Advertisment

ரிக் வேதத்தில் ஜோதிடம்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/astrology-rig-veda-s-vijayanarasimhan

ரிக் வேதத்தில், ஒரு வருடத் திற்கு 12 சந்திர மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சாந்த்ர மான மாதத்திற்கும், சௌர மான மாதத்திற்கும் இடையே யான வித்தியாசத்தை சரி செய்யவே இந்து ரிஷிகள் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒருமுறை ஒரு சாந்த்ரமான மாதத்தைக் கூட்டி, அதற்கு அதிக மாதம் அல்லது மலமாதம் எனப் பெயரிட்டனர். ரிக் வேதத்தில் ஒரு வருட மென்பது 12 மாதங்கள் அல்லது 360 நாட்கள் அல்லது 720 பகல், இரவுகள் அல்லது 360 இரவுகள் மற்றும் 360 பகல்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

Advertisment

இந்த மாதங்களில் பலன் அதிகம் தரக்கூடிய- மத சம்பந்தமான விரதங்களை அனுஷ்டிக்கும் மக்களுக்கு, இந்த 12 மற்றும் 13-ஆம் மாதங்கள் மிகச்சிறந்தது. அதுவே அதிக மாதம் என அவர்கள் அறிவார்கள் என ரிக்வேதம் குறிப்பிடுகிறது.

ஆரம்பகாலத்தில் சாந்த்ரமான மாதம், மற்றும் வருடங்கள் அனுசரிக்கப் பட்டபோது, போகப்போக அதில் சிக்கல் உருவாவதை உணர்ந்தார்கள். அதன் காரணமாக இந்த அதிக மாத ஆலோசனை அவர்களுக்குள் எழுந்தது. தைத்ரிய ப்ரம்மாணாவில் இந்த 13 மாதங்களுக்கான பெயர்கள் காணப்படுகின்றன. அவை: 1. வருணா, 2. அருணராஜா, 3. புண்டரிகா, 4. விஷ்வஜித், 5. அபிஜித், 6. ஆருத்ரா, 7. பின்வாமன், 8. உன்னாவன், 9. ரஸவன், 10. எரவன், 11. சர்வஷதா, 12. சம்பாரா, 13. மகாஸ்வான் ஆகும்.

தைத்ரிய ஸம்கிதாவில் இந்த மாதங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன. மது, மாதவ் இரண்டும் இளவேனிற்காலம் எனும் வசந்த ருது எனவும், சுக்ரா, ஷூசி ஆகிய

ரிக் வேதத்தில், ஒரு வருடத் திற்கு 12 சந்திர மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சாந்த்ர மான மாதத்திற்கும், சௌர மான மாதத்திற்கும் இடையே யான வித்தியாசத்தை சரி செய்யவே இந்து ரிஷிகள் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் ஒருமுறை ஒரு சாந்த்ரமான மாதத்தைக் கூட்டி, அதற்கு அதிக மாதம் அல்லது மலமாதம் எனப் பெயரிட்டனர். ரிக் வேதத்தில் ஒரு வருட மென்பது 12 மாதங்கள் அல்லது 360 நாட்கள் அல்லது 720 பகல், இரவுகள் அல்லது 360 இரவுகள் மற்றும் 360 பகல்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

Advertisment

இந்த மாதங்களில் பலன் அதிகம் தரக்கூடிய- மத சம்பந்தமான விரதங்களை அனுஷ்டிக்கும் மக்களுக்கு, இந்த 12 மற்றும் 13-ஆம் மாதங்கள் மிகச்சிறந்தது. அதுவே அதிக மாதம் என அவர்கள் அறிவார்கள் என ரிக்வேதம் குறிப்பிடுகிறது.

ஆரம்பகாலத்தில் சாந்த்ரமான மாதம், மற்றும் வருடங்கள் அனுசரிக்கப் பட்டபோது, போகப்போக அதில் சிக்கல் உருவாவதை உணர்ந்தார்கள். அதன் காரணமாக இந்த அதிக மாத ஆலோசனை அவர்களுக்குள் எழுந்தது. தைத்ரிய ப்ரம்மாணாவில் இந்த 13 மாதங்களுக்கான பெயர்கள் காணப்படுகின்றன. அவை: 1. வருணா, 2. அருணராஜா, 3. புண்டரிகா, 4. விஷ்வஜித், 5. அபிஜித், 6. ஆருத்ரா, 7. பின்வாமன், 8. உன்னாவன், 9. ரஸவன், 10. எரவன், 11. சர்வஷதா, 12. சம்பாரா, 13. மகாஸ்வான் ஆகும்.

தைத்ரிய ஸம்கிதாவில் இந்த மாதங்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன. மது, மாதவ் இரண்டும் இளவேனிற்காலம் எனும் வசந்த ருது எனவும், சுக்ரா, ஷூசி ஆகிய இரண்டும் கோடைமாதம் எனும் கிரீஷ்ம ருது எனவும், நபாஸ, நபஸ்ய ஆகிய இரண்டும் மழைக்காலம் எனும் வர்ஷ ருது எனவும், இஷா, வஜ்ரா ஆகியவை சரத் ருது எனவும், சகஸ, சஹஸ்ய ஆகியவை ஹேமந்த ருது எனவும், தபஸ, தபஸ்ய ஆகியவை சிசிர ருது எனவும், சம்சர்பா - அதிகமாஸமும் ஆகும்; அகம்ஸ்பதி எனும் க்‌ஷய மாதமாகும்.

Advertisment

ஆத்ரேய பிரம்மாணாவில் ஹேமந்த ருதுவும், சிசிர ருதுவும் ஒன்றாகி மொத்தம் ஐந்து பருவங்களே குறிப்பிடப் பட்டுள்ளன.

தைத்ரிய ப்ரம்மாணாவில் பருவ காலங்கள் பறவைகளின் உறுப்புக்களோடு ஒப்பிடப்பட்டுள்ளன. வசந்த காலம்- அதன் தலையையும், கிரீஷ்ம ருது அதன் வலது சிறகையும், இடது சிறகு சரத் ருதுவை யும், வர்ஷ ருது வாலையும், உடற்பகுதி ஹேமந்த ருதுவையும் குறிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வேத காலத்தில் பொதுவாக, ஒருநாளின் சூரிய உதயகாலம்தொட்டு, மறுநாள் சூரிய உதயகாலம்வரை ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது. அதற்கு சாவன நாளென்று பெயர். சந்திர நாள் 15 சுக்கில பட்ச சந்திர திதிகளையும், 15 கிருஷ்ண பட்ச சந்திர திதிகளையும் குறிப்பதாக அமைகிறது.

ரிக் வேதத்தில் சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு கிராந்திகள், இடங்களின் அயனத்தை (உத்ராய ணம், தட்சிணாயனம்) உபயோகித்துக் கணக்கிடப்படுகின்றன. சடபத ப்ரம்மாணாவில் சிசிர ருதுமுதல் கிரீஷ்ம ருதுவரை உத்ராயணத்திலும், வர்ஷ ருதுமுதல் ஹேமந்த ருதுவரை தட்சிணாயனத்திலும் அடங்கியுள்ளன. ரிக் வேதத்தில் வருடம் எந்தப் பருவகாலத்தில் ஆரம்பமாகிறது எனக் குறிப்பிடாவிட்டாலும், யஜுர் வேதத்தில் வருடம் ஆரம்பிப்பது வசந்த காலத்தில்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

rr

கிருத யுகம் மற்றும் த்ரேதா யுகங்களைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன. 5 வருடங்கள்- 1 சம்வத்சரம் அல்லது இதுவத்சரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தின் 7-ஆவது மண்டலம், 103-ஆவது சுலோகம், 7, 8-ஆவது மந்திரங்களில், இந்த சம்வத்ஸரம் மற்றும் பரிவத்ஸரா வருடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

யுகங்கள், அயனங்கள், பருவங்கள், சாந்த்ரமான, சௌரமான மாதங்கள் (அதிகமாதம், க்ஷயமாதம் ஆகியவையும்), வருடங்கள், சந்திர நாள், சாவன நாள், சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம் ஆகிய காலக் கணக்குகளும் வேதகாலத்தில் இருந்ததாற்கான ஆதாரங்கள் இருந்தபோதும், வாரத்தைப்பற்றிய அறிவு உலகின் மற்ற நாடுகள் அறியாததைப்போலவே இந்தியர்களும் அறியாதிருந்தார்கள். இதை சால்தியர்கள்மூலமாகவே உலகின் அனைத்து நாடுகளும் அறியத் தெளிந்தன எனலாம்.

நட்சத்திரங்கள்: ரிக்வேத சம்கிதாவில் ஒரு மந்திரத்தில் சூரிய நட்சத்திரங்கள் என்றும், மற்றொரு மந்திரத்தில் சந்திர நட்சத்திரங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு மந்திரத்தில் சித்திரை, மக நட்சத்திரங்களின் குறிப்புகள் உள்ளன. யஜுர் வேத மந்திரங்களில் 27 நட்சத்திரங்கள் 27 கந்தர்வர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலமாக வேத காலத்தவர்கள் நட்சத்திரங்களைப் பற்றி அறிந்திருந்ததை நாம் அறிகிறோம். அதர்வண வேதத்தில் 28-ஆவது நட்சத்திரத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதகாலத்தில் இந்தியர்கள் நட்சத்திரத்தைப்பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர் என்றும், ராசியைப் பற்றிய அறிவானது கிரேக்கர்களை அவர்கள் தொடர்பு கொண்டபோதே ஏற்பட்டதென்ற தேவையற்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கும் வண்ணம், ரிக்வேதத்தில் த்வாதசர் என 12 ராசிகளைக் பற்றி குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த மந்திரத்தின் இரண்டாவது வரியில் 360 பாகை பற்றிய குறிப்பு இருப்பதால், 12 ராசிகளைப் பற்றியே குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் நெமிசந்த் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

மேலும், வேதகால கிரந்தங்களில் கிரகங் கள், சூரிய- சந்திரர்களைத் துதிப்பதற் குரிய இயற்கை தெய்வங்களாகக் குறிப்பிட்டார் களேயன்றி, ஜோதிடக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பது பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை என தர்க்கவாதிகள் குறிப்பிடுகின்றனர்.

வேதங்கள் ஜோதிடத்திற்கான அல்லது வானியலுக்கான குறிப்புக்கள் அடங்கிய நூலல்ல. அவை அடிப்படையில் பல்வேறு இயற்கை சக்திகளின் வழியாக கடவுள் எனும் உயர்ந்த சக்தியை வணங்க வழிவகை சொல்லும் நூலாகவே கருதப்பட்டது. பழங்கால வாழ்க்கை முறையில் இயற்கை சக்திகளை வணங்கித் துதிப்பது வாடிக்கை யாக இருந்தது. எகிப்தியர்கள், சுமேரியர்கள், சால்தியர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் இயற்கை வழிபாட்டுக்கான கோட்பாடுகளை உருவாக்கினர்.

ரிக் வேதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களாக செவ்வாய், குரு, சனி, சுக்கிரன், புதன் ஆகியவை குறிப்பிடப்பட்டு, 20 மாதங்களில் ஒன்பது மாதத்திற்கு, ரிஷிகள் தங்கள் தினசரி கடமைகளை நிறைவேற்றும் வண்ணம் சுக்கிரன் கிழக்கில் காலையில் பிரகாசிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குருவும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு சுக்கிரனுக்கு அருகே வருகிறது. சுக்கிரனின் விரைவான இயக்கத்தால் அது குருவுக்கு முன் சென்று விடுகிறது. இதன்காரணமாக ஒரேநேரத்தில் சுக்கிரன் கிழக்கில் உதித்து, குரு மேற்கே அஸ்தமிக்கிறது. எனவே, வேதகால மக்கள் கிரகங்களைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதை நாம் அறிகி றோம்.

தைத்ரிய ப்ரம்மாணாவில் புஷ்யா அல்லது திஷ்யா நட்சத்திரத்துக்கு (பூசம்) மகனாக குரு பிறந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

கிரகணங்கள்: ரிக் வேத சம்கிதா 5-ஆவது மண்டலம், 40-ஆவது சூத்திரத்தில் சூரிய- சந்திர கிரகணங்களைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ராகு- கேதுவால் ஏற்படும் இவ்விளைவுகளுக்குப் பரிகாரமாக தெய்வ வழிபாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிரக சுழற்சிகள்: ரிக் வேதத்தில் 164-ஆவது சூக்தம், 1-ஆவது மண்டலத்தில் வான்வெளி மேலுலகம், மத்திய உலகம், கீழுலகம் என விவரிக்கப்படுகிறது. பழங் காலத்தில் சந்திரனின் சுழற்சியானது பூமிக்கு மேலானது எனக் கருதப்பட்டது.

ஆனால் உண்மையில் சந்திரனுக்கு மேலேதான் சூரியனின் சுழற்சியுள்ளது. எனவே, ஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் தெளிவு பிறக்கிறது. தோல்விகளும் தவறுகளும்தான் வெற்றியின் தூண்களாகின்றன.

இதுபோன்று வேதத்தில் பல ஜோதிட விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

செல்: 97891 01742

bala300922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe