Advertisment

ஜாதக பலனை மேம்படுத்தும் பாகைமுறை ஜோதிடம்! - சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/astrology-method-improve-horoscope-results-continued-last-issue

ஜாதகக் கட்டத்தில் ஒரு பாவகத்தின் ஆரம்பத்தில் மிகக்குறைந்த பாகையில் நிற்கும் கிரகத்திற்கான பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

Advertisment

சூரியன்

சூரியன் குறைந்த பாகையில் இருந்தால் தந்தை, மாமனார், மூத்த மகனின் அன்பிற் காக ஜாதகர் ஏங்குவார். தந்தை ஜாதகரிடம் ஈடுபாடு காட்டமாட்டார். அரசுவழி காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். உயரதிகாரிகளால் தொடர்ந்து தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். நிரந்தர வருமானம் இருக்காது. எளிதில் கடன் கிடைக்காது. கற்பனைக் கனவில் மிதந்துகொண்டே இருப்பார். கண், எலும்பு, இதயம், முதுகெலும்பு போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பிற்கு முறையான வைத்தியம் கிடைக்காது.

Advertisment

பரிகாரம்

ஞாயிற்றுகிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

ff

சந்திரன்

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் குறைந்த பாகையில் இருந்தால் அடிக்கடி வாழ்க்கையில் விரும்பத்தகாத மாற்றத்தை, பயணத்தை சந்திக்கநேரும். மனநோய், மன பயம், மனசஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். உணவுத் தொழில் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கும். தாயார் மற்றும் மாமியாரின் அன்பு ஆதரவு குறையும். கருப்பை நோய், அசதி இருந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்

திங்கட்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாள

ஜாதகக் கட்டத்தில் ஒரு பாவகத்தின் ஆரம்பத்தில் மிகக்குறைந்த பாகையில் நிற்கும் கிரகத்திற்கான பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.

Advertisment

சூரியன்

சூரியன் குறைந்த பாகையில் இருந்தால் தந்தை, மாமனார், மூத்த மகனின் அன்பிற் காக ஜாதகர் ஏங்குவார். தந்தை ஜாதகரிடம் ஈடுபாடு காட்டமாட்டார். அரசுவழி காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். உயரதிகாரிகளால் தொடர்ந்து தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். நிரந்தர வருமானம் இருக்காது. எளிதில் கடன் கிடைக்காது. கற்பனைக் கனவில் மிதந்துகொண்டே இருப்பார். கண், எலும்பு, இதயம், முதுகெலும்பு போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பிற்கு முறையான வைத்தியம் கிடைக்காது.

Advertisment

பரிகாரம்

ஞாயிற்றுகிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

ff

சந்திரன்

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் குறைந்த பாகையில் இருந்தால் அடிக்கடி வாழ்க்கையில் விரும்பத்தகாத மாற்றத்தை, பயணத்தை சந்திக்கநேரும். மனநோய், மன பயம், மனசஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். உணவுத் தொழில் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கும். தாயார் மற்றும் மாமியாரின் அன்பு ஆதரவு குறையும். கருப்பை நோய், அசதி இருந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்

திங்கட்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவசக்தியை வழிபடவும்.

செவ்வாய்

சுய ஜாதகத்தில் செவ்வாய் குறைந்த பாகையில் இருந்தால் கணவர் மற்றும் உடன்பிறந்த வர்களுக்கு கட்டுப்பட்டே வாழ நேரும். உடன்பிறந்தவர்கள் அல்லது சகோதரர்களுடன் ஈகோ பிரச்சினை இருக்கும். சொத்துகள் மேல் அதீத பிரியம், ஆர்வம் இருக்கும். சொத்துகள் காலம் தாழ்ந்தே கிடைக்கும் அல்லது சொத்துகளால் பயனிருக்காது. சீருடைப் பணி, இராணுவம், விளையாட்டுத் துறை போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.

உடல் உறுப்புகளில் பல், முட்டு, பெண் களுக்கு மாதவிடாய் பாதிப்பு ஏற்படலாம்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

புதன்

புதன் ஒருவர் ஜாதகத்தில் குறைந்த பாகையில் இருந்தால் கல்வியில் மிகுந்த புலமை உண்டு. அதீத கல்வி ஆர்வம், ஜோதிட ஞானம் நிறைந்தவர்கள். ஆனால் கற்ற கல்வியை பயன்படுத்த முடியாது. கூட்டுத்தொழில் ஆர்வம் நிறைந்த வர்கள். நிறைவேறாத காதல், ஒருதலைக்காதல் அனுபவம் உள்ளவர்கள். எளிதில் கடன் கிடைக்காது அல்லது கடன் அடைபட கால தாமதமாகும். திட்டமிட்டு காரியம் சாதிப்பதில், வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் வல்லவர் கள். அதிக நண்பர்கள் இருப்பார்கள். ஹ்ர்ன்ற்ன்க்ஷங், ஜ்ட்ஹற்ள்ஹல்ல் போன்ற தகவல் தொடர் சாதனங்களில் தனித் தன்மையை வெளிப்படுத்தி வருமானம் பெறுவார்கள். தோல், நரம்பு, சுவாசம் தொடர்பான பாதிப்பிருக்கும்.

பரிகாரம்

புதன்கிழமையும் பிரதோஷ மும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

குரு

குருபகவான் ஜாதகத்தில் குறைந்த பாகையில் இருந்தால் பிள்ளைகளின் மேல் அதீத அன்பு உள்ளவர்கள் அல்லது குழந்தைபேறு காலதாமதமாகும். மருந்துவ ஆலோசனைக்குப் பிறகு குழந்தை பிறக்கும். பணம் சம்பாதிப்பதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகமாகும். கடவுள் நம்பிக்கை, குலதெய்வ அனுக்கிரகம் உண்டு. கௌரவப் பதவி வகிப்பார்கள். ஜோதிடம், புரோகிதம், ஆசிரியர், வங்கிப்பணிமேல் விருப்பம் இளுக்கும். உடல்பருமனாக இருப்பார்கள். மூளை, கல்லீரல், வயிறு போன்ற பகுதிகளில் ஆரோக்கியம் பாதிக்கும்.

பரிகாரம்

வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

சுக்கிரன்

ஆண், பெண் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் களத்திரகாரகன் சுக்கிரனின் பங்கு அளப்பரியது. ஒருவரின் ஜாதகத்தில்- குறிப்பாக ஆண்களுக்கு சுக்கிரன் குறைந்த பாகையில் நின்றால் வாழ்க்கைத் துணைவி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் காலதாமத திருமணம் ஏற்படும். திருமணத்திற்குப் பிறகு மிகுதியான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். மற்றபடி இருபாலருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளான ஆடம்பர வாழ்க்கை, சொகுசு வாழ்க்கையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எப்பொழுதும் கையில். தாராளமான பணப்புழக்கம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உடலின் சுரப்பிகளில், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பாதிப்பிருக்கும்.

பரிகாரம்

பிரதோஷமும் வெள்ளிக்கிழமையும் இணைந்த நாளில் சிவசக்தியை வற்படவும்.

சனி

சனிபகவான் ஒரு ஜாதகத்தில் குறைந்த பாகையில் நின்றால் சிறிய உழைப்பில் அதிக வருமானம் பெறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். உடலை வருத்தி எந்த வேலையையும் செய்யமாட்டார்கள். அடிக்கடி கஷ்டம், கண்டத்தை சந்திப்பார் கள். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு உண்டு. தீராத நோய், கடன் பற்றிய கவலை இருக்கும். வேலையாட்கள் மற்றும் கீழ்நிலையில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல் உறுப்புகளில் கால், பல், எலும்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்.

பரிகாரம்

சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் ஊரின் எல்லை, காவல் தெய்வத்தை வழிபடவேண்டும்.

ராகு

ராகு என்றாலே மாயை, பயம். ராகு எந்த பாவகத்தில் குறைந்த பாகையில் நின்றாலும் அந்த பாவகம் தொடர்பான காரக உறவுடன் பிரிவினை ஏற்படும். தாத்தாவின்மேல் தாத்தாவின் கொள்கையின்மேல் அதிக ஆர்வம் இருக்கும். சிலர் அப்படியே தாத்தாவின் உருவ அமைப்புடன் இருப்பார்கள். சர்ட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஆர்வம். இருக்கும். மாந்த்ரீகம், மந்திரம், தந்திரம் போன்றவற்றைக் கற்பார்கள். வளர்ச்சியில் தடை இருக்கும். சிலருக்கு உடலில் ஏதாவது செயற்கை உறுப்புகள் பொருத்துவார்கள். அல்லது இனம் புரியாத நோய்த்தாக்கம் இருக்கும். தீவிர பரிசோதனைக்குப் பிறகு பல மருத்துவர்களை அணுகிய பிறகு நோய்க்கான காரணம் தெரியும். அடிக்கடி மருத்துவச்செலவு அதிகரிக்கும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

கேது

கேது என்றால் பயம், வம்பு வழக்கு. கேது எந்த பாவகத்தின் ஆரம்பத்தில் குறைந்த பாகையில் உள்ளதோ அந்த பாவக உறவுடன் வம்பு வழக்கு ஏற்படும். பாட்டியின் அதிக பற்றிருக்கும். சிலர் பாட்டியின் உருவ அமைப்புடன் இருப்பார்கள். மற்றபடி ராகுவிற்குச் சொன்ன அனைத்து பலன்களும் அப்படியே பொருந்தும். ஏனென்றால் ராகுவும் கேதுவும் ஒரே பாகையில் எதிர் எதிர் துருவத்தில் பயணிக்கும்.

பரிகாரம்

கேதுவால் பாதிப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடவேண்டும். இனி அடுத்தவாரம் அதிக பாகையிலுள்ள கிரகத்திற்கான பரிகாரங்களைக் காணலாம்.

(தொடரும்)

செல்: 98652 20406

bala150923
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe