Advertisment

ஜோதிடமும் ஞானிகளும்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/astrology-and-sages-s-vijayanarasimhan

ஜோதிடத்தில் சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியமுண்டு. இந்த உலகமே கர்மாவைச் சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளார்கள். ஆணோ பெண்ணோ-

Advertisment

அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதி-ருந்து தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின் தலைமைக்கு உட்பட்ட வனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்

ஜோதிடத்தில் சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியமுண்டு. இந்த உலகமே கர்மாவைச் சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளார்கள். ஆணோ பெண்ணோ-

Advertisment

அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதி-ருந்து தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின் தலைமைக்கு உட்பட்ட வனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்ன கடமைகளை மற்ற கிரக இணைவுகள் தரும் உதவிகள், ஒத்துழைப்புகள்- அது நல்லதோ, கெட்டதோ- அனைத்துமே ஜாதகரின் ஜாதகத்தில் இடம்பெற்றுள்ள கிரக அமைப்புகளைப் பொருத்தே அமையும்.

துறவிகள், புனித மகான்கள் மற்றும் சுவாமிகள் ஆகியோர் இந்த இகலோகத்தி-ருந்து முற்றும் துறந்து மோட்சத்தை அடையும் விருப்பம் அவர்கள் உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் இருக்கும்வரை, அவர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட- தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், புனஸ் காரங்கள், விழாக்கள், தியானம், நோன்புகள், பிராயச்சித்தங்கள், இன்னபிற கர்மாக்களை கண்டிப்பாக, ஒழுங்குமுறையுடன் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இந்த கைங்கரியங்கள் செய்ய நீருக்குரிய சந்திரன், வாயு அல்லது காற்றுக்குக் காரகன் சனி ஆகியோரின் அனுகூலம் வேண்டும்.

மனதை ஒருநிலையில் வைக்க உதவும் மனோ காரகன் சந்திரனின் ஒத்துழைப்பு வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கும் நோன்புகளை நிகழ்த்த தூய, புனிதமான, சிறந்த இடங்கள் வேண்டும். அதற்கு பூமிக்குரிய இறைவியான பூதேவியின் அருள், கருணை, ஆசிகள் வேண்டும். சூரியனின் வெப்பம், வருணனின் மழை, வாயுவின் காற்று ஆகியவற்றி-ருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் அளவுக்கு நல்ல வசிப்பிடம் அவசியமாகிறது. தன் தினசரி பூஜைகள், நோன்புகளைத் தடையின்றி நிறைவேற்ற குறைந்தபட்சம் ஒரு குகையேனும் வேண்டும். எங்ஙனம் பணியாற்றவேண்டும்- எப்படி பூஜா கைங்கரியங்கள் செய்யவேண்டும்- கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன என்பவையனைத்தும் இந்துமத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisment

அப்படிப்பட்ட மேன்மையான, முக்கியத்துவம் மிக்க தத்துவங்களை புனிதர் பரம பூஜ்ய ஸ்ரீ மத்வாச்சாரிய சுவாமிகள் தனது துவைத கிரந்தங்களில் விளக்கியருளியுள்ளார்.

இதன்காரணமாக பெரிய ஞானிகள், சந்நியாசிகள், மத குருமார்கள் ஆகியோர், தங்களுக்கு உலக பந்தங்களைவிட்டு மோட்சம் கிடைக்க விதிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்கத் தவறுவதில்லை. இது எதைக் காட்டுகிறதென்றால், மெய்விளக்க கோட்பாடான தெய்வீக ஜோதிடமானது முனிவர்களையும், ஞானிகளையும், புனிதர்களையும் தன் ஆதிக்க வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது.

செல்: 97891 01742

bala200123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe