மீபகாலங்களில் மனிதனுடைய நோய் எதிர்ப்புசக்திபற்றி- குறிப் பாக தொற்றுநோய் எதிர்ப்பு சக்திபற்றி உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்புசக்தியை எளிதில் கணிக்கும் கருவிகளைத் தயாரிப்பதில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக மனிதனுடைய நோய் எதிர்ப் பாற்றல் இயற்கையாகவே அவனிடம் அமைந் துள்ளது. எனினும் அளவில் சற்று அதிகமாகவோ குறைவாகவோ அமைகிறது என்பது உண்மையே.

மனிதனுடைய நோய் எதிர்ப்பாற்றலை முன்கூட்டியே கணித்துக் கூறவல்லது ஜோதிட சாஸ்திரம். இதற்கு ஒருவரது பிறந்தநாள் மற்றும் துல்லி-யமான நேரத்தை வைத்துக் கணிக்கப்பட்ட ஜாதக அமைப்பே துணைபுரியும். ஜாதக அமைப் பிலுள்ள 12 வீடுகளில் ஜென்ம லக்னம் அமையும் வீடே அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஒருவரது ஜென்ம லக்னம் என்பது ஜாதகரின் ஆத்மசக்தி- உயிர்சக்தி என்று கருதப்படுகிறது.

jy

Advertisment

ஒருவரது ஜென்ம லக்னம் வலுவாக அமைந்துவிட்டால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும்; நோய் வந்தாலும் அது விரைவிலேயே குணமாகிவிடும் என்றும் கூறுவர். இது அனுபவப்பூர்வமான உண்மைதான். ஜென்ம லக்னம் வலுவாக இருப்பதுபற்றி ஜோதிட சாஸ்திரம் கூறும் சில விதிகளை இங்கு காண்போம்.

ஜென்ம லக்னமானது ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரேவீட்டில் அமைந்து வர்க்கோத்தமம் என்னும் சிறப்பு பெற்றால் அது வலுவாக உள்ளது என்று கொள்ளலாம். உதாரணமாக, ராசி சக்கரத்தில் மேஷத்தில் ஜென்ம லக்னம் அமைந்து, அம்ச சக்கரத்திலும் அதே மேஷத்தில் அமைந்தால் அது லக்ன வலுவுள்ள ஜாதகம்.

ஜென்ம லக்னத்திற்கு இருபுறமும் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற சுப கிரகங்கள் அமையும் சுபகர்த்தரி யோகம் பெறுவதும் சிறப்பான அமைப்பு. உதாரணமாக, சிம்மம் லக்னமாகி, கடகத்தில் குருவும் கன்னியில் புதனும் அமைதல். இது மிகவும் சிறந்தது.

ஜென்ம லக்னத்தில் லக் னாதிபதி இருப்பது அல்லது ஜென்ம லக்னத்தை லக்னாதி பதி பார்ப்பது என்பதும் நல்ல அமைப்பாகும்.

இவற்றுக்கு மாறாக ஜென்ம லக்னம் பலவீனம் பெற்றால் அந்த நபர் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர் என்றும்; அடிக்கடி நோய்க்கு ஆட்படுவார் என்றும் கணிக்கலாம். இதற்கான விதிமுறைகள் என்னவென் றால், ஜென்ம லக்னத்திற்கு முன்பின் வீடுகளில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேது, சூரியன் போன்றவை இருக்கும் அசுப கர்த்தரி யோகம் பெறுதல்; ஜென்ம லக்னத்தை இரண்டு அசுப கிரகங்கள் பார்த்தல் அல்லது இருத்தல் போன்றவையாகும்.

மேலும் ஒருவரது உள்ளங்கை ரேகையின் மூலமாகவும் நோய் எதிர்ப்பாற்றலை உறுதிசெய்யலாம். இதில் ஆயுள்ரேகை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுள் ரேகையா னது சுட்டு விரலுக்குக் கீழே ஆரம்பித்து, அரைவட்ட வடிவில் வளைந்து கீழ்நோக்கி மணிக்கட்டுவரை செல்லும் ரேகையாகும். இந்த ரேகை தெள்ளத் தெளிவாக- அழுத்தமாக- தொடர்ச்சியாக நீண்டு சென்றால் அந்த நபர் உடல் ஆரோக்கிய முள்ள நபர்; நோய் எதிர்ப்புசக்தி கொண்டவர் என்று அறியலாம். மாறாக ஆயுள்ரேகை விட்டுவிட்டு இருந்தாலும், பிளவுபட்டு இருந்தாலும், சங்கி-லித் தொடர்போல இருந்தாலும், அதில் தீவுக்குறி, வட்டக்குறி, சதுரக்குறி, குறுக்கு ரேகைகள் இருந்தாலும், சிறிதாக அமைந்தாலும் அந்த நபர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்; எதிர்ப்புசக்தி குறைந்தவர் என்று அறியலாம்.

உணவே மருந்து எனும் அடிப்படையில், அன்றாட உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், வெந்தயம், கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் காலங்களில் அசைவ உணவைத் தவிர்த்தல் நன்று.

பிரணாயாமம், யோகம் போன்ற பயிற்சிகளை முறையாக அறிந்து செய்வதன்மூலம் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். தினமும்-

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம்

புஷ்டிவர்த்தனம் ஊர்வாருகம் இவ பந்தனாத்

முக்தோர் முக்ஷீய மா அம்ருதாத்'

என்னும் மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை மூன்றுமுறை உச்சரித்து வந்தால் மனோதிடம் பெருகும். உடலில் எதிர்ப் பாற்றல் குறைவாக உள்ளவர்கள், மருத் துவ முறைகளுடன் மேற்கூறிய பாரம் பரிய அனுபவ அறிவுரைகளையும் கடைப் பிடித்தால் உடல்நலம் பெறுவது உறுதி எனலாம்.

செல்: 74485 89113