நம் உடல் பஞ்சபூத சக்தி களால் ஆனது. நம் உடலிலுள்ள ஆறு சக்கரங்கள்தான் நம் உடலை இயக்குகின்றன. உடலிலுள்ள ஆதார சக்கரங்கள் ஒழுங்காக இயங்கும்போதுதான் ஞானமும், மேன்மையும், நல்லசிந்தனையும் பிறக்கும். நம் உடலுக்குத் தேவையான பஞ்சபூத சக்தி பெற நவரத்தினங்களி லுள்ள கதிர்கள் நமக்கு உதவி புரிகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், நவகிரகங்களே நடத்து கின்றன. அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள்தாம் இந்த நவரத்தினக்கற்கள். ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையை ரத்தினங்கள் பிரதிபலித்து, நற்பலன்களைக் கொடுக்கின்றன. மனிதனின் ஜாதகரீதியான தோஷங்களையும் உடல்ரீதியான குறைபாடுகளையும் நிவர்த்திசெய்து, நமக்கு எப்போதும் அதிர்ஷ் டத்தையும், வெற்றியை யும் வாரி வழங்கிக்கொண்டி ருப்பவை ரத்தினங்களேயாகும்.
ஞானிகளும், சித்தர்களும் ராசிகற்களைப் பயன்படுத்தி அதீதசக்தியைப் பெற்று தியானத்தில் ஈடுபட்டு தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்துள்ளனர். நாம் வெற்றிபெற வேண்டுமானால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய ராசிக் கற்களைப் பயன்படுத்தி நம் வாழ்விலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்து நல்ல மேன்மையயை அடையலாம். எந்தக் கல்லை அணிந்தாலும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியோர்களை பூஜித்து ஜாதகத்திற்கேற்ற நல்ல நாளில் அணிந்தால் மட்டுமே பலன்
நம் உடல் பஞ்சபூத சக்தி களால் ஆனது. நம் உடலிலுள்ள ஆறு சக்கரங்கள்தான் நம் உடலை இயக்குகின்றன. உடலிலுள்ள ஆதார சக்கரங்கள் ஒழுங்காக இயங்கும்போதுதான் ஞானமும், மேன்மையும், நல்லசிந்தனையும் பிறக்கும். நம் உடலுக்குத் தேவையான பஞ்சபூத சக்தி பெற நவரத்தினங்களி லுள்ள கதிர்கள் நமக்கு உதவி புரிகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், நவகிரகங்களே நடத்து கின்றன. அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள்தாம் இந்த நவரத்தினக்கற்கள். ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையை ரத்தினங்கள் பிரதிபலித்து, நற்பலன்களைக் கொடுக்கின்றன. மனிதனின் ஜாதகரீதியான தோஷங்களையும் உடல்ரீதியான குறைபாடுகளையும் நிவர்த்திசெய்து, நமக்கு எப்போதும் அதிர்ஷ் டத்தையும், வெற்றியை யும் வாரி வழங்கிக்கொண்டி ருப்பவை ரத்தினங்களேயாகும்.
ஞானிகளும், சித்தர்களும் ராசிகற்களைப் பயன்படுத்தி அதீதசக்தியைப் பெற்று தியானத்தில் ஈடுபட்டு தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்துள்ளனர். நாம் வெற்றிபெற வேண்டுமானால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய ராசிக் கற்களைப் பயன்படுத்தி நம் வாழ்விலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்து நல்ல மேன்மையயை அடையலாம். எந்தக் கல்லை அணிந்தாலும் குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியோர்களை பூஜித்து ஜாதகத்திற்கேற்ற நல்ல நாளில் அணிந்தால் மட்டுமே பலன் உண்டாகும்.
மூலாதாரம்
யோக சாத்திரங்களில் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரமே மூலாதாரமாகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் செயல்படுகிறது. மூலாதாரம் நான்கு இதழ்களையுடைய அடர் சிவப்புத் தாமரை மலராகவும், அதன் இதழ் களின் மையப்பகுதியில் மஞ்சள்நிற சதுரம் உள்ளதாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. சதுரத்தின் மத்தியில், படைக்கும் ஆற்றலின் சின்னமாக ஒரு தலைகீழ் சிவப்பு முக்கோணம் உள்ளது. முக்கோணத்தினுள் மனிதனுடைய ஆன்மாவாக சுயம்புலிங்கம் உள்ளது.
உறங்கும் நிலையிலுள்ள குண்டலினியை சித்தரிக்கும் வகையில் சிவந்த பாம்பு, மூன்றரை முறை தன்னுடைய வாலால் லிங்கத்தை சுற்றி வளைத்துள்ளது. நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் நிலைப்பெற்றுள்ளது. ஆண் உடலில் தண்டுவடதின் அடிப் பகுதியில், பிறப்புறுப்புக்கும், எருவாய்க்கும் இடையே அமைந்துள்ளது. பெண் உடலில் கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது. மூலாதரத்தின் இயக்கத் திற்கு பெரிதும் உதவிடும் உபரத்தினமாக விளங்குவது, "சிவப்பு கார்னீலியன்' எனப் படும் அடர்சிவப்புக் கல்லேயாகும்.
சிவப்பு கார்னீலியன்
இது ஒருவகை மதிப்புமிக்க கல் வகையாகும். பஞ்சபூதத் தத்துவத்தின்படி, நெருப்பைக் குறிக்கும். இது வெளிர் பழுப்பு முதல் அடர்ந்த சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும், அடர்சிவப்பே மிகவும் நல்லது. இந்தக் கற்கள் பவழம் போன்ற அமைப்பைக்கொண்டு, செந்நிற கிரகமான செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.
சிவப்பு கார்னீலியன் அணிவதால் உண்டாகும் பயன்கள் = கண்களின் பாதிப்புகள் நீங்கி கண்ணொளி பெறலாம்.
* குடல்புண் நீங்கும்.
* இதய பாதிப்பு விலகும்.
* உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
* தோல் நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
* மாதவிடாய்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் நோயிலிருந்து விடுபடலாம்.
*தடைகளையும், விபத்தையும் தவிர்க்கும்.
*சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும்.
*ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
*உடலில் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது.
*செவ்வாய் தோஷத்தை நீக்கும்.
*மனத்தளர்ச்சியை நீக்கி, உற்சாகத்தைத்தரும்.
*எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியினைப் பெறலாம்
நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் இந்த சிவப்புக்கல்லை அணியலாம்.
*
*தைரியம் கொடுத்து, படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
*உடலை வலிமையாக்கும்.
*எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களைச் வளரச்செய்யும்.
*நேர்வழியில் வெற்றியை நோக்கி எண்ணத்தைச் செலுத்தும்.
*முன்கோபம், பொறாமை, அதிக கோபம் போன்ற உணர்வு சார்ந்த தீய எண்ணங்களைப் போக்கும்
*குழந்தையின்மை, ஆண்மைகுறைவு போன்ற குறைபாடுகளை நீக்க பெரிதும் உதவும்.
*அடிமுதுகுத்தண்டு வலி, ரத்தத்தில் பிராணவாயு குறைதல் போன்ற குறைபாடுகளையும் நீக்க உதவும்.
*வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் சேருவதற்கு பெரிதும் உதவும்.
*ஜாதகத்தில் செவ்வாய் யோககாரகனாக இருந்தால் இந்தக் கல்லை அணிய நல்ல மாற்றங்கள் வரும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களும், ஜாதகத்தில் செவ்வாய் புக்தி- செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்களும், இந்த உபரத்தினத்தைப் பயன்படுத்தினால், காரியத்தடை அகன்று தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எண்கணிதப்படி 9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் இந்த உபரத்தினத்தை அணியலாம். அணியும்முன் செவ்வாய் பாதகாதிபதி, அஷ்டமாதிபதி மற்றும் எட்டாம் பாவம், ஆறாம் பாவம் தொடர்பில் இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும் இந்த உபரத்தினக் கற்களைத் தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்துகொள்வது நல்லது.
முற்றும்
செல்: 77080 20714
__________________
ராசிக்கல்லைத் தேர்வு செய்யும் முறை
* மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குப்பக்கம் வைரம் பதிக்கவேண்டும். பிறகு கடிகார சுற்றுப்படி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம், மரகதம் ஆகியவற்றை வரிசையாய்ப் பதிக்கவேண்டும்.
* பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணியக்கூடாது.
* மாணிக்கம், கோமேதகத்தை ஞாயிற்றுக்கிழமைகளிலும், முத்து, வைடூரியத்தை திங்கட்கிழமைகளிலும், பவழத்தை செவ்வாய்க்கிழமைகளிலும், மரகதத்தை புதன்கிழமைகளிலும், புஷ்பராகத்தை வியாழக்கிழமைகளிலும், வைரத்தை வெள்ளிக்கிழமைகளிலும், நீலக்கல்லை சனிக்கிழமைகளிலும் அணிவதால் பலன் இரட்டிப்பாகும்.
* கல்வித்துறை- கலைத்துறை- எழுத்துத் துறையில் உள்ளவர்கள் புஷ்பராகத்தையும் விவசாயம் சார்ந்துள்ளோர் வைரத்தையும் அணிந்து பலன்பெறலாம்.
* ஜோதிடர்கள் கோமேதகத்தை அணிவது நல்லது.
* கலைத்துறை மற்றும் கணிதத்துறையில் உள்ளவர்களுக்கு முத்து ஏற்றது.
* ஏஜென்ட், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபடுவோர், மரகதம் அணிந்தால் சிறப்பு உண்டாகும்.
* அரசுத்துறை, பொதுஜனத் தொடர்பில் உள்ளவர்கள், மாணிக்கத்தை அணிந்தால் அதிகாரம் கூடும்.
* கட்டடத்தொழில், மின்சாரத்துறை, காவல்துறை, இராணுவம் போன்றவற்றில் தொடர்புடையோருக்கு பவழம் நல்ல பலன்தரும்.
* நிலம் மற்றும் வீடு விற்பனை செய்பவர்களும், இரும்பு வியாபாரிகளும் நீலக்கல்லை அணிந்தால் தொழிலில் வளர்ச்சியுண்டாகும்.
* சட்டம், நீதிமன்றம், மருத்துவம், அச்சுக்கலை சம்பந்தபட்ட தொழிலில் உள்ளோர், வைடூரியத்தை அணிந்து புகழ்பெறலாம்.