்படி வழங்கப்பட்டுள்ளது.
முதல் ஏழு கரணம் நகரக்கூடிய சர கரணமாகவும், சுப கரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இரண்டாவது நான்கு கரணங்கள் அசையும் தன்மையற்ற ஸ்திர சுப கரணமாகவும், அசுப கரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
ஒரு மனிதனின் வாழ்வியலில் இந்த கரணங்கள் நிகழ்த்தக்கூடிய அற்புதங்களும், அவற்றின் ஆளுமைகளும் எண்ணற்றவை.
இதில் முதல் காரணமான பவ கரணத்தை நோக்கி பயணித்து அதன் சாதக சூழ்நிலையை நமக்கு ஏற்றவாறு எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை பற்றியும் காணலாம்.
பவம் என்றால் சிங்கம் என்று அர்த்தம். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கத்தின் மனோநிலை தன்மையினைதன்னில் போதித்து வைத்திருப்பார்கள்.
பிடரிகள் கொண்ட சிங்கத்தினைபோல் மென்மையான தலைமுடியை அதிகமாக கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து அதன்பின் அதனால் வரும் சாதகத் தன்மையின் சதவிகிதத்தை பொறுத்தே கையாளுவார்கள்.
எந்த காரியத்திலேயும் பின்வாங்கும் தன்மை இவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை.
பிற நம்பிக்கைகளைவிட தன்மீது பெரும் நம்பிக்கையும், தன் பலத்தின் மீது அதீத நம்பிக்கையும் உடையவர்கள் இந்த பவ கரணத்தில் பிறந்தவர்களாக உள்ளனர்.
யாரும் அஞ்சக்கூடிய செயலை அஞ்சாமல் செய்து சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த கரணத்தில் பிறப்பெடுப்பவர்கள் ஆகும்.
இந்த கரணத்தில் பிறந்த ஆண்களைவிட பெண்கள் மிகவும் வேகமாக செயல்பட்டு ஒரு காரியத்தை முடிக்கும் தன்மையில் அமைந்துள்ளனர்.
இவர்களுக்கு தக்க சமயத்தில் உத்தியோகத்தில் பிரச்சினைகளை கையாளும் சூழல் அமைந்துவிடும்.
தொழில் என்ற சூழ்நிலையில் பெரும்பாலும் இவர்களுக்கு வஞ்சனை நிகழ்வதை காணமுடிகின்றது.
பவ கரணத்தில் பிறந்தவர்கள் தொழில் மற்றும் பணி செய்யும் இடங்களில் பெரும் இன்னல்களை சந்திக்கும் சூழல் இயற்கையாகவே அமைந்து விடுகின்றது.
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் சனியின் காரகங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவதைக் கண்கூடாக காணமுடிகின்றது. இதில் சனியின் காரகமாகிய மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவர்களுக்கு அதிகமாக வருவதை உணரலாம் இவர்களைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு பெரிய கூட்டத்தை அமைத்துக் கொண்டு அந்தக் கூட்டத்திற்கு தலைவனாக இருப்பதைப் போன்ற தோரணையில் இவர்களின் வாழ்க்கை பயணம் இருக்கும்.
இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் இரும்பு சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக காணப்படும்.
இவர்கள் இராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, காவல் பணிகள், பலரை வழிநடத்திச் செல்லும் தலைமை பணிகளில் சிறப்பாக செயல் புரிகின்றனர்.
இந்த கரணத்தில் பிறந்து சில தசா புக்திகளின் கோலாட்டத்தால் பிரச்சினைகளைச் சந்திக்கும் நபர்களுக்கு கரணநாதனின் வழிபாடு பெரும் சுபிக்சத்தை வழங்கி வளரச் செய்யும்.
பவ கரணத்தின் காரகங்கள்
அதி தேவதை- இந்திரன்
மிருகம்- சிங்கம்
மலர்- புன்னை மலர்
தூபம்- அகில்
தெய்வம்- நரசிம்மர்
கிழமை- செவ்வாய்
இந்த கரணத்திற்கான கோவிலாக நாமக்கலில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயத்திற்கு சுவாதி நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமை மற்றும் பவ கரணம் சேர்ந்துவரும் நாளில் சென்றுவருவது பல இன்னல்களைத் தீர்த்து வசந்தத்தின் வசம் இட்டுச்செல்லும்.
மேலும் புன்னை மலர் கொண்டு சிவதரிசனம் செய்யும்பொழுது பெரும் சுபிக்சத்தை அனுபவிக்கும் சூழலும், அகில் கொண்டு இல்லங்களில் தூபம் போடும்பொழுது ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் விலகுவதையும் கண்கூடாக காண முடிகின்றது.
நரசிம்மர் கோவிலுக்கு செல்லும்பொழுது ஒரு பாக்கு மட்டை தட்டில் 11 கமலா ஆரஞ்சு பழங்களும், 11 வெற்றிலையும், 11 பாக்கையும், வைத்து அதன் மேல் ஒரு சிறு தட்சனை வைத்து அர்ச்சகர் இடம் கொடுத்துவிட வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்துவித தடங்கல்களையும், தீர்க்கும் ஒரு அருமருந்து இந்த கர்ணநாதன் வழிபாடு.
தங்களுக்கு தேவையான சங்கல்பத்தை அங்கே வைத்து வீடு திரும்ப இறை உங்கள்வசம் நின்று கருணநாதனாக உங்களைக் காப்பாற்றும்.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-06/content-4.jpg)