"பசி வந்திட பத்தும் பறந்துபோகும்' என்பர். ஒருவருக்கு பசி எனும் அடிவயிற்றுத் தீயை அணைக்கும் அமிர்தம் உணவாகும்.
இவ்வுலக மாந்தருக்கு எந்தப் பொருளை எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி உண்டா காது. ஆனால் உணவு பரிமாறும்போது வயிறு நிரம்பிவிட்டால், போதும் என்று திருப்தியடைந்து எழுந்துவிடுவர். இதன் மூலம் உணவு ஒன்றுக்கு மட்டுமே மனிதனைத் திருப்திசெய்யும் ஆற்றலுண்டு என புரிந்துகொள்ளலாம்.
ஜோதிடத்தில் உணவு பற்றிய செய்திகளை இரண்டாம் வீடு உறுதிபட உரைக்கும். அதேநேரத்தில் அந்த இரண்டாம் வீடு ஒரு மனிதரின் மாரக வீடாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழியுமோ என்னவோ- ஆனால் அவன் அழிந்துவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. ஜாதகரைக் குறிக்க லக்னத்தைக் குறித்தவர்கள், அவரது உணவு விஷயம்பற்றி அறிய லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையே குறிப்பிட்டதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கும். பொதுவாக கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகள் உண்டு. இரண்டாமிடத்தில் நவகிரங்கள் நின்றால் என்ன பலன் என்பதைக் காண்போம்.
சூரியன்
சூரியன் எனும் கிரகம் குறிக்கும் சுவை காரம். இந்த சுவை பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்தைத் தூய்மைசெய்யும். மேலும் காரமுள்ள உணவு வாதத்தை நீக்கும். இதனால்தான் இரண்டாமிட சூரியன் உள்ளவர்களின் வாக்கு சுள்ளென்று இருக்கும்போலும்.
சந்திரன்
சந்திரன் குறிக்கும் சுவை உப்பு. "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பர். உப்பு அதிகமாகிவிட்டாலும் உதவாது.
சரியான உப்பின் சேர்க்கையே ஒரு உணவை ருசியாக்கும். சமைத்தவரின் திறமை யைப் பறைசாற்றும். சில இனிப்புப் பண்டங்களில்கூட சற்று உப்பு சேர்த்தால் அதன் சுவை கூடும். தெய்வீகப் பிரசாதங்கள் தயாரிக்கும்போதும் சிறிது உப்பு சேர்ப்பது நலம். மறந்துபோய் உப்பில்லாமல் உணவு தயாரிக்க நேரும்போது, வீட்டில் ஏதோ
"பசி வந்திட பத்தும் பறந்துபோகும்' என்பர். ஒருவருக்கு பசி எனும் அடிவயிற்றுத் தீயை அணைக்கும் அமிர்தம் உணவாகும்.
இவ்வுலக மாந்தருக்கு எந்தப் பொருளை எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி உண்டா காது. ஆனால் உணவு பரிமாறும்போது வயிறு நிரம்பிவிட்டால், போதும் என்று திருப்தியடைந்து எழுந்துவிடுவர். இதன் மூலம் உணவு ஒன்றுக்கு மட்டுமே மனிதனைத் திருப்திசெய்யும் ஆற்றலுண்டு என புரிந்துகொள்ளலாம்.
ஜோதிடத்தில் உணவு பற்றிய செய்திகளை இரண்டாம் வீடு உறுதிபட உரைக்கும். அதேநேரத்தில் அந்த இரண்டாம் வீடு ஒரு மனிதரின் மாரக வீடாகவும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழியுமோ என்னவோ- ஆனால் அவன் அழிந்துவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. ஜாதகரைக் குறிக்க லக்னத்தைக் குறித்தவர்கள், அவரது உணவு விஷயம்பற்றி அறிய லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையே குறிப்பிட்டதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கும். பொதுவாக கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகள் உண்டு. இரண்டாமிடத்தில் நவகிரங்கள் நின்றால் என்ன பலன் என்பதைக் காண்போம்.
சூரியன்
சூரியன் எனும் கிரகம் குறிக்கும் சுவை காரம். இந்த சுவை பசியைத் தூண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்தைத் தூய்மைசெய்யும். மேலும் காரமுள்ள உணவு வாதத்தை நீக்கும். இதனால்தான் இரண்டாமிட சூரியன் உள்ளவர்களின் வாக்கு சுள்ளென்று இருக்கும்போலும்.
சந்திரன்
சந்திரன் குறிக்கும் சுவை உப்பு. "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பர். உப்பு அதிகமாகிவிட்டாலும் உதவாது.
சரியான உப்பின் சேர்க்கையே ஒரு உணவை ருசியாக்கும். சமைத்தவரின் திறமை யைப் பறைசாற்றும். சில இனிப்புப் பண்டங்களில்கூட சற்று உப்பு சேர்த்தால் அதன் சுவை கூடும். தெய்வீகப் பிரசாதங்கள் தயாரிக்கும்போதும் சிறிது உப்பு சேர்ப்பது நலம். மறந்துபோய் உப்பில்லாமல் உணவு தயாரிக்க நேரும்போது, வீட்டில் ஏதோ இடையூறு ஏற்படும் என்று சொல்வர். அந்த உணவுத் தயாரிப்பில் சந்திரனின் ஆதிக்கம் இல்லாத நிலை ஏற்படுவதால், அதை ஏதோ தடைப்படும் அறிகுறியாகவே எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனவே உணவுத் தயாரிப்பில் சந்திரனின் காரகமான உப்பும் தண்ணீரும் மிக முக்கியம்தான்.
செவ்வாய்
இரண்டாமிடத்திலுள்ள செவ்வாய் கசப்புச் சுவையைக் குறிப்பவர். இது பலருக்கும் பிடிக்காத சுவையாகும். இரண்டாமிடத்தில் செவ்வாய் உள்ளவர்கள் பிறர் விரும்பாத அபூர்வ உணவை உண்பார்கள். மேலும் நிறைய மருந்துகள் கசப்பாகத்தான் இருக்கும். இரண்டாமிடச் செவ்வாய் உள்ளவர்கள் பாகற்காய் உணவுகளை விரும்பி உண்பர். இவர்கள் உணவை சூடாக சாப்பிட அடம் பிடிப்பர். சிலருக்கு தினமும் அசைவ உணவு கண்டிப்பாக வேண்டும்.
புதன்
அனைத்து வகையான சுவைகளையும் குறிக்கும் கிரகம் புதன். எனவே இரண்டா மிடத்தில் புதன் உள்ளவர்கள் எந்த உணவை யும் நிராகரிக்காமல், எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.
குரு
இரண்டாமிடத்திலுள்ள குரு இனிப்புச் சுவையைக் குறிக்கிறார். இந்தச் சுவை அனைவருக்கும் பிடித்தமானது மட்டுமல்ல; அது உடலுக்கு நல்ல வலிமை தருகிறது. மேலும், மனிதனை இளமையாகக் காட்டும் வலிமை இனிப்புச் சுவைக்கு உண்டு. குரு என்பவர் தெய்வீகத் தன்மை கொண்டவர்.
எனவே இரண்டில் குரு உள்ளவர்கள் பெரும்பாலும் சைவ உணவு, தெய்வப் பிரசாதம் போன்ற சாத்வீக உணவுகளை எளிமையாக உண்பர்.
சுக்கிரன்
இரண்டாமிடத்தில் சுக்கிரன் உள்ளவர்கள் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவைகளை விரும்புவர். சுக்கிரனுக்கு புளிப்புச் சுவைதான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுவை எச்சிலைப் பெருக்கும் தன்மையுடையது. பசியைத் தூண்டும்; நல்ல ஜீரணத்திற்கும் உதவும். இரண்டில் சுக்கிரன் இருப்பவர்கள் விதவிதமான, நல்ல சுவையான, போஷாக்கான உணவை உண்பார்கள். இவர்களுக்கு பால் அருந்துவதில் அதிக விருப்பமுண்டு என்பர்.
சுக்கிரன் மகாலட்சுமியைக் குறிக்கும்.
எனவே குழந்தைகள் பால்குடிக்க மறுத்தால், அருகிலுள்ள கோவிலில் மகாலட்சுமித் தாயாருக்கு இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை யுள்ள உணவைப் படைத்து வணங்கவேண்டும். குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்துவிடுவர்.
சனி
சனி பகவான் துவர்ப்புச் சுவையைக் குறிப்பார். மேலும் இரண்டாமிட சனி ஜாதகருக்கு குளிர்ச்சியான உணவுகளைக் கொடுப்பார். இரண்டாமிடத்தில் சனி நீசமாகியிருந்தால் (இது மீன லக்னம், ராசிக்கு அமையும்) அந்த ஜாதகர் பழைய உணவு, மிச்சமான உணவு மற்றும் ஆகாத வீட்டு உணவு என பிறர் ஒதுக்கும் உணவையே உண்பார். எனினும் இரண்டாமிட சனி துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளைக் கொடுப்பார். இவ்வமைப்புள்ள ஜாதகர்கள் பிறர்வீட்டில் சாப்பிடுவதை அதிகம் விரும்பு வர். அப்படி சாப்பிட்டுவிட்டு அவர்களைப் பற்றி குறையும் கூறுவார்கள்.
ராகு- கேது
ராகு- கேதுக்களுக்கு எந்த சுவையும் ஜோதிடத்தில் குறிப்பிடவில்லை. எனினும் இரண்டாமிடத்தில் ராகு- கேது உள்ளவர்கள், வீட்டின் பொருளாதாரத்தைப் பொருத்து அதற்கேற்ற உணவுண்பர் என கூறப்பட்டுள்ளது. எனினும் சிலர் அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். இரண் டிலுள்ள கேது போதைப் பழக்கத்துக்கு ஆட்படுத்திவிடுகிறார். சிலர் மாமிச உணவை அதிகம் விரும்புவார்கள்.
மேலும் சில தகவல்கள்
லக்னாதிபதி குருவாக இருப்பின், ஜாத கருக்கு தயிர்சாதம் மிகவும் பிடிக்கும். மற்ற உணவுகளை சூடாக உண்ண விரும்புவார்.
லக்னாதிபதி புதனாக இருப்பின், புளிப்பு உணவை விரும்புவார். குளிர்ச்சியான உணவும் பிடிக்கும்.
லக்னாதிபதி சுக்கிரனாக இருந்தால், இனிப்பு உணவில் அதிக நாட்டமிருக்கும்.
லக்னாதிபதி சனியாக இருப்பின், கீரை வகைகள், காட்டில் கிடைக்கும் உணவுகளை விரும்புவர்.
மேற்கண்ட கட்டுரை உணவுச் சுவையைக் குறித்து மட்டுமல்ல; இரண்டாம் இடமென்பது உணவு மற்றும் செல்வம் சேர்க்கும் இடமுமாகும். ஒருவேளை உங்களுக்கு உணவகம் ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பின், சில நுணுக்கங்களை மேற்கண்ட தகவல்கள் மூலம் உணரலாம். இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதிக்கு சுபர் சேர்க்கை, சம்பந்தம் இருக்கவேண்டும். சூரியன், இரண்டு, பத்தாமிட அதிபதிகள் சம்பந்தம் இருப்பின், நீங்கள் சுடச்சுட காரவகைப் பண்டங்களைத் தயாரித்து விற்பது ஏற்புடையது.
சந்திரன், இரண்டு, பத்தாமிட அதிபதிகள் இணைவு- குளிர்ச்சியான ஐஸ்கிரீம், மோர், பானகம் போன்ற வகைகளை விற்பனை செய்யலாம்.
புதன், இரண்டு, பத்தாம் அதிபதிகள் சேர, கலவைசாதம் விற்பனை செய்யலாம். குறிப்பாக புளியோதரை நிபுணராகிவிடலாம்.
குரு, இரண்டு, பத்தாம் அதிபதிகள் இணைந் தால் கோவில்களில் பிரசாதக் கடை மற்றும் இனிப்புப் பலகாரக் கடை வைக்கலாம்.
சுக்கிரன், இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதி சேர்க்கை- நிச்சயமாக இனிப்பு தயாரிக்கும் கடைகள் வைத்துவிடுவார்கள். சூடான பால், பால் பொருட்கள் விற்பனை நன்கு விளங்கும். பொதுவாக சுக்கிரன் உணவுகாரகர்தான். எனவே உணவுக் கடை நன்றாக நடக்கும். அந்தக் கடையில் பாதாம்பால். மிளகுப்பால், மசாலா பால் என விற்பனை செய்தால் அவர்களது கடை பிரசித்தமடையும்.
செவ்வாய், இரண்டு, பத்தாம் அதிபதி சம்பந்தம்பெற்றால் மருந்து சார்ந்த உணவுக்கடை வைக்கலாம். சிறுதானிய உணவு, முடக்கத்தான்கீரை தோசை, கேழ்வரகு அடை, அறுகம்புல் சாறு என ஆரோக்கியம் சார்ந்த உணவுக்கடை நல்ல லாபம் தரும். சிலருக்கு அசைவ உணவுக்கடை நன்றாக அமையும்.
சனி, இரண்டாம் அதிபதி, பத்தாம் அதிபதி தொடர்பிருந்தால், பழங் காலத்தில் வீடுகளில் செய்யப்பட்ட புட்டு, இடியாப்பம், அடை, சிறுதானிய உணவு, கைக்குத்தல் அரிசி போன்ற கடை சரியாக இருக்கும். உண்மையாகச் சொன்னால் பழையசாதம், மோர் மிளகாய், கேழ்வரகுக் கூழ், வெங்காயம் விற்பனை சிறப்பாக இருக்கும். சனி பழமையைக் குறிப்பவர். எனவே, முதல்நாள் தயாரித்து மறுநாள் விற்கும் உணவுக்கடையே இவர்களுக்கு ஏற்புடையது.
ராகு- கேது என்னும் சர்ப்ப கிரகங் கள் இரண்டு, பத்தாமிட சேர்க்கை பெற, சந்தேகமே வேண்டாம்- நிச்சய மாக மாமிச உணவுக்கடைதான்! அதிலும் குறிப்பாக சிலர் மதுக்கடை அருகில்தான் வியாபாரம் செய்வார் கள். அல்லது மதுக்கடை "பாரில்' முட்டை, ஆம்லெட் தயாரித்துக் கொடுப்பார்கள். அசைவம் செய்து பரிமாறுவார்கள்.
ஆக, ஜாதகத்தில் இரண்டாமிடம், என்ன சுவையை விரும்பி உண்பார் கள் என உரைக்கும் அதேநேரம், அதையே தொழிலாகக் கொண்டால், எந்த சுவையுள்ள உணவுகளைத் தயாரித்தால் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்றும் அறிந்துகொள்ளலாம். செய்வதைத் திருந்தச் செய்வதோடு தெளிவுபெறவும் செய்யலாமே!
செல்: 94449 61845
_________
உணவுப் பழக்கம்
உணவை கிழக்குமுகமாக அமர்ந்து உண்ணவேண்டும். தெற்குமுகமாக உண்டால் அதனை அரக்கர்கள் சாப்பிட்டுவிடுவர் என்பது விதி. உண்ணும்போது பேசினால் ஆயுள்குறையும் என்கிறது சாஸ்திரம். ஈர உடையோடும், கையை ஊன்றிக்கொண்டும் உண்ணலாகாது. தரையில் அமர்ந்து உண்பது சிறப்பு.
தங்கத்தட்டில் உணவருந்த சுக்கில விருத்தி ஏற்படும். அழகும் உற்சாகமும் உண்டாகும். அதுபோல வெள்ளி, வெண்கலத் தட்டுகளும் சிறப்புடையவை.
வாழை இலையில் உணவுண்ண வாத, பித்த நோய்கள் வராது. தாமரை இலையில் உணவருந்தினால் லட்சுமி கடாட்சம் அகன்றுவிடும். இரவில் தயிர், மாவு, எள் போன்றவற்றை உண்ணக்கூடாது; லட்சுமி விலகிவிடுவாள்.
பரணி, கார்த்திகை ஆகிய நட்சத்திர நாட்கள் அடுப்பு வாங்க, வீட்டில் சமையல் ஆரம்பிக்க சிறந்தவை.
சந்தி காலத்தில்- அதாவது மாலை ஆறு மணியளவில் உணவுண்ணக்கூடாது. தென்கிழக்கு திசையில் அடுப்பு வைப்பது சிறந்தது. கிழக்குநோக்கி நின்று சமைப்பது மிக நன்று.
ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் என்பது சமையலறையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. எனவே உணவு சம்பந்தமான சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். உப்பு சிந்தினால் வீட்டிற்கு ஆகாது; கடுகு சிந்தினால் வீட்டில் சண்டைவரும் என்பர். இதன் உட்பொருள்- சம்பந்தப்பட்ட வர்களின் கவனக்குறைவும் அலட்சியமும், தெருவில் போகும் இம்சையைத் தேடிப்பிடித்து அழைத்து வந்துவிடும் என்பதுதான். கவனமாக இருங்கள் என்பதை வேறு சொற்களில் கூறியிருக்கிறார்கள். மேலும் வீட்டில் உப்பு, மஞ்சள் ஆகியவை எப்போதும் நிறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டின் நிலையும் நிறைவாக அமையும்.