முற்காலத்தில் ஜோதிடத்தைக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கற்றுக் கொண்டு, குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத் தினருக்கு மட்டும்- அதாவது மன்னர், மன்னருக்கு ஒப்பானவர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. ஜாதகம் ஒரு நபரால் கணிக்கப்பட்டு ஒருவரால் மட்டுமே பலன்சொல்லி அதனைப் பின்பற்றா மல், ஒரு குழுவால் ஆராய்ந்து விவாதித்துக் கணிக்கப்பட்டு, அதன்பின்னர் அவர்கள் சொல்லும் முடிவையே மன்னர்கள் பின்பற்றி வெற்றியடைந்து வந்தனர்.
அன்றைய குடிமக்களுக்கு எதிர்பார்ப்பு களும் தேவைகளும் குறைவு. கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
வாழ்க்கையை வாழ்பவர்களால் நாட்டை யாள முடியாது. நாட்டை ஆள்பவர்களால் வாழ்க்கையையே வாழமுடியாது என்பதை அறிந்திருந்தனர்.
அன்று மன்னர், போர் வீரர்களாய் இருந்தவர்களின் உடல் பலத்தை, அவர்கள் பயன்படுத்திய வாளின் எடையை வைத்துக் கணித்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும், பெருமை கொள்ளத்தக்க வகையிலும் உள்ளது. அவர்கள் ஏன் அழிந்து போனார்கள் என்று பார்த்தால், வீரத்தால் அழிக்கப் படவில்லை. உடல் பலத்துடன் மோத முடியாமல், பொறாமை கொண்ட உடல் பலமற்ற கோழைகளின் துரோகத்தால் அழிக்கப்பட்டுள்ளனர். அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் வஞ்சகத்தாலும், சூழ்ச்சியா லும் அழித்துள்ளனர்.
வீரர்களை அழித்த பரம்பரையில் வந்தவர்கள்தான் இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்களாக நினைக்கத்தொடங்கி விட்டனர். திறமையே இல்லாவிட்டாலும், அருகில் இருப்பவரை விட தான் ஏதாவது ஒருவிதத்தில் மேன்மையான் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். முடியாத பட்சத்தில் பொறாமைகொண்டு அழிக்க நினைக்கிறார்கள். இது மரபணுக்களின் இயற்கையான குணம்தான்.
சகல துறையிலும் இதேபோன்ற மனநிலையில்தான் மக்கள் வாழ்கின்றனர். ஜோதிடக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
இன்று ஜோதிடம் கற்றுக்கொள்ள யாரிடமும் வழிகேட்கத் தேவையில்லை. அலை பேசி வைத்திருக்கும் அனைவராலும் அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொள்ள முடிகிறது. புத்தகங்களைத் தேடி வாங்கிப் படித்து பலன் அறிந்துக
முற்காலத்தில் ஜோதிடத்தைக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கற்றுக் கொண்டு, குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத் தினருக்கு மட்டும்- அதாவது மன்னர், மன்னருக்கு ஒப்பானவர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. ஜாதகம் ஒரு நபரால் கணிக்கப்பட்டு ஒருவரால் மட்டுமே பலன்சொல்லி அதனைப் பின்பற்றா மல், ஒரு குழுவால் ஆராய்ந்து விவாதித்துக் கணிக்கப்பட்டு, அதன்பின்னர் அவர்கள் சொல்லும் முடிவையே மன்னர்கள் பின்பற்றி வெற்றியடைந்து வந்தனர்.
அன்றைய குடிமக்களுக்கு எதிர்பார்ப்பு களும் தேவைகளும் குறைவு. கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
வாழ்க்கையை வாழ்பவர்களால் நாட்டை யாள முடியாது. நாட்டை ஆள்பவர்களால் வாழ்க்கையையே வாழமுடியாது என்பதை அறிந்திருந்தனர்.
அன்று மன்னர், போர் வீரர்களாய் இருந்தவர்களின் உடல் பலத்தை, அவர்கள் பயன்படுத்திய வாளின் எடையை வைத்துக் கணித்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும், பெருமை கொள்ளத்தக்க வகையிலும் உள்ளது. அவர்கள் ஏன் அழிந்து போனார்கள் என்று பார்த்தால், வீரத்தால் அழிக்கப் படவில்லை. உடல் பலத்துடன் மோத முடியாமல், பொறாமை கொண்ட உடல் பலமற்ற கோழைகளின் துரோகத்தால் அழிக்கப்பட்டுள்ளனர். அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் வஞ்சகத்தாலும், சூழ்ச்சியா லும் அழித்துள்ளனர்.
வீரர்களை அழித்த பரம்பரையில் வந்தவர்கள்தான் இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்களாக நினைக்கத்தொடங்கி விட்டனர். திறமையே இல்லாவிட்டாலும், அருகில் இருப்பவரை விட தான் ஏதாவது ஒருவிதத்தில் மேன்மையான் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். முடியாத பட்சத்தில் பொறாமைகொண்டு அழிக்க நினைக்கிறார்கள். இது மரபணுக்களின் இயற்கையான குணம்தான்.
சகல துறையிலும் இதேபோன்ற மனநிலையில்தான் மக்கள் வாழ்கின்றனர். ஜோதிடக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
இன்று ஜோதிடம் கற்றுக்கொள்ள யாரிடமும் வழிகேட்கத் தேவையில்லை. அலை பேசி வைத்திருக்கும் அனைவராலும் அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொள்ள முடிகிறது. புத்தகங்களைத் தேடி வாங்கிப் படித்து பலன் அறிந்துகொள்ளும் நிலையின்றி, விஞ்ஞான வளர்ச்சியால் எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தாலும் வீடியோக்கள்மூலம் பலன்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால் ஆளாளுக்கு ஜோதிடராக அவதாரம் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஜோதிடம் மகா சமுத்திரம். ஜோதிடம் கற்ற எல்லாராலும்கூட துல்லியமான பலன்களைச் சொல்லிவிட முடியாது. அதற்குண்டான பிராப்தம் ஜாதகத்தில் இருக்கவேண்டும். ஜோதிடம் கேட்க வருபவர்களும் தன் ஆசைப்படி எல்லாம் நடக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் வருகிறார்கள். நடக்கிறதோ, இல்லையோ- அவர்களின் ஆசைக்கிணங்க ஜோதிடம் சொல்பவரையே தேடிச் செல்கின்றனர். உண்மையை தேடிச்சென்று தெரிந்துகொள்ள உண்மையானவர்கள் இல்லை. ஜோதிடக் கலையை கற்றறிந்து, அனுபவத்தில் பலனறிந்து துல்லிய பலன்கள் கணிக்கும் ஆற்றல் யாருக்கு? உண்மையான பலன்களை அறிந்து, அதற்கேற்ப மனநிலையைத் தேற்றி இன்ப மயமான வாழ்க்கை அனுபவிக்கும் நபர்கள் யார்?
ஜோதிடர்
பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊரைக் கேட்டு, அந்த வருட பஞ்சாங்கத்தை எடுத்துக் கணக்குப் போட்டு ஜாதகத்தைக் கணித்துப் பலன் சொல்லத் தொடங்கிய காலம் மாறி, பிறந்த குறிப்பைக் கொடுத்ததும் ஜாதகம் கிடைத்து விடுகிறது. பலன்கள் சொல்வதற்கு கணிக்கும் திறமையும் அனுபவமும்தான் கைகொடுக்கும். பிறந்த ராசி, நட்சத்திரத்தின் கோட்சாரப் பலன்களை வைத்து முந்தைய மற்றும் தற்சமயம் நடக்கும் பலன்களை எளிதாகக் கூறிவிட முடியும். பெரும்பாலானவர் களுக்கு 80 சதவிகிதப் பலன்கள் பொருந்திவிடும். மிகச் சிலருக்கு 20 சதவிகிதப் பலன்களே நடக் கும் . அவர்களின் தசா புக்திகளின் அடிப்படையில் பார்த்துப் பலன் சொன்னால் சரியாக வந்துவிடும். மீதிப் பலன்கள் முயற்சியாலும் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் கிடைக்கும் என்று, ஜாதகரின் ஜாதி, மத அடிப்படையில் ஆலோசனை, பரிகாரம் வழங் கினால் திருப்தியடைந்து வாடிக்கை யாளராகி விடுவார்கள்.
ஜோதிடத்தால் வருமானம் பெறும் ஜோதிடர்கள்
வாழ்க்கையில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்ட பின்புதான், ஏன் நடக்கிறது, என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள ஜோதிடரை நாடிவருவார்கள். நொந்து போய் நம்மிடம் வரும்போது அவர்களின் கஷ்டங்களைச் சொல்லக்கேட்டு, அதற்கு ஆறுதலான வார்த்தைகளை ஜோதிடரீதியாகச் சொல்லும் போது மனபாரம் குறைந்து நம்பிக்கையுடன் செல்வார்கள். குறிப்பிட்டுச் சொன்ன நல்ல நேரம் பிறந்ததும், நல்லது நடந்தபின்பு நாம் நம்பிக்கைக் குரிய ஜோதிடராகிவிடுவோம்.
ஜோதிடருக்கு இரண்டாமிடமாகிய வாக்கு ஸ்தானம், புதன், ஞானகாரகன் கேது நல்ல நிலையில் இருக்கவேண்டும். இரண்டாம் இடத்தில் சுப கிரகம், சுபகிரக பார்வை, இரண்டாம் அதிபதி ஆட்சி, உச்சம் போன்ற வகையில் பலம்பெற்றால், சொல்லப்படும் நல்ல பலன்கள் சொன்னபடி நடக்கும். லக்னாதிபதி கேந்திர- திரிகோணம் பெற்று, பத்தாம் அதிபதி இரண்டில், இரண்டாம் அதிபதி பத்தில் இருந்தால் ஜோதிடத்தால் வருமானம் பெறுவர். புத்தியைக் குறிக்கும் ஐந்தாம் அதிபதி 11-ல் , 11-ஆம் அதிபதி 2-ல், ஐந்தாமிடத்தில் சூரியன், புதன், குரு, சனி இருந்தால், ஜோதிடம்மூலம் அதிகம் சம்பாதிப்பர். 10-ஆம் அதிபதி மூன்றில், பத்தில் சுக்கிரன், புதன் இணைவு இருந்தால் ஜோதிடக் கலையில் எழுத்தாளராகவும் பணமும் புகழும் பெறுவர்.
2, 4, 10-க்குடைய வர்கள் பதினொன்றில் இருந்தால் வாக்கால் பண லாபம் பெறுவர். பத்தாம் அதிபர் நான்கில் அல்லது 4, 10-ஆம் அதிபர்கள் புதனுடன் இணைந் தால் புத்தகம் எழுதி யும், 11-ல் இரண்டாம் அதிபரும் புதனும் இணைந்தால் ஜோதிடப் புத்தகம் வெளியிட்டும் லாபம் பெறுவர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து பொருளீட்டக்கூடிய சுபகிரக தசை, 2, 4, 10, 11-க்கு உடையவர்கள் தசை நடந்தால் வீடு, வாகன யோகம் பெறுவர்.
ஜோதிடத்தால் வருமானம் பெறாத ஜோதிடர்கள்
ஜோதிடத்தில் நுணுக்கமான பல விஷயங்களை அசாதாரணமாகச் சொல்லும் திறமைபடைத்த ஞானிகள் பலர் ஜோதிடத்தின்மூலம் வருமானம் ஈட்டமுடியாமல் தவிப்பர். ஜோதிடப் பலன்களை சரியாகச் சொல்லமுடியும் என்கிற உறுதியில், வாடிக்கையாளரின் மனநிலை உணராமல் உள்ளது உள்ளபடி சொல்லிவிடுவர். பொதுவாக மக்கள் உண்மையை ரசிப்பதில்லை. "உன்னுடைய கர்மா, உன்னுடைய விதி. இதை நீ ஏற்றுக் கொள்' என்றால் மனம் நொந்துபோகிறார் கள். தவறு செய்தவர்கள்கூட செய்தேன் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த சூழ்நிலை, அந்த கிரகக் கோளாறால் தான் அதனைச் செய்ததாக எண்ணுகிறார் கள். மற்றபடி நான் நல்லவன், ஏமாளி என சொல்லிக்கொள்ளவே பெரும்பாலும் விரும்பு கிறார்கள். ஆதலால் வாடிக்கையாளர் மனநிலைக்கேற்ப பலன் சொன்னால்தான் பணம் ஈட்டமுடியும்.
வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால், ஜாதகத்தில் இருக்கும் குறை களையே அதிகம் சொல்வர். இதனால் எரிச்சலடையும் ஜாதகர் கள் அவரிடம் செல்வ தைத் தவிர்ப்பர். எல்லாருக்கும் தெரியும்- இந்த வாழ்வு நிலை யற்றது என்பது. சரி- தவறை உணர்ந்தே இருக்கி றார்கள். அவர்களிடம் உண்மையைப் பேசி நேர்மையாக நடப்பதே பரிகாரம் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நோய்க்கு மருந்தாக 48 நாட்கள் கடைப்பிடிக்கச் சொல்லும் தமிழ் மருத்துவ முறையைப் பின்பற்றமுடியாததால், நான்கு நாளில் குணமடையும் ஆங்கில மருத்துவத்தை நாடுகிறார்கள். பக்க விளைவுகள் ஒருபக்கம் இருக்கட்டும் என்கிற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
ஜோதிடருக்கு புதன் ஆட்சி, உச்சம் பெற்று மறைவிடங் களில் இருந்தால், திறமைக் கேற்ற புகழ், வருமானம் கிடைக்காது. பத்தாம் அதிபதி வக்ரம், அஸ்தமனமாகி, கேந்திர- திரிகோணங்களில் இருந்தாலும் வருமானம் குறைவுதான். வாக்கு ஸ்தானம் கெட்டவர்களால் ஜோதிடத் தொழிலில் முன்னேற்றம் அடையமுடியாது. கெட்ட தசாபுக்திகள் நடப்பவர்கள், ஏழரைச் சனி, பாதகநிலை கொண்ட ஜாதகர்களாக வந்து ஜோதிடருக் குத் தொல்லை தருவர்.
ஜோதிடர் சொல்லும் நல்ல விஷயங்கள் நடக்கும்போது கண்டுகொள்ளாமல், கெடுதல் நடக்கும்போது சிலர் கொடுமைப் படுத்துவார்கள். ஜோதிடருக்கு ஏழரைச் சனி, பாதக தசைகள் நடந்தால் ஜோதிடத் தொழிலால் அவமானப்படுவர். ஜோதிடர் ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னால் பெண் குழந்தை பிறக்கும். இப்படி, சொல்லும் பலன் ஒன்றாகவும், நடக்கும் பலன் ஒன்றாக வும் நடக்கும்.
சொல்லும் பரிகாரம் பலனில்லாமல் ஜோதிடரை வசை பாடுவர். இரண்டில் பாவ கிரகம் வலுத்து 6, 8, 12 தசைகள், கோட்சார பலமும் இல்லாமலிருந்தால், ஜோதிடரை ஜோதிடமே கோர்ட் படி ஏறவைக்கும்.
பலன் கேட்கும் வாடிக்கையாளர்கள் ஜோதிடம் பற்றிய விவரங்கள் நிறைய பொதுவெளியில், பத்திரிகை, தொலைக் காட்சி, வலைத்தளங்களில் எளிதாகக் கிடைப் பதால், இன்றைய ஜோதிட வாடிக்கை யாளர்கள் படித்த- பார்த்த விஷயங்களை வைத்துக்கொண்டு ஜாதகம் பார்க்கும்போது, தன் மேதாவித்தனத்தைக் காட்டுவதாக எண்ணி ஜோதிடர்களை வெறுப்படையச் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்களே சுயஜாதகத்தை கணித்துக்கொண்டு, பிறருக்கு ஜாதகம் சொல்லச் சென்றுவிடுவது நல்லது. ஞானம்கொண்ட ஜோதிடர்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போதே மனதிற்குள் அனைத்துக் கணக்குகளையும் கணித்து, நொடிப் பொழுதில் சொல்லி விடுவர். யூ டியூப் பார்த்து அரைகுறையாய் பொதுப் பலன்களைப் புரிந்து கொண்டு நச்சரிப்பதால், விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல் ஜாதகரின் ஆசைக்கேற்ப சொல்லி அனுப்பி விடுவர். ஜோதிடரின் மனநிலை நன்றாக இருந்தால்தான் உண்மையான பலன்களை யறிந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
பொதுவாக ஏழரைச்சனி, சனி பாதிப்பு கொண்டவர்கள் ஜோதிடர் சொல்வதைக் கேட்டு நடக்காமல், இஷ்டத்திற்கு செய்து விட்டு ஜோதிடத்தையும் ஜோதிடரையும் பழிப்பார்கள். ஜோதிடத்தையும்,ஜோதிட ரையும் நம்பி, கேட்டுத் தெரிந்துகொண்டு செயல்பட்டால், கெடுபலன்களிலிருந்து நிச்சயம் (தப்பிக்க விதி இருந்தால்) தப்பித்து விடலாம். ஜோதிடம் உன்னதக்கலை . அதனை நேர்மையாகவும் உண்மையாகவும் புரிந்து பயன்படுத்திக்கொண்டால் நன்மை பெறலாம்.
பரிகாரம்
யாரையும் ஏமாற்றவேண்டுமென எந்த ஜோதிடரும் ஜோதிடக் கலையை கற்று வருவதில்லை. நேர்மையாக உண்மையைச் சொல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கா மல், பேராசைக்காக போலி ஜோதிடர்களைத் தேடி பரிகாரம் செய்துவிட்டு, ஜோதிடத்தைப் பழிப்பதால் எந்த பலனும் இல்லை. அதனால் எந்த நஷ்டமும் ஜோதிடருக்கு ஏற்படப் போவதில்லை. ஜோதிட அறிவியலையும் அழிக்க முடியாது. நம் விதியை மாற்றுபவர் ஜோதிடரல்ல. விதியைச் சொல்பவர் மட்டுமே.
ஆதலால் ஜோதிடரையும், ஜோதிடத்தை யும் சோதிப்பதால் அவரவர் அறிவு வளர்ச்சி பெறுமெனில், ஜோதிடத்தின் அடிப்படை யைக் கற்றுக்கொண்டு, நிபுணர்களை ஆலோசித்து முக்கிய முடிவெடுத்தால், வாழ்க்கையில் வெற்றி பெற்று இன்பமாய் வாழலாம்.