ற்போதைய சூழ்நிலை யில் ஒருவர் பணத்தை சம்பாதிப்பதைவிட ஆரோக்கியத் துடன் இருப்பதே மிகப்பெரிய செல்வமாகும். பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் சம்பாதித்துவிடலாம். ஆனால் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அது மிகப்பெரிய இழப்பாகும். நோயற்ற வாழ்வென்பது உயரிய சொத்தாகும். ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தால் சிறப்பான ஆரோக்கியம் ஏற்படும்.

பொதுவாக ஆயுள்காரகன் சனி பலமாக இருப்பது, ஜென்ம லக்னத்திற்கு 6, 8-ஆம் பாவங்கள் சிறப்பாக இருப்பது நல்லது. பல்வேறு நோய்கள் இருந்தாலும், எந்த கிரக அமைப்பிருந்தால் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய் ஏற்படுகிறதென பார்ப்போம்.

ff

இன்றைய சூழ்நிலையில் நோய்களில் கொடியதாகக் கருதப்படுவது சர்க்கரை வியாதியாகும். நாம் உண்ணும் உணவு சரிவர செரிக்காததாலும், ஜீரணசக்தி நன்றாக இல்லாத காரணத்தாலும் உடலுக்கு மிகவும் தேவையான இன்சுலின், கணையம் சரிவர சுரக்காததால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

ஜோதிடக்கலை என்பது எல்லாருக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகிறது. ஒருவர் ஜாதகத்தில் கிரகநிலை சரிவர இல்லையென் றால் நோய்கள் பல உண்டாகின்றன. சர்க் கரை வியாதி பற்றி ஜோதிடரீதியாகப் பார்க் கும்போது, நவகிரகங்களில் சுக்கிரன் சர்க் கரை நோய்க்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.

நாம் உண்ணும் உணவு சரியாக செரிப்பதற்கு நமது ஜனன ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், 6-ஆம் பாவமும் முக்கிய பங்குவகிக்கின்றன. நமது வாழ்க்கை முறையில் இன்று மக்களில் பலருக்கு சர்க்கரை வியாதியானது சர்வசாதாரணமாக வந்துவிட்டது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்குக்கூட இன்று சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்று, அந்த கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் சர்க்கரை வியாதி ஒருவருக்கு எளிதில் ஏற்படுகிறது. குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதுபோல சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலமிழந்திருந்தால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகின்றன. ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டில் பாவிகள் அமையப்பெற்றா லும், 4-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்தாலும், 4-ஆம் வீட்டதிபதி பாவிகள் சேர்க்கை பெற்று உடன் சுக்கிரன் இருந்தா லும் சர்க்கரை வியாதி எளிதில் ஏற்படுகிறது.

காலபுருஷ தத்துவப்படி 4, 6-ஆம் வீடான கடகம், கன்னியில் பாவ கிரகங்கள் பலமிழந்து அமையப்பெற்றால், ஜீரணசக்தி பாதிக்கப்பட்டு அதன்மூலம் சர்க்கரை வியாதி உண்டாகும். அதுபோல நீர் ராசிகள் என வர்ணிக்கப்படும் கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் இரண்டுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் அமையப்பெற்றால் சர்க்கரை வியாதி எளிதில் உண்டாகிறது. குறிப்பாக சந்திரன், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று 4, 6-ஆம் பாவங்கள் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

சர்க்கரை நோயை நாம் கட்டுப் படுத்துவதற்கு ஜோதிடரீதியாக உள்ள வழிகளைப் பார்க்கும்போது, சாதகமற்ற கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும்போது எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 4, 6-ஆம் பாவங்களில் அமையும் பாவ கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் போதும், சுக்கிரனின் தசாபுக்தி நடைபெறும் போதும் சர்க்கரை வியாதியின் பாதிப்பு அதிகரிக்கிறது. குரு பார்வை 4, 6-ஆம் வீட்டிற்கிருந்தால், பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து விரைவில் குணமாக முடியும். அதுவே சனியின் பார்வை 4, 6-ஆம் வீட்டிற்கிருந்தால் பாதிப்புகள் தீவிரமாகின்றன.

நாம் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரை வியாதியானது எந்தக் காலத்திலும் பாதிக்காது. கட்டுப்பாட்டை மீறும்போதுதான் பாதிப்புகள் அதிகரிக் கின்றன. நமக்கு கெடுதியான தசாபுக்தி நடைபெறும்பொழுது, நாம் கட்டுப் பாடுடன் இருக்கமுடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்குரிய பரிகாரங்களைச் செய்வதன்மூலம் கெடுதிகள் விலகும். சுக்கிரனால் சர்க்கரை வியாதி அதிகம் ஏற்படுவதால், வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வதும், மகாலட்சுமிக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும் உத்தமம். அது போல பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பது கூட ஓரளவுக்கு கெடுதியைக் குறைக்கும்.

நீர் கிரகமான சந்திரனும் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதால் பராசக்தி, துர்க்கா தேவியை வழிபாடு செய்வது, லலிதா சகஸ்ர நாமத்தை ஜெபிப்பது, வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்வதன்மூலம் கெடுதியிலிருந்து விடுபட்டு ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழலாம்.

பொதுவாக கெடுதியான காலத்தில் தான் நோயானது நம்மை அதிகம் பாதிக்கிறது. ஜோதிடரீதியாக அந்த காலத்தை அறிந்து நாம் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்தவித நோயையும் கட்டுப் படுத்தலாம்.